Breaking News
Loading...
Sunday, January 10, 2016

இனிய குறிப்புகள்...

Sunday, January 10, 2016
1. வெண்டைக்காய் கறி செய்யும்போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொரமொரப்பாய் சுவையாய் இருக்கும்.
2. ஒரு தட்டில் தனியாக ஈர மணல் வைத்து, பறித்து வாய்த்த பூ, காய்கறிகளை ஈர மணல் படும்படி வைத்திருந்தால் இரண்டு நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.
3. பிரஷர் குக்கரை, உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக்கூடாது.
4. இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்குப்பின், இட்லிகள் வார்த்தால் பூ மாதிரி இருக்கும்.
5. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒருநாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டுவிடும்.
6. மைதா மாவைக் கரைத்து தோசை வார்க்கும் முன் ஒரு வாணலியில் ஐந்தாறு கைப்பிடி முருங்கை இலையைப் பறித்து நெய்யில் பொரித்தெடுங்கள். கையால் நறுக்கிய மாவுடன் கலந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
என்ன மணம்! என்ன சுவை!
7. ரவா லட்டு, பொட்டுக்கடலை லட்டு, இவை செய்யும்போது மொத்த மாவு, சர்க்கரை கலவைக்கு 1/4 பங்கு பவுடரையும் கலந்து லட்டு செய்தால் மிக ருசியாக இருக்கும்.
8. உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
9. தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்பொழுது இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு, மணமாகவும் இருக்கும்.
10. அடைக்கு ஊறப்போடும்போது துவரம் பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருக்கும். வாயுத் தொந்தரவும் இருக்காது.
11. கோதுமையுடன் கிலோவுக்கு 100 கிராம் முழுக்கொத்துக் கடலையும் (சன்னா) 100 கிராம் சோயா பீன்சும் சேர்த்து அரைத்து மாவாக்கினால் சப்பாத்தி முதலியவை நல்ல நிறம், மணம், ருசியுடன் கூட, தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
12. பச்சை கொத்துமல்லித் தழைத் துவையல் அரைக்கும்பொழுது மிளகாய்க்குப் பதில் மிளகாய் வறுத்து வைத்து அரைத்து விடுங்கள். மணம் மாறுதலாக இருப்பதுடன், சுவையும் கூடுதலாகும்.
....Facebook

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer