நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற
இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த
தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக
மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும்.
இது நம் குடலில்
அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப்
குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும்
கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர
வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக
நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட
பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில்
மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கலாமா?
நம் வாழ்வில் அன்றாடம் குடிக்கும் நீரை சரியான அளிவில் குடிக்காவிட்டால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். வயதிற்கு தாண்டிய வேகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும், இது வயதான தோற்றத்தை அளிக்கும்.
நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால். தசையின் வலிமை குறையும். ஏனெனில் நம் உடலில் இருக்கும் தசையில் பெரும் பங்கு நீருடையது. எனவே, நீங்கள் தினமும் நீர் சரியான அளவு பருக வேண்டியது அவசியம். மூட்டு வலி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் பருகி வருவதால் வலியை குறைக்க முடியும். ஏனெனில் உங்கள் உடம்பில் உள்ள முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றில் 80% சதவீதம் நீரின் பங்கு இருக்கிறது.
சரியான அளவு நீங்கள் தினமும் நீர் பருகாமல் இருந்தால் கண் சிவந்தல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் வலுவிழக்கும். இதனால் உடல் சோர்வு மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கலாமா?
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது
.
ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும். நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்து.. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.
இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும். உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும்.
* காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
* மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.
* இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.
* முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!