இளைஞன் ஒருவனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.
கல்யாண முயற்சியும் இழுபறியாகவே நீண்டது.
வாழ்க்கை போராட்டமாக இருந்தது.
ஒரு ஞானியைச் சந்தித்து முறையிட்டான்.
ஞானி அவனிடம்,""அதோ! அங்கிருக்கும் மரத்திற்கு தண்ணீர் ஊற்று'' என்றார். அவனும் சரியென்று அதை ஆர்வமுடன் செய்தான்
.
.
""இந்த குப்பை கூளத்தைச் சுத்தமாக்கு'' மவுனமாக வேலையில் ஈடுபட்டான்.
""அந்த வேலியைச் சரியாகக் கட்டு'' என அடுத்தடுத்து வேலைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஆத்திரம் முட்டிக் கொண்டு வந்தது.
இருந்தாலும், பொறுமை காத்தான்.
மதியநேரம் வந்தது.
அவர் கொடுத்த உணவை சாப்பிட்டான்.
மீண்டும் வேலை தொடர்ந்தது. பொழுது சாய்ந்து விட்டது.
இரவு உணவை முடித்து விட்டு, களைப்பின் மிகுதியால் தூங்கி விட்டான்.
காலை விடிந்தது. கீழ் வானில் சூரியன் புறப்பட்டது.
இளைஞன் கேட்டான்.
""குருவே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றான்.
ஞானி புன்சிரிப்புடன்,"" பயனுள்ள வேலை ஏதாவது ஒன்றைச் செய்தபடி இரு!
பிடித்தது, பிடிக்காதது என்று பார்க்காதே!
உழைக்க வேண்டிய வாலிப வயதில் ஒரு மனிதன் சும்மா இருக்கலாமா?
மனம் ஒரு குரங்கு!
அதை அடக்க உழைப்பில் ஈடுபடுவது தான் ஒரே வழி,'' என்றார்.
இளைஞன் தெளிந்த மனதுடன் புறப்பட்டான்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!