Breaking News
Loading...
Wednesday, January 13, 2016

உப்பு ....உப்பு ....

Wednesday, January 13, 2016
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். 

பல பேர் உணவில் கொஞ்சம் கூட உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல் உப்பு சப்பே இல்லாத உணவை கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு வருகிறீர்கள். பல வருடமாக உப்பு இல்லாமல் சாப்பிடுகிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? 

குணமாகவில்லை என்றால் தேவை இல்லாமல் ஏன் அதைக் கடைபிடிக்க வேண்டும்? 

சரி. அப்படி எத்தனை நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குணமாகும் என்று யாராவது கூற முடியுமா? உணவில் உப்பு சேர்த்தால்

இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது என்று பார்ப்போம்.


உப்பு நாக்கில் பட்டவுடன் நீர் கரண்ட்டாக மாறி சிறுநீரகத்தை வேலை செய்ய வைக்கும். 


சிறுநீரகம் கெட்டியாகக் கழிவுப் பொருளுடன் சாக்கடை போல் இருக்கும் இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை மூத்திரப்பை வழியாக மூத்திரமாக வெளியேற்றும். 

அப்பொழுது இரத்தம் நீர்த்துப் போகும். இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றினால் இரத்தம் நீர்த்து போகும். 

எனவே இருதயம் சற்று வேகமாக இரத்தத்தை பம்ப் செய்யும். எனவே உப்பு சாப்பிட்டால் தான் இரத்தம் சுத்தமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இப்படி இரத்தம் சுத்தம் அடையும் பொழுது நீர்த்து போகும் பொழுது இரத்தத்தில் BP யின் அளவு அதிகரிப்பது நோய் அல்ல. 

உடல் குணமாகிறது என்பதின் அடையாளம். 

இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது?

BP க்கு உப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்களே 


இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் அவசர கால சிகிச்சைக்கு நீங்கள் மருத்துவமனைக்குச் சென்றால் உங்களுக்கு ஒரு வெள்ளை கலர் டப்பா மாட்டப்படும். 

நாம் எந்த டப்பாவாக இருந்தாலும் குளுகோஸ் டப்பா என்று பெயர் வைத்து விடுகிறோம். 

ஆனால் சில நேரங்களில் சோடியம் குளோரைடு என்ற டப்பாவும் மாட்டப்படும். 

சோடியம் குளோரைடு என்றால் உப்பு என்று பொருள். 

உப்பு சாப்பிட்டால் BP அதிகமாகி விடும் என்று கூறும் மருத்துவர்கள் அவசர காலத்தில் ஐந்து பாட்டில், பத்துப் பாட்டில் சோடியம் குளோரைடு பாட்டில் என்ற டப்பாக்களை மாட்டுகிறார்களே 

அப்பொழுது மட்டும் உப்பு உயிரைக் காப்பாற்றுமா? 

சிலபேர் உணவில் உப்பே சேர்த்துக் கொள்ளாமல் குறை (LOW) BP அல்லது அதிக (HIGH) BP யில் மயக்கம் அடைந்தவுடன் மருத்துவமனைக்கு செல்வார்கள். 

அங்கே பத்துப் பாட்டில் சோடியம் குளோரைடு என்ற டப்பாவைச் செலுத்தி உங்களை உயிரைக் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்புவார்கள். 

நீங்கள் பெருமையாக நான் மருத்துவமனை சென்றேன், 

பத்து பாட்டில் மாட்டினார்கள் இப்பொழுது பரவாயில்லை என்று கூறுவீர்கள். 

உங்களுக்கு இரத்தத்தில் உப்பு சேர்த்து அனுப்பியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைச் சரியான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. 

உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பையா? உப்பு இல்லாத உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சோடியம் குளோரைடு என்ற உப்பு டப்பாவை மாட்டியிருப்பார்கள். 


அப்பொழுது நோயாளியிடம் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே உப்பு இரத்தத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். 

இரண்டு உப்பும் ஒன்று சேர்ந்தால்  அதிகமாகி விடும் என்று கூறினார்கள். 

இப்படி கூறப்பட்ட ஒரு தகவலை நாம் மருத்துமனையிலிருந்து வெளியே வந்த பிறகும் பயன்படுத்துவது ஒரு தப்பான பழக்கமாகும். 

எனவே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உப்பைக் கேட்கிறதோ அதைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள். 

கண்டிப்பாக உங்களுக்கு BP மற்றும் பயம் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும். 

எனவே உப்புக்கும் நீர் பிராணனுக்கும் சிறுநீரகத்திற்கும் மூத்திரப்பைக்கும் காதுக்கும் பயத்துக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். 


இப்படி சம்பந்தம் இருக்கிறது என்று தெரியாத மருத்துவரிடம் செல்லும்போது அந்த குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராய்ச்சி செய்து ஆப்பரேசன் செய்து மருந்து மாத்திரை கொடுப்பதால் தான் எந்த உறுப்புகளிலும் எந்த நோயும் பல வருடங்களாகக் குணப்படுத்தாமல் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

Healer's Baskar
மேலும் விவரங்களுக்கு: +91 9944221007
www.anatomictherapy.org

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer