Breaking News
Loading...
Monday, January 18, 2016

மலச்சிக்கலுக்கு எனிமா!

Monday, January 18, 2016
நண்பர்களே வணக்கம்.
 வழக்ககமாக நாம் ஏதாவது நோய்க்காக மருத்துவரிடம் செல்லும்போது எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,எவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஆலோசனை கூறுவார்.

அல்லது நாமாகவே இவற்றைப் பற்றி விவரமாகக் கேட்போம்.இவ்வாறு உள்ளே சாப்பிடும் உணவுக்கு ஆலோசனை கேட்கும் நோயாளிகளோ அல்லது மருத்துவர்களோ அது ஒழுங்காக ஜீரணம் ஆகி நாள்தோறும் கழிவுப்பொருள்கள் எளிதாக வெளியேறுகிறதா என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மலச்சிக்கல் பெருஞ்சிக்கல் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்..நமக்கு எந்த நோய் வந்திருந்தாலும் சரி..முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது உடல் கழிவுப் பொருளை அன்றாடம் கஷ்டமில்லாமல் ஒழுங்காக வெளியேற்றுகிறதா என்பதைத்தான்..

அப்போதுதான் நீங்கள் மருத்துவத்துறையில் மருந்துகள் எடுத்தாலும் நோய் விரைவில் குணமாகும்...

ஒருநாள் கூட கழிவுப் பொருட்கள் உடலில் தங்கக்கூடாது..மேலும் மிகவும் கஷ்டப்பட்டு முக்கி மலம் கழிந்தாலும் அதுவும் மலச்சிக்கலே..தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் மலச்சிக்கல் உள்ளவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்..Piles (மூலம்) பிரச்சினை உள்ளவர்களில் 100 க்கு 99 சதவீதம் மலச்சிக்கலால் தான் ஏற்படுகிறது..Piles முற்றினால் Surgery தான் பண்ண வேண்டும் என்று ஆங்கில மருத்துவத்தில் கூறுவார்கள்..

அதன்பிறகும் மலச்சிக்கல் தொடர்ந்தால் மீண்டும் மூலம் கண்டிப்பாக வரும்..அதனால் மூலத்திற்கு Surgery செய்வது நிரந்தரத் தீர்வல்ல...மலச்சிக்கலால் அனைத்து நோய்களும் தீவிரமடையும்..

அடிக்கடி தலைவலி, அஜீரணக் கோளாறுகள், தூக்கமின்மை ,கெட்ட கனவுகள், முழங்கால் மூட்டு வலிகள் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கு மலச்சிக்கலே முக்கிய காரணம்..

அதனால் மலச்சிக்கல் இருந்தால் தயக்கமின்றி மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்..இதில் வெட்கப்பட எதுவுமில்லை..மேலும் ஒரு முக்கிய விஷயம்..

தயவு செய்து மலச்சிக்கல் இருந்தால் அதற்கு ஆங்கில மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்..அது நாளடைவில் மலச்சிக்கலை அதிகப்படுத்திவிடும்..

முடிந்தவரை நிறைய நார்சத்துள்ள உணவுகளை உண்ணவும்..பப்பாளி மற்றும் புடலங்காய் நிறைய சாப்பிடவும்..அசைவ உணவு தவிர்க்கவும்..சிலருக்கு எந்த நார்சத்துள்ள உணவு உண்டாலும் மலச்சிக்கல் பிரச்சினை அன்றாடம் தொடர்ந்து கொண்டிருக்கும்..

அப்படி கஷ்டப்படுபவர்களுக்கு என்ன செய்வது..மலச்சிக்கல் பிரச்சினையே வராமல் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒரு எளிமையான முறை எனிமா எடுத்தலே...

இதை நாம் வீட்டிலேயே பின்பற்றலாம்..

எனிமா என்றால் என்ன என்று பிரசவமான பெண்கள் அறிந்திருப்பார்கள்..

பிரசவ அறைக்கு செல்லும் முன் அவர்களுக்கு எனிமா கொடுத்துவிட்டுத்தான் பிரசவ அறைக்குள் கூட்டிச் செல்வார்கள்...

எனிமா என்றால் என்ன,அதன் நன்மைகள் மற்றும் உபயோகிக்கும் முறை
மேலே படத்தில் உள்ளதே எனிமா பாட்டில்.இந்த பாட்டிலில் ஒரு ரப்பர் ட்யூப் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பாட்டிலில் நீர் நிரப்பி ட்யூபின் மறுமுனையை நமது ஆசனவாயில் உள்ளே செலுத்தவேண்டும்..

இப்போது பாட்டிலை சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் தண்ணீர் ட்யூப் வழியாக ஆசன வாய்க்குள் செல்ல ஆரம்பிக்கும்..தண்ணீர் முழுவதும் உள்ளே சென்றவுடன் ட்யூபை எடுத்து விட்டு 5 to 7  நிமிடங்கள் கழித்து மலம் கழித்தால் அடிவயிறு முழுவதும் சுத்தமாகும்..

இந்த முறையை வீட்டிலேயே நாம் செய்துகொள்ளலாம்..தீவிர மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் எனிமா எடுக்கலாம்,இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை..

இந்த எனிமா எடுப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.,கழிவுப்பொருட்கள் முழுவதும் வெளியேறுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்..என்னிடம் வரும் மூல நோயாளிகளுக்கு முதலில் நான் பரிந்துரைப்பது எனிமா எடுப்பதையே...

காய்ச்சல் இருக்கும்போது இயற்கையாகவே மலச்சிக்கல் இருக்கும்,எனிமா எடுத்தால் விரைவில் காய்ச்சல் குறையும்..இரவில் எனிமா எடுத்தால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்..பெண்களுக்கு மாதவிடாயின்போது அடிவயிறு அதிகமாக வலி எடுத்தால் எனிமா எடுப்பது உடனே வலியைக் குறைக்கும்..

இந்த எனிமா முறையை காந்தியடிகள் முதலானோர் அன்றாடம் பயன்படுத்தியுள்ளார்கள்..இந்த எனிமா பாட்டில் சில இயற்கை மற்றும் கதர்
அங்காடிகளில் கிடைக்கும்..

இத்தகைய சிறப்புகளை கொண்ட எனிமாவை ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நோய் வந்தால் விரைவில் குணமாவதற்கும் அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...நன்றி

By

Dr. SIVARAMAN,
SHIVARAM HOSPITAL,
178 LAXMIPURAM,
PALANI-624601
PH:9791774700 / 9443245397

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer