ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் டாக்டர் ஒருவர் வந்தார்.
“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வி கேட்டார்.
“ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவளிடம் பேசினேன்” என்று பரமஹம்சர் பதிலளித்தார்.
“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்வார் என ஆவலோடு காத்திருந்தனர்.
அப்போது சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று வினவினார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.
“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”
“அப்படியானால் டாக்டர் தொழில் நன்றாகத் தெரியும் தானே?”
“நன்றாகத் தெரியும்”
“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”
“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”
“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா?
நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்றார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.
எல்லோரும் வியந்து மகிழ்ந்தனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான்,
''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.
அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''
குரு சிரித்துக் கொண்டே,''அது அவரவர் விருப்பம்,''என்றார்.
பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.
ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.
சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,
''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!