1 முதல் 100 வரை
(1,2) The Soul Mission of the Physician is to Cure Rapidly, Gently, Permanently.ஒவ்வொரு மருந்திலும் என்னென்ன கோளாறுகளை நீக்கும் சக்தி இருக்கிறது
நோய் நொடி நீக்கலே வைத்தியரின் கடமை;-
(1) ஒரு உண்மையான ஹோமியோபதி மருத்துவரின் கடமையாதெனில் நோயில் துன்பப்படுகின்ற உயிர் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் எதையும் எதிர்பாராமல் தியாகத்தோடு அணுகி அவரது நோயை விரைவாகவும், மிருதுவாகவும் முற்றிலும் குணப்படுத்த வேண்டும்.
உண்மை சிகிச்சையின் சிறப்புத்தன்மை :
(2). நோயற்ற நிலை விரைவில் ஏற்பட வேண்டும். நோயாளிக்கு எவ்வகையான துன்பம் சிறிதும் நேரக் கூடாது. நோய் மீண்டும் திரும்பி வராமல் வேருடன் வீழ்த்தப்பட வேண்டும். முற்றிலும் நம்பத் தகுந்த எள்ளளவும் தீங்கையும் உண்டாக்காத எளிதிலே புரிந்து கொள்ளக்கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டதாய் அது இருக்க வேண்டும்.
முற்றும் அறிந்தவர் உண்மை வைத்தியர்.
(3). ஒவ்வொரு நோயிலும் என்னென்ன கோளாறுகளுக்குச் சிகிச்சை செய்ய வேண்டும்
நோயாளியின் உடலிலுள்ள சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறுகளையும் போக்கி நோயற்ற நிலையை மீண்டும் ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை தெளிவான கோட்பாடுகளை ஆதாரமாய் வைத்துத் தேர்தெடுப்பது எவ்விதம்
அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளில் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நோயைப் போக்க எது மிகச் சரியானது
அம் மருந்தை எப்படித் தயாரிப்பது எந்த அளவில், எவ்வளவு வேளைகள், எந்தெந்த நேரங்களில் கொடுப்பது,
ஒவ்வொரு நோயிலும் குணம் ஏற்படுவதைத் தடைசெய்யக் கூடியவை எவை?
அத்தடைகளை நீக்கி நிரந்தர குணம் ஏற்படும்படி செய்வது எப்படி?
ஆகிய எல்லா விஷயங்களையும் அறிந்தவரே உண்மையான வைத்தியர் ஆவார். (பட்டம், பதிவு, பதவி வகிப்பவர் மட்டுமே தான் மருத்துவர் என்பது அல்ல.)
வருமுன் காப்பதே வைத்தியரின் கடமை.
(4). ஆரோக்கியத்தைக் குலைத்து நோயை உண்டாக்கும் காரணங்களையும் அக்காரணங்களை நீக்கும் வகையையும் வைத்தியர் முன்பே அறிந்திருக்க வேண்டும்.
தூண்டும் காரணம் என்ன? அதன் அடிப்படை காரணம் என்ன?
(5). திடீர் நோயில் (Acuite Diseases)அதைத் தூண்டியதாகக் கருதக்கூடிய காரணத்தின் விவரங்களும் நீடித்திருக்கும்
(Chronic-Diseases) நோயில் அதன் அடிப்படைக் காரணத்தை மிக தெளிவாக எடுத்துக் காட்டும் முக்கியமான குறிகளும் (அடிப்படைக் காரணம் பெரும்பாலும் மூவகை நசசுத் தன்மைகளில் ஒன்றாய் இருக்கலாம்.)
நோய் தீர்க்கும் பணியில் வைத்தியருக்கு உதவியளிக்கின்றன. இவ்வாராய்ச்சிகளை நடத்தும் போது நோயாளியின் உடல் அமைப்பு, நடத்தை, அறிவு, தொழில், வாழும் விதம், வயது, ஆண:-பெண் உறவு ஆகிய விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சோரா, சிபிலிஸ், சைக்கோஸிஸ் ஆகிய மூன்று வகையான நாள்பட்ட (chronic) வியாதிகளை சுருக்கமாக காண்போம்.
1. சோராவின் குணம்:
பலவகையான வலிகள், உறுப்புகள் அழுகுதல், புத்தி பேதலித்தல், மற்ற விஷயங்களுக்கும் இதுவே தாய்.
(ரியாக்ஷன்)வியாதிக்கு பின்பு மறுகுறி பாய்தல் அதன் பின்பு கள்ள சதை அதாவது முண்டு முடிச்சிகள் சருமத்தில் தோன்றுதல்? பஞ்சேந்திரியங்களின் உதவியோடு இதை உணர முடியாது.அது தான் சோரா என்பதாகும். இதுதான் மாற்றி மாயை செய்கிறது.மனதை குளறுபடி செய்வது இதுவே. பின்பு உடல், உறுப்பை தாக்கி விடும் மற்றும் பலவகையான மன திருப்தியின்மையும் சோராவே,
சரும அரிப்பும் சோராவே.Lation Psora (மறைந்திருந்து தாக்கும் சோரா.
