Breaking News
Loading...
Thursday, January 14, 2016

துணி காயவைக்கும் அலமாரி

Thursday, January 14, 2016
1364007862051,0

L .G அறிமுகபடுத்தியுள்ள துணி காயவைக்கும் அலமாரி……..!

வழக்கமாக நாம் துணிகளை துவைத்து காயவைத்து  அயர்ன் செய்த பின்னரே அலமாரியில் துணிகளை  மடித்து வைப்போம்.


 ஆனால் L .G அறிமுகபடுத்தியுள்ள இயந்திரம் சற்றே வித்தியாசமானது. 

ஏனெனில்  இந்த அலமாரியே உங்களது துணிகளை துவைத்து தருகிறது.

இதில் உங்களது துணிகளை  பழங்கால நீராவி முறையின்  துவைத்து தருகிறது.

கூடவே துணிகளின் துறுநாற்றங்களையும் நீக்கும் வகையில் நீராவிகள் தெளிக்கப்படுகின்றன.

மற்றும் அலமாரியின் தொடர் அசைவினால்  துணிகளின் சுருக்கங்களை  எளிதில் நீக்கும் வகையில் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வெப்ப குழாயின் உதவியுடன் துணிகளின் ஈரம் நீக்கப்பட்டு காற்றினை  மறுசுழற்சி செய்து நல்ல நறுமனத்தினை தருகிறது. 

அனைத்து விதமான துணிகளுக்கும் இது  இணக்கமானது. மேலும் வடிநீர் சேமிக்க கொள்கலன்களும் தரபட்டுள்ளன.  எந்தவித வேதிப் பொருள்களும் சேர்க்கப்படவில்லை.

              இது  சூடான நீராவி தெளிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  செயல்படுகிறது.


மேலும்  துவைப்பிகள் மற்றும் டிரையர்களையும் பயன்படுத்தி உள்ளது. 

இதன்  மூலம் துணிகளில் தங்கியிருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகளை  99.9 சதவிகிதம்  நீக்கித் தருகிறது. 

துணிதுவைப்பவர்கள்  சாதரணமாக  பல வேதிப்  பொருள்களை சேர்த்து துணியினை விரைவில்  மட்க்கும்  நிலைக்கு தள்ளி விடுவர்.  

துவைப்பதேன்று சொன்னாலே  நீர் மற்றும் டிடர்ஜென்ட்டுகள்தான் நம் ஞாபகத்திற்கு வரும் இவையிரண்டையும்  பயன்படுத்தாமல்  துணிகளை வெளுக்கும் L .G யின் முறை மிகவும் சிறந்ததே!!  

இதனால்  துவைப்பதற்காக  வீணடிக்கப்டும் நீரின் அளவு கணிசமாக குறைக்கப்படலாம்.

 உங்களது துணியினை தானாகாவே உலரவைத்து நறுமணத்தினை  பரப்பும் இந்த அலமாரியின் விலை $2,000 ஆகும்.

 இந்தியாவில் இதுபோன்ற சாதனங்கள் மலிவான விலைக்கு வரும்போது மட்டுமே  வாங்கப்படும் . 

மேலும் மிகப்பெரிய ஹோட்டல்கள் மற்றும்  விமான வளாகங்கள் அல்லது அலுவலகங்கள் போன்றவற்றில் இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  வளர்ந்து கொண்டுவரும் இந்த நவீன  யுகத்தில் துணிகளை துவைத்து காயவைத்து மடித்து வைக்க  நேரமில்லாதவர்களுக்கு  இது நேரத்தை மிச்சபடுத்தும் ஒரு புரட்சிகரமான சாதனமாக அமையும்.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer