கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான். அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார். அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார். கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.
உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன். உண்மையில் அன்றைய பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன் இருந்தாலும் எனக்கொரு சந்தேகம் இருந்தது. இதை ஊறவைத்து காத்திருக்க வேண்டுமே சித்தர்கள் அப்படி காத்திருப்பவர்களா? அல்லது அவர்களுக்காக வேறு யாராவது பதம் செய்து கொடுப்பார்களா? என்பது தான் எனது அடுத்த கேள்வி.
அந்த கேள்விக்கான பதிலை வேறொருவர் எனக்கு தீர்த்து வைத்தார் ஆவாரம் பூ இருக்கிறது அல்லவா! அந்த ஆவாரம்பூவையும் மூலிகை பரிபாஷையில் கறுப்பு என்று சொல்லபடுகிற ஒருவித போதை தருகின்ற இலையையும் ஒன்றாக சேர்த்து கசக்கி ஜர்தா புகையிலையை எப்படி உதடுகளுக்கு அடியில் வைத்துக் கொள்வார்களோ அப்படி இந்த பொருளை வைத்துக்கொண்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கூட பசிதாகம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொன்னார். ஆனால் இந்த கலவையில் அனுபவம் இல்லாமல் செய்தால் மூளை பாதிப்பு போன்ற பின்விளைவுகளும் ஏற்படும் என்று எச்சரிக்கவும் செய்தார். ஒருவர் எச்சரித்த பிறகு அதை பரிசோதித்து பார்ப்பதற்கு நான் என்ன பித்தனா?
ReplyDeleteசிறந்த பதிவு