Breaking News
Loading...
Sunday, January 10, 2016

ஜோதிடமும் ஆன்மீகமும்....1

Sunday, January 10, 2016
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா!

தூய்மையான யானை முகத்தினையுடைய விநாயகப் பெருமானே!

பால் போன்ற அன்பும், தேன் போன்ற தியாகமும், பாகு போன்ற இருக்கமும்       (மனதிடம்), பருப்பு போன்ற வைராக்யமும், இயல் தமிழான எண்ணத்திலும், இசைத் தமிழான சொல்லிலும், நாடகத் தமிழான செயலிலும், எக்காலத்திலும் மாறாது இணைந்து இருக்கும் படி அருள்புரிவாயாக!

இறையை வணங்கி எனது பார்வையில், இக்கட்டுரை....
உலகம் - எண்ணங்களால் ஆக்கப்பட்டு, அன்பினால் காக்கப்பட்டு, கோபத்தினால் அழிக்கப்படுவதாக இருக்கின்றது.

உலக இயக்கம் மற்றும் அதனைச் சார்ந்த இயக்கப் பொருள்களால், உலகில் வாழும் மனிதர்களின் வாழும் முறை, எண்ணங்கள், செயல்பாடுகள் அமைகின்றன என்றும் அதனை வாழும் மனிதர்கள் அறிந்து கொள்ள, இறை அருளால், சூட்சும அறிவால் அறிந்தவற்றை (ஜோதிடம் என்ற பெயரில் இன்றும்) சாஸ்திரமாக எழுதி வைத்தனர் சித்தர் பெருமக்கள்.

சித்தர் பெருமக்கள், எந்த காலேஜிற்கும் போய் பட்டமும் வாங்கவில்லை.... பிஎச்டி பட்டமும் பெறவில்லை என்பதனால், குதர்க்கமாய் பேசுவோரும் நிறைய இருக்கின்றனர்.

அனுபவத்தினாலும், தீவிர ஆராய்ச்சியினாலும் கோள்களின் இயக்க மாறுபாட்டையும் அறிந்து, உணர்ந்து எழுதப்பட்டது. இவைகள் முழுமையாய் அறிந்த மானுடனுமில்லை. அனைத்து சுவடி நூல்களும் கிடைக்கப் பெறவில்லை என்பதும் உண்மை.

சரி... அவர்கள் அளவிற்கு நாம் போக வேண்டாம்....

எண்ணங்களே எல்லாவற்றிற்கும் காரணமாக அமைகின்றது.

மனிதனுக்கு ஆறு அறிவு உண்டு.
அது நேர் விசை , எதிர் விசை என இரண்டாக இருக்கின்றது. ஆறு அறிவும் நேரெதிர் விசைகளால் 12 சுபாவங்களாக பிரிகின்றது.

காதால் நல்லது கெட்டது கேட்கிறோம்.
கண்களால் நல்லது கெட்டது பார்க்கிறோம்.
கைகளால் நன்மை தீமை செய்கிறோம்
மூக்கால் நல்லது கெட்டதை முகர்கிறோம்
வாயினால் நல்லது கெட்டது பேசுகிறோம்
சிந்தனையினால் நல்லது கெட்டது நினைக்கிறோம்..

இந்த 12 விதமான அறிவுக்கும் குணங்கள் அமைகின்றது. 

இயற்கை சக்திகளான பஞ்சபூத சக்திகள் ( நீர், நிலம், ஆகாயம், காற்று, பூமி) என 5, உயிர் (6),  உடல் (7) அரூப சக்திகள்  (8) ( காந்தம் / புவி ஈர்ப்புவிசை), (9) இருள், (10) வெளிச்சம், (11) சப்தம் (4), (12) வர்ணங்கள் ( நிறங்கள் ) இவற்றோடு பிண்ணிப் பிணைந்திருக்கின்றது.

12 விதமான சுபாவங்களை ராசிகளாக பிரித்தார்கள். 
மனிதனுக்கு 27 விதமான இடங்களின் தன்மைக்கேற்ப மனித மனோபாவம் மாறும் தன்மை உடையதாகின்றது என்பதனை அறிந்தனர். இந்த இடங்களை நட்சத்திரத் தொகுப்பாக கருதினர். விண்ணில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும், ஆகர்ஷ்ண சக்தியோட்டத்தினையும் அறிந்து கொண்டனர்.

வான வீதியில் சுற்றி வரும் கிரகங்களின் இயக்கத்தினையும் இவற்றுடன் நட்சத்திர இயக்கத் தொடர்பு  - உராய்வு ஏற்படுவதினால் உண்டாகும் மாற்றத்தையும் அறிந்துகொண்டனர் .

வீதியில் நடக்கும் போது ஒரு எண்ணம்,,,,
சமையலறையில் இருக்கும் போது ஒரு எண்ணம்....
யாரையாவது பார்க்கையில், தோன்றும் எண்ணம்.., பேசும்போது மாறும் மாறுபட்டு பேசும் எண்ணம் ...இவ்வாறு இடத்திற்குத் தகுந்தவாறு மாறுபடுவதனையும் இதற்கான காரணத்தினையும் விண்ணோடு தொடர்புள்ளதா என்பதனையும் ஆராய்ந்தறிந்தனர்.

எண்ணம் - சொல் - செயல் என்ற அடிப்படையில்

நேற்று - இன்று - நாளை என முக்காலமாக பிரித்து 

இடத்தாலும் காலத்தாலும் நிகழ்பவனற்றை சாஸ்திரமாக ஜோதிட அறிவியலாக எடுத்து இயம்பினர் .
27 நட்சத்திரங்கள் - 12 ராசிகள் - 9 கிரகங்கள் = 48 இதனை ஒரு மண்டலம் என்பர்.

ஒரு பொருள் இரண்டாக பிரிந்தால் சப்தம் வரும்.
இரண்டு பொருள்கள் உராய்ந்தாலும் சப்தம் வரும்.

படைப்பில் சப்தம் தான் ஆதியில் தோன்றியிருக்க வேண்டும். காற்றின் உராய்வு, அதிர்வு இவற்றின் காரணமாக உஷ்ணம் தோன்றியிருக்க வேண்டும். உயிர் சேர்ந்த உடல் இவ்வாறு தான் உருவாவதற்கு காரணமாகி இருக்கின்றது. உயிர் அணுக்களின் இணைவினால் விளைந்த உடல் அல்லவா இது.

உயிரை ஆத்மா என்றும் பிராணன் என்றும் கூறுகின்றனர்...

ஒன்றான உயிர் பரமாத்மா (கடவுள்)

ஆத்மா  ( உயிர் - பரமாத்மா ) அழியாதது.
உடல் (ஜீவ ஆத்மா ) அழியக்கூடியது.

ஜீவாத்மாவின் எண்ணத் தத்துவமே விஷ்ணு என்று ஆயிற்று.

சிவன் = உயிர்
சக்தி = உடல்
முருகன் = அறிவு ( இரத்த ஓட்டத்தின் காரணமாய் உருவான உணர்வு )

சக்தி - இச்சா சக்தி , இயக்கு சக்தி என இரண்டாக வள்ளி, தெய்வானையாக 
இருதயம் இயங்குதசை, கைகால்கள் இயக்குதசை என உணர்க.

விருப்பப்படி செயல்படுவது இச்சா சக்தி. தானாக செயல்படுவது கிரியா சக்தி.

விநாயகர் - புத்தித் தத்துவமாகும். இயற்கையை அனுசரித்து, நன்முறையில், நன்னறிவினால் ஆன்ம திருப்தி அடைய முயல்வது புத்தித் தத்துவமாகும்.

ஆராய்ந்து அறிவது அறிவு.
அனுசரித்து நடப்பது புத்தி.
அறிவு அக்னி தத்துவம். - தந்தையால் சிருஷ்டிக்கப் பட்டவன் - முருகன் 
புத்தி நீர் தத்துவம்.- தாயினால் உருவானவன் வினாயகர்.

சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு , கரியமில வாயு - தேவர்களாகவும் அசுரர்களாகவும் கருதப்பட்டனர்.

தொடரும்.....





2 comments:

  1. வேதாங்கமான ஜோதிடம் பற்றிய விளக்கங்கள் அருமை;தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. மூத்தப் பதிவரின் வாழ்த்திற்குத் தலை வணங்குகின்றேன் தங்களின் ஆசி யும் வருகையும் தொடர விரும்பி... தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி அய்யா!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer