வல்லான் வகுத்த நெறிமுறைக்கு மாறாக அளவுகோள் குறைந்தும்,
அளவு கோலுக்கு மிஞ்சியும், வாழ்க்கை வழி நடந்து உயிர்கள் அவரவர், தம் நிலைபாட்டிற்கு ஏற்றவாரே இகவாழ்வு மற்றும் பரம்நிலை பெற்று வாழ்கின்றனர்.
இவ்வுயிர்களின் பல பேத நிலைக்கு ஏற்றவாரே கருத்துணர்வுகளும் பேதப்படுகிறது. இதனால் இன்ப, துன்பங்கள் மாறி, மாறி உயிர்கள் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
பசி, பிணி, தாகம் மற்றும் மரண நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த உலகின் அவல நிலையைக் கண்டு மனம் நொந்து, தான் பெற்ற இறை பேரின்ப பெருஞ்சுகத்தினைப் போல், இவ்வையகத்துயிர்களெல்லாம், இன்புற்று வாழ்தல் எங்ஙனமே என வேண்டுகிறார்.
இந்த தேகம் இயற்கை, பஞ்ச பூதங்களால் உண்டாக்கி, முறையே இயக்குவது யார்? என்ற வினாவிற்கு உதாரணங்கள் பல தந்து, நம்மை சிந்திக்க வைத்துள்ளார்.ஹோமியோபதியின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேனும், வான்காந்தம் அதன் ஒரு பகுதி, ஜீவ காந்தமாற்றமே இந்த உடம்பு (ஜோதி பரம், ஜோதி அகம்) என்கிறார்.
பொதுவாக ஒரு மருத்துவன் எப்படி செயல்பட வேண்டுமென்பதை வள்ளுவன், தன் குறள் நெறிக்கு ஏற்ப பிணிக்கு தக்க (நோய்) எத்தகையது என்பதை அறிந்து அத்தகைய நோய்க்கு, தகுந்த மருந்தினை உடல் தகுதி (தாங்கும்) நிலைக்கேற்ப கொடுத்து நோயாளியின் நோயை போக்க வழிவகுத்து காட்டியுள்ளார்.
ஹோமியோபதி மருத்துவத்தின் தனிச் சிறப்பான ஜீவகாந்தசக்தி, வான் காந்த சக்தி நோய் உண்டாக்கும் அடிப்படை சக்தி எது? என்பதையும், அவைகளின் உட்பிரிவு விளக்கங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
ஹோமியோவில் சத்தியத்தை காக்கும் மருத்துவராகவே இருக்க வேண்டும் என்றும், அவரை போற்றப்பட்டு வருவதையும் சுட்டி காட்டியுள்ளார். ஆங்கில மருத்துவம் போல் ஹோமியோவிற்கு பல பரிசோதனைகள், பொருந்தாதெனவும், இதற்கு கருவிகளின் துணை அவ்வளவு அவசியமில்லை ஏன் என்பதையும், அதன் தனி சிறப்பினை விளக்குகிறார்.
ஹோமியோவில் ஜீவகாந்த தன்மையை அதாவது (மியாசம்) பாவப்பதிவை, போக்குதலுக்குண்டான சிறப்புணர்ந்து, சிகிச்சை செய்வது எப்படி? அதை கையாளுதல் எப்படி என்ற தன்மையை புலப்படுத்துகிறார். ஆங்கில மருத்துவமென்பது தற்சாந்தி அப்போதைக்கு மட்டுn;ம மருத்துவம் என்று ஆங்கில மருத்துவ வல்லுநர் M.D. அமெரிக்கா.
ஹோமியோபதி மருத்துவர் ஜேம்ஸ் டைலர் கெண்ட் தனது ஆராய்ச்சி நூலில் ஆங்கில மருத்துவத்தின் இயல்பினையும், ஹோமியோவின் தனி சிறப்பினையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில மருத்துவ இயல்புகளை இதுவரை நூலாசிரியர் நமக்கு நினைவு கூறுகிறார். ஜீவகாந்த தூய்மை உடையவர்களாக இயேசு, புத்தர், நபிகள் நாயகம் மற்றும் வள்ளல் பெருமான் இவர்களின் ஜீவகாந்த தூய்மைக்கு முழு எடுத்துகாட்டாக விளக்கியுள்ளார்.
நமது உடலில் பல உறுப்புகள் உள்ளன.
ஒவ்வொரு உறுப்பிலும் திசுக்கள் என்ற அணு உடலில் உள்ள ஒவ்வாரு உறுப்புகளையும் கட்டமைத்துக் கொண்டு, அதற்கென ஒரு பணியை செய்கிறது. எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து இயங்குகிறது.
இவைகள் அனைத்தையும் இயக்குவது ஜீவகாந்தம் ஆகும்.
ஜீவகாந்தம், வான்காந்தம் என்றால் என்ன?
தற்போது நாம் ஹோமியோபதி மருத்துவம் செய்து கொள்வதற்கு தேவையான உடல்கூறு சாஸ்திரத்தை மட்டும் தெரிந்துக் கொண்டால் போதும்.
ஏன் இம் மருத்துவம் செய்து கொள்வதற்கு ஒரளவு மட்டும் போதுமென்றால், அதாவது இம் மருத்துவம் செய்வதற்கு SPRITUVAL FORCE என்ற ஜீவகாந்த சக்தியைப் பற்றியும், VITAL FORCE என்ற வான் காந்தம் சக்தியை பற்றியும், MIASMATIC VARATIES என்ற நோய் உண்டாக்கும் அடிப்படை, அதன் பிரிவுகளை பற்றியும், அதை போக்கவல்ல 1. ஹோமியோபதி மெடிசன் போர்ஸ் 2. மருந்தின் சக்தியையும் பற்றி ஓரளவு முழுமையை பற்றி தெரிந்துக் கொள்ள போகிறோம்.
ஆகவே எல்லாமே இதனுள் அடக்கம். அப்படியென்றால் உடலமைப்பை பற்றி அறிந்துக் கொள்ள தேவையில்லையா? தேவை தான். அது ஓரளவு போதும்.
அதே போல் உடல் மாறி விட்ட தன்மை PATHOLOGY பற்றி தெரிந்துக் கொள்ள தேவையில்லையா? தேவை தான்.
அந்த உறுப்பு மாற்றமடைய என்ன காரணம்? என்பதைப் பற்றி தெளிவான, அடிப்படையான, உண்மையான காரணம் என்ன? என்பதையும், நலப்படுத்துவது எப்படி? என்பதையும் அறிய வேண்டும்.
முன்பு கூறப்பட்டவை நான்கு வித சக்திகள் தான் உயிரினத்துக்கு அடிப்படையானதாக இருக்கிறது. வெளி தோற்றம் தான் இந்த உடம்பு.
இதைப் பற்றி திருமூலர் கூறும் போதும் பாசம் (அழுக்கு), ஒளவையார் கூறும் போது பராமாய சக்தியினுள், பஞ்சமா பூதம் தரமாறி தோன்றலே பிறப்பு.
அதே போல் வான்காந்த சக்தியில் இருந்து நுண் பிதுங்கி, எழுந்து பஞ்ச பூதங்களின் துணையோடு, உடலை பெற்ற ஜீவகாந்தம் தான் உடம்பாக அது பிறந்தது என்கிறார்.
ஆதி சங்கரர் கூறும் போது 1. அத்வைதம்
2. துவைதம்
இது மறுவி உடலாக மாறி கண்களுக்கு தெரிகின்ற பருபொருளின் இயக்கம் தான் அவர் உடம்பு என்கிறார். இதை தான் விசுஸ்டாத் அத்வைதம் என்கிறார்.
ஒரு சித்தர் பாடுகிறார். இந்த உடலை பற்றி சொல்லும் போது,
காயமே இது பொய்யடா,
வெறும் காத்தடைத்த பையடா.
மாயனாராம் குயவன் செய்த
மண்பாண்ட ஓடடா என்று பாடுகிறார். இதன் உட்பொருளை பார்ப்போம்.
உடல் சதை, எலும்பு , நரம்பு கெட்டி பொருளாலும், இரத்தம், பித்தம், விந்து, நாதம், மாதவிலக்கு, சிறுநீர், எச்சில், போன்ற நீர்ப் பொருளாலும் 98.4 டிகிரி செல்சியஸ் என்ற விகிதாசார முறையாக வெப்பம் நீர் பொருள் என்றும், நிமிடத்திற்க்கு 16 முறை சுவாசம் என்ற காற்று பொருளாலும் உருவானது தான் இந்த உடம்பு.
எல்லா பொருள்களை விட இந்த உடலுக்கு காற்று தான் அதிகம் தேவைப்படுகிறது அல்லவா?
அவர் மாயனார் என்ற குயவன் என்று கூறுவது வான் காந்தம்.
அதனுடைய ஒரு பகுதி ஜுவகாந்தம்.
இந்த ஜூவகாந்தம் தான் பஞ்சபூத உடலை இயக்குகிறது என்கிறார்.
மண்பாண்ட ஓடடா என்று குறிப்பிடுவது, ஜீவகாந்தத்தோடு மற்ற பஞ்ச பூதங்களின் தொகுப்பு தான் இந்த உடலை உருவாக்கி செயல் படுத்துகிறது என்று பொருள் படும். அதை தான் ஓடு என்கிறார்.
வேதாத்திரி, மகரிஷி அவர்கள் கூறும் போது CAUSAL BODY, ASTRAL BODY, HUMAN PHYSICAL BODY,என்கிறார். அதாவது, இந்த உடல் தோன்றுவதற்க்கு காரணம் இந்த வான் காந்தமாகும். அது உடலை எல்லை கட்டி எடுக்கும் போது அதற்கு உதவியாக இருப்பது கிரகங்களின் சக்தி அதை ஜூவகாந்தம் என்றும்.
அதற்கு தேவையான பாத்திரம் தான் கட்டமைக்கப்பட்ட தேகம் (HUMAN PHYSIAL BODY) என்கிறார். Dr.சாமுவெல் ஹானிமேன் அவர்களும் Vital force Spritual Force change the Body என்கிறார்.
அதாவது வான்காந்தம், அதனுள் இருந்து ஒரு பகுதி ஜீவகாந்தம். இவைகளின் மாற்றம் தான் இந்த உடம்பு என்கிறார். மற்றும் ஓரு சித்தர் பாடுகிறார்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி,
அவன்,நாளாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தான் ஒரு தோண்டி,
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி போட்டுடைத்தாண்டி. என்கிறார்.
நந்தவனம் என்பது பிரபஞ்சம் (அ) பூமி. தனக்கு உடல் வேண்டும் என்று விரும்பியது ஜீவகாந்தத்திலிருந்த கருமையம். அதற்கு அனுமதியும், அதை பாதுகாக்க உதவி செய்ய வந்ததும், உடலை எடுக்க அனுமதி தந்ததும் வான்காந்தம் என்ற (குயவன்). தோண்டி என்பது நமது உடம்பு. நான்கு ஆறு என்பது, 10 மாத கர்பத்தில் இருக்கும் போது உயிர் என்ற ஜீவகாந்தம், உடலை வேண்டும் என்று வான்காந்தத்தை வேண்டியது (குயவன்).
இப்போது கருவில் இருக்கும், ஜீவகாந்தத்தின் வேண்டுதலுக்கு ஏற்ப ஒரு உடலை தந்தது, வான்காந்தத்தின் மூலம் தான் உடலை எடுத்த ஜீவகாந்தம் என்ற உயிர் என்ன செய்ததது?
ஆடாத ஆட்டம் என்கிறார்
. அது தான் மனம் போன போக்கில் செய்யும் குற்றங்களும் பாவங்களும் ஆகும்.
ஜீவகாந்தத்தின் மனவேகம் தாங்க முடியாமல் மரணம்தான் - போட்டுடைத்தாண்டி என்கிறார்.
மற்றொரு சித்தர், இதே பதத்தில் கூறுகிறார்.
நட்ட கல்லின் தலையின் மீது 4 புஷ்பம், சாத்தியே, அதை சுற்றி, சுற்றி வந்து நீ, முணுமுணுப்பதேனடா, நட்ட கல்லும், பேசுமோ. நாதன் உன்னுள், இருக்கையில் என்கிறார்.
வெளியில், உருவத்தில் தெய்வமில்லை. உன்னுள், உள்ளே (ஜீவகாந்தம்)அதை பாதுகாப்பது, வான்காந்த மென்ற தெய்வ சக்தியாகும் என்று பாடுகிறார்.
வேதாத்திரி மகரிஷியும், சுத்தவெளி என்ற வான்காந்த சக்தி, பிதுங்கி நுண் என்ற விண் ஆனது என்கிறார் ஜீவகாந்தம் (உயிர்)இதே சக்தியை. வள்ளலாரும், ஓடினேன், ஓடினேன். தேடினேன், கடவுளை கோவிலில் கண்டேன்.ஆனால் அது கற்சிலை.
துறவிகள் கூட்டத்தை நாடினேன். அவர்கள் கூறியதை கேட்டு மீண்டும் குறிப்பிட்ட கோவிலுக்கே ஓடினேன். மீண்டும் கோவிலுக்குள் நான் கண்டது, பொற்சிலை, உலோக சிலை தான், கடைசியில்தான் ஜோதி பரம் என்றார்,
ஜோதி என்பது வெளியிலிருக்கும் வான்காந்தம்தான்
ஜோதி அகம் - என்பது உயிருக்குள் இருக்கும்
ஜீவகாந்தம் என்று பாடி விட்டார்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!