குறிப்பு:-
இன்றைய ஆங்கில மருத்துவ கருவிகளில் சோதனை செய்து பார்த்து விட்டு ஏதும் நோய் இல்லை என்று கூறுகிறார்களே (கருவிகளுக்கு எப்போதும் தெரியாது) அது தான் சோரா.இது அவர் அவர் செய்த பாவத்தின் பின்பு பெற்ற சாபமே தான். பெற்றோர், முன்னோர்கள் செய்த பாவமும் கருமையத்தில் பதிந்து வெளியேறி உடலை தாக்குகிறது.
உடலை மட்டும் பார்த்தால் தெரியாது அல்லவா? கருமையத்தையும் தூய்மை செய்ய வேண்டும். இந்த கருமையத்தைதான் ஹோமியோபதி பார்க்கிறது.
கற்பனையாக தெரிவதெல்லாம் சோராவின் விசமே,
இன்று காணப்படும் சர்க்கரை வியாதி-சோரா தான்:
சாம்பல் சாப்பிட ஆசைப்படுவது சோராவே,
விருப்பமும், வெறுப்பும் சோராவே
பெண்ணை விரும்புதல் சோரா,
வழுக்கை, தலையில் அரிப்பு, நரை விழுதல், கண் எரிச்சல், காது இரைச்சல், மூக்கினுள் கொண கொணப்பு, எதையும் தாங்க முடியாத மனம், பலசுவை வாயில் தெரிதல் (அ) சாப்பிடும் பொருள் சுவை மாறி தெரிதல், காய்ச்சல் விடும் போது வாய் கசப்பு சோரா,
வயிறு நிரம்பாத மனம், தீனி தின்பது, சித்திரவதை செய்யும் இரும்பல், நுரையீரல் தொல்லை, ஆஸதுமா, இதயத்தில் பலவகை சப்தம் ஏற்படுதல் சோராவே.
இது மன அதிருப்தியின் பயனால் ஏற்படுகிறது
நல்ல உருவத்தை விகாரப்படுத்துவம் சோராவே
கல்லீரலையும் மற்ற உள் உறுப்புகளை கெட்டிபடுத்துவதும், வீங்க வைப்பதும் சேராவே,
புற்று நோயுக்கு பெரும்பங்கு வகிப்பது சோரவே,
வேகமாக பேசுவான், எழுதுவான், பலவகையான பயம், உடலில் தோன்றும் பக்கவாதம், எரிச்சல், குளிர்ச்சி, பேதி மலச்சிக்கல் சோராவே,
பைத்தியம் சோரா, கள்ளச்சதை வளர்ச்சிக்கு உதவி செய்வதும் சோரா, சிபிலிஸ் உதவியின்றி வளரமுடியாது.எல்லா இடமும் பரவியிருப்பது சோராவே.
நாள்பட்ட நோய்க்கு இதுவே தாய் என்று கூறப்படுகிறது.
இவர் மனம் பெரிய திட்டம் போடுதல், வேகம், இரகசியம் காப்பார்,தைரியசாலி, யாரையும் நம்பமாட்டார், கொலைகாரர், திருடர், பயங்கரமான மிருக புத்தி, வெட்கமில்லாதவர், எந்த நிலையிலும் பதவியிலும் இப்படி இருப்பார். நோயுற்ற உறுப்பு நிறமாற்றத்துடனும்,
2.சைகோஸிஸ்:
மனதில் கிரகித்து பிறகு தேகத்தில் காட்டும்.
முட்டைகோஸ் போலவும், வறண்ட வளர்ச்சியும், நாற்றமுள்ள நீர் வெளியேறும், தொள தொளப்பு சதை, ஆசனம், யோனி மானியில் கள்ள சதை வளர்ச்சி இதுவே இதன் முக்கிய குறி.
இடி, புயல் மழைக்கு முன்பு எரிச்சல் அடைவார்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பார். மழை வரும் முன்பு சிறுநீர் தொல்லையும் முன்பே அதை அறிவிக்கும் கருவி எனலாம்.
கத்தி பேசுவான், மெதுவாக பேசுவான், மானித்தோலும், கொட்டையிலும் வீக்கங்கள், வலிகள் கருப்பை கட்டிகள், வலிகள், தொல்லைகள், இரத்தம் வடிதல் சிறுநீரகத்திலும் பல் முளைக்கும் போதும் தொல்லைகள் தலையில் மட்டும் புளிப்பு நாற்றம், குழந்தைக்கு ஏற்படும் முண்டு முடிச்சி எல்லா வகை கள்ளச்சதை வளர்ச்சிகள் சைகோஸிஸ்தான்.
அது அக்குள், ஆசனவாய், நிணநீர் கோளத்திலும், அதிகமாக ஆண், பெண் உறுப்பில் தாக்கும். மற்றும் தடித்த நாக்கும்,
3.சிபிலிஸ் :
கசகசா போல அமைப்பு உள்ள புண்கள் எங்கும் தோற்றுவிக்கும்.
வெள்ளைபடிவும், நாக்கில் பற்கள் பதிவு, சீழ் நாற்றமுள்ள வியர்வை, இரவு மு்ச்சு தொல்லை, படுக்கையின் சூட்டை கூட தாங்க முடியாது, தானாகவே சம்பாதித்து கொண்ட வியாதி, இது எந்த உறுப்பையும், (அதாவது எலும்பை, நரம்பை) எதை தொடுகிறதோ அதை கரைத்து அழித்து விடும்,
மூக்கு, கருப்பை, குடல் போன்ற உறுப்பில் புண், அல்சர், அழுகல், சொத்தை, குஷ்டம், மூக்கு நுனி, விரல், முட்டி முழங்கை பல் போன்ற பகுதிகளில் சொத்தை விழுவதும் ஆகும்.
இதற்கு இப்போது மேலே களிம்பு பூசி விடுவதால் சிபிலிஸின் வளர்ச்சியும் பயணம் நிற்காது.
சிபிலிஸ தன்னை புண்ணாக வெளிப்படுத்துகிறது. இதை வெளிப்பூச்சு களிம்புகளினால் குணம் செய்வதுடன் இது இரண்டாம் கெட்ட நிலைமையாகி விடுகிறது.
அது புண்ணுடன் தடிப்பும், கழலையும் உடன் சேர்ந்து கொள்ளும்.
இது திடீர் வகையில் இது தற்போது தோன்றியது அல்ல இவ்விடமூம் நாட்பட்ட விசமே.
ஆங்கில மருந்துகளினால் எத்தனை தடைவை குணம் செய்து அடக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த கணக்கு தெரிந்தவர் தான் ஹோமியோபதி மருத்துவர்.
செகன்டரி சிபிலிஸ் என்பது ஏதோ ஒரு பகுதியில் மாற்றம் அடைகிறது என்பதை உணர்ந்த கொள்ளவும்.
இவர் மனதில் ஆழமாக எதுவும் பதியாத மந்த புத்தி, முட்டாள் போலவும் இருப்பார்.
படுக்கையில் கஷ்டம் தற்கொலை எண்ணம், எல்லாமே எதுவும் சுமையாகஇருப்பது போல எண்ணம், கழிவு அதிகம் அதாவது மலம், சிறுநீர், சீல், வாந்தி போன்றவைகள்.
ஓய்வு பொழுதில் தணிவும், குளிர்ச்சியில் தணிவும், சீழ் நாற்றம் வீசும் வியர்வை, கண்நோய் எல்லா வகையும் சிபிலிஸ் தான்.
வியாதியை குணப்படுத்த முடியாததும் இந்த சிபிலிஸ் தான். இதை கண்டுபிடிக்க வேண்டும்.
சோராவின் பின் பலம் இதற்கு எவ்வளவு என்று பார்த்து கணிக்க வேண்டும். கடுமையான சிந்தனை செய்தால் அது சோராவாக வெளிவரும்.
நோயே குழம்பிப்போவதும் சிபிலிஸ்,
பிறகு அதன் மீது சிபிலிஸ், சைகோஸிஸ் ஒட்டிக்கொள்ளும்.
இதில் எது முதலில் ஒட்டும் என்று சொல்ல முடியாது.
ஆப்ரேசனை குழப்பி விடுவது இதுவே.
மூன்று விசமும் சேர்ந்தால் சிக்கல்கள்
அவர்களுக்கு மூட்டை மூட்டையாக கூட இருக்கலாம்.
ஒரு மூட்டை சிக்கல் தீர்ந்த உடன் மற்றொரு மூட்டை, மூட்டையாக சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கும்.
அப்படி வரும்போதுதான் அதை அளந்து உரிய மருந்து தர வேண்டும்.
அது அனுபவத்தின் வாயிலாக அறிவீர்கள்.
(நூல்கள் பல கற்பினும் உண்மை அனுபவ அறிவே அறிவு என்று திருக்குறள் சொல்லுகிறது.)
ஒரு மருத்துவர் ஆவதற்கு நூல் அறிவை விட அனுபவ அறிவுதான் முக்கியம். எலும்பு நோய், நரம்பு நோய், பேதி, காய்ச்சல், காச நோய் போன்ற நோய்களில் இருக்கும் நோயை பார்க்காமல், அதனுள் இருக்கும் விஷேசமான குறி (அடையாளம்) அல்லது தனித்தன்மையை தான் கவனிக்க வேண்டும்.
அதுதான் ஹோமியோபதியில் தேர்வு செய்யப்படுவதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேர்வும், பொட்டன்சியும் அறிய வேண்டும்.
காரணத்தையும் மருந்து வீரியத்தையும் மருத்துவர்தான் அனுபவத்தில் கண்டுபிடித்து கொள்ள வேண்டும்.
இதன் விளக்கத்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேன் எழுதிய கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் அதை பார்த்து, படித்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.
மூன்று விசமும் கலந்து தின்மம் பெற்று விட்டால் மனம் குழம்பி உடலுறுப்பில் கள்ள சதை தோன்றும். அது தான் புற்று என்று பெயர். சிபிலிஸ் மேலோங்கினால் எய்ட்ஸ்.
அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1