Breaking News
Loading...
Wednesday, January 6, 2016

கொசுக்களை விரட்ட....

Wednesday, January 06, 2016
வீடுகளில் இரவில் மிக முக்கிய தொல்லையாக அமைவது கொசுக்கள் தான்.

மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே நாம் சந்தோஷமாக பொழுதை கழிப்பதில், பெரிய அளவில் தொல்லைகள் கொடுப்பது கொசுக்களே. 

கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலேரியா போன்ற சில நோய்களையும் பரப்பும். கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால் நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையான வழியில் கொசுக்களை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் வீட்டு தோட்டத்தில் சில கொசு விரட்டி செடிகளை வளர்த்திடுங்கள்.

 
எத்தனை விதமான முயற்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் கொசுக்களை விரட்ட போராட வேண்டியிருக்கும். இந்த பிரச்சினைக்கு வீட்டுத்தோட்டம் மூலம் வழி காணலாம். சில வகை செடிகளை வீட்டில் வளர்க்கும் போது கொசுக்களின் வரவு அறவே தடுக்கப்படுகிறது. வேம்பு, நொச்சி, சாமந்தி, ரோஸ்மேரி, சிட்ரநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிவகைகள் கொசுக்களை விரட்டும் வேதிப்பொருட்களை இயற்கையாவே கொண்டுள்ளன.

இவை எளிமையானது மட்டுமில்லாது செயற்கை ரசாயனக் கலப்பு ஏற்படுவதையும் தவிர்த்திடுகிறது. 


சிட்ரோனெல்லா புல் சிட்ரோனெல்லா புல் கொசுக்களை கட்டுப்படுத்த சிறந்ததாக விளங்குகிறது. 2 மீட்டர் உயரத்திற்கு வளரும் இது ஆண்டிற்கு ஒரு முறை லாவெண்டர் நிற பூக்களை பூக்கும். இந்த புல்லில் இருந்து எடுக்கபப்டும் சிட்ரோனெல்லா எண்ணெய்யை தான் மெழுகுவர்த்திகள், பெர்ஃப்யூம்கள், விளக்குகள் மற்றும் இதர மூலிகை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை (ஏடெஸ் ஏஜிப்டி) சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் சிட்ரோனெல்லா புல் உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த சிட்ரோனெல்லா எண்ணெய்யை மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளில் ஊற்றி அதனை தோட்டத்தில் எரிய விடுங்கள். சிட்ரோனெல்லா புல்லில் பூசண எதிர்ப்பி குணங்களும் உள்ளது. சிட்ரோனெல்லா புல் நம் சருமத்திற்கு பாதுகாப்பானது. அதனால் அதனை நீண்ட நேரம் தடவிக் கொள்ளலாம். உயிரிகளுக்கும் எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.

சாமந்திப்பூ செடியில் வரும் வினோதமான வாசனையை பல பூச்சிகளும், மனிதர்களும், மிருகங்களும் விரும்புவதில்லை. சாமந்திப்பூ செடி 6 இன்ச் முதல் 3 அடி உயரம் வரை வளரும். இரண்டு வகையான சாமந்திப்பூ செடிகள் இருக்கிறது - ஆஃப்ரிகன் சாமந்திப்பூ மற்றும் பிரெஞ்ச் சாமந்திப்பூ. இவையிரண்டுமே கொசு விரட்டியாக செயல்படுகிறது. அசுவினி மற்றும் இதர பூச்சி கொல்லியாகவும் இது செயல்படுவதால் சாமந்திப்பூவை காய்கறிகளுக்கு பக்கத்தில் வளர்ப்பார்கள். இச்செடியில் மஞ்சள் முதல் கருமையான ஆரஞ்சு மற்றும் சிகப்பு வரை பல நிறத்திலான பூக்கள் பூக்கும். சாமந்திப்பூ செடிகளுக்கு சூரிய ஒளி பிடிக்கும் என்பதால் அதனை நிழலில் வைத்தால் அதன் வளர்ச்சி தாமதமடையும். கொசுக்களை கட்டுப்படுத்த, சாமந்திப்பூ செடியை தோட்டத்தில், தொட்டியில் வளர்க்கலாம். 

வலிமையான கொசு விரட்டி செடிகளில் ஒன்றாக விளங்குகிறது வேப்ப செடி. வேப்ப செடியில் பூச்சி கொல்லி குணங்கள் அடங்கியுள்ளது. வேப்பிலை சேர்த்த பல கொசு விரட்டிகளும் பாம்களும் சந்தையில் கிடைக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த வேப்பம் மரத்தை உங்கள் தோட்டத்தில் வளர்த்திடுங்கள். வேப்ப இலைகளை எரித்தோ அல்லது வேப்ப எண்ணெய்யை மண்ணெண்ணெய் விளக்கில் போட்டோ பயன்படுத்தலாம். கொசுக்களை விரட்ட வேப்ப எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தடவலாம். அதிலுள்ள இயற்கையான கொசு விரட்டி குணங்கள் மலேரியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும்.

துளசி செடி துளசி என்பது கொசு விரட்டி செடியாகும். கசக்காமலேயே நறுமணத்தை பரப்பிடும் மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கவும். கொசுக்கள் அண்டாமல் இருக்க கசக்கிய துளசி செடியை சருமத்தின் மீது தடவிக் கொள்ளவும். உணவிற்கு சுவையளிக்கவும் துளசி செடி உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு துளசி வகையையும் பயன்படுத்தலாம். ஆனால் லவங்கப் பட்டை துளசி, எலுமிச்சை துளசி மற்றும் பெருவியன் துளசிகளில் தான் அடர்த்தியான நறுமணம் வருவதால் அவைகள் சிறப்பாக செயல்படும். 





0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer