Breaking News
Loading...
Sunday, January 31, 2016

நல்லதே நடக்கும்

Sunday, January 31, 2016
நல்லதே  நடக்கும்

அன்பு செய்யும் மனிதம் வேண்டும்
அறிவுசார் நட்பு வேண்டும்
ஆதிகால இயற்கை வேண்டும்
ஆபத்தில்லா உணவும் வேண்டும்
இன்பம் துன்பம் கலந்து வேண்டும்
இறைவனை குறை கூறாத பகுத்தறிவு வேண்டும்
ஈந்து வாழும் எண்ணம் வேண்டும்
உற்றார் உறவினர் உண்மையாக வேண்டும்
உகந்த நட்புடன் உரையாட வேண்டும்
ஊழல் இல்லா அரசியல் வேண்டும்
ஊனம் இல்லா மனதும் வேண்டும்
எல்லோருக்கும் வீடு வேண்டும்
எளியோரையும் மதிக்க வேண்டும்
ஏரும் ஆறும் ஊருக்கு வேண்டும்
ஏமாற்றும் எண்ணம் ஏமாற வேண்டும்
ஐந்து வயதில் வளைக்க வேண்டும்
ஐம்பது வயதில் வளைய வேண்டும்
ஒழுக்கத்தோடு கல்வி வேண்டும்
ஓதுவோர்க்கு மரியாதை வேண்டும்...                      

வாழ்க  வளமுடன்

1 comments:

  1. ஆத்திச்சூடியில் அறிவுரை அருமை நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer