Breaking News
Loading...
Wednesday, January 13, 2016

ஜோதிடத்தில் பொங்கல் பண்டிகை

Wednesday, January 13, 2016
ஜோதிடத்தில் பொங்கல் பண்டிகை 
================================== 
Image result for pongal greetings in tamil
பொதுவாக சூரியன் உச்சி பொழுதில் திக்பலம் பெறுகிறார். ஆதாவது லக்னத்துக்கு 10 பாவம் "உச்சி வேலையாகும்". கால புருஷ தத்துவ படி லக்னத்தின் 10 பாவம் மகரமாகும். துலாம் வீட்டில் நீசம் பெறும் சூரியன், தனது முழு நீச்ச நிலையில் இருந்து முழுவதும் விடுபட்டு திக்பலம் பெறும் வீடாக "மகரம்" திகழ்கிறது. எனவேதான் இந்த நிகழ்வை மகர சங்கராந்தி என்று புகழ்கின்றனர். 10 பாவத்தில் இருக்கும் சூரியன் தனது 7 பார்வையால் 4 பாவத்தை பார்ப்பார். நாலாம் பாவம் என்பது ஒருவரின் அசையும் (கால்நடைகளை) மற்றும் அசையா சொத்துகளை (காணிநிலங்கள்) குறிக்கும். காணி நிலங்களையும் அங்கு உழைக்கும் உழவர்களையும் போற்றும் விதமாக பொங்கல் அமைகிறது, பொங்கல் அன்று நடக்கும் சூரியன் 10 பாவத்தில் (ஜீவன பாவத்தில்) திக்பலம் பெறுவதை குறிக்கும் விதமாக பொங்கல் இருக்கிறது, 

மகரத்தில் முதல் மூன்று நட்சத்திர பாதங்கள், சூரியன் அதிபதியாக வரும் "உத்திராடநட்சத்திரமாகும்". அதை கொண்டாடும் விதமாக முதல் நாள், சூரியன் முன்னிலையில் சூரிய பொங்கல் (10 பாவம்) படைக்கபடுகிறது. இரண்டாம் நாள் மாட்டு (4 பாவம்) பொங்கலும், மூன்றாம் நாள் உழவர் (4 பாவம்) திருநாளும் அனுசரிக்கபடுகிறது.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer