Breaking News
Loading...
Thursday, January 28, 2016

தலைமுறை

Thursday, January 28, 2016


தனி மனிதனாக இருந்து திருமணபந்தம் காரணமாக நாம் என்றாகின்றோம்.

 நமது தாய் தந்தையை நம்முன்னோர்கள் வரிசையில் இரண்டாம் தலைமுறையாக கருதப் படுகின்றது. உறவுகள் இரத்த சம்பந்தமாகவும், புது உறவு (திருமண பந்தம் காரணமாகவும் ) உருவாகின்றது,

நமக்கு முந்தைய உறவுமுறைகள் வரிசையில் தலைமுறை என்றும் பரம்பரை { ஏழாம் தலைமுறையினரின் பரம்பரை நாம் } என்றும் வரிசைப் படுத்தப் படுகின்றோம்.

திருமண பந்தத்தின் போதும், நீத்தார் இறுதிச் சடங்குகளின் போதும் நாம் நமது தலைமுறையையும், பரம்பரையையும் நினைவுகூர்கின்றோம்.

பெருமைப் பட்ட நிகழ்வுகளையும், சிறுமைப்பட்ட நிகழ்வுகளையும் ஆதங்க சொற்களால் பேசி நினைவு கூர்வதனை ஒவ்வொரு சமுதாய மக்களிடத்திலேயும் இன்றளவும் நிலவிவருகின்றது.

இனி ஏழு தலைமுறை என்று சொல்கின்றோமே...
ஏழுதலை முறைக்கும் பெயர் இருக்கிறது... இவ்வாறு வைக்கப்பட்ட பெயர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்... தெரியாதவர்களுக்காக....

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 420 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..



1 comments:

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer