மனதுக்கும், சொல்லுக்கும்
எட்டாத நிலையில் இருப்பது;
அளவில்லாத பேரொளி கொண்டது;
இல்லாமல் தான் ஒன்றே மேலாகி இருப்பது;
உருவமற்றது;
சுட்டிக்காட்ட எத்தன்மையும் இல்லாதது;
அளவில்லாத குணங்கள் கொண்டது;
எந்த நிறமும் இல்லாதது;
அழிவே இல்லாதது;
எல்லா உலகங்களும் தோன்றக் காரணமாயிருப்பது;
இது தான் என்று சொல்லி
உணர்த்தும் அளவிற்கு தெளிவு இல்லாதது;
இதுவே பர சிவம் ஆகும்.
ஆம்....இதுவே ஆதி சிவன்
என்றழைக்கப்படும் சிவம் ஆகும்.
மக்கள் தியானம் செய்யவும்,
உருவம் கொண்டு
உருவமின்றி
மெய்ஞானத் தேடல் கொள்ளச் செய்கின்றது.
சிவம் - சக்தி பாவமாகவும்,
ருத்ர பாவமாகவும்,
பிரம பாவகமாகவும்
கொள்ள வேண்டியே மெய்ஞானிகள்
லிங்க வடிவில் பூஜித்தனர்.
எம்பெருமான் இறைவா முறையோ என்று
திருக் கோயில்களில் சந்திர சேகரர்,
கல்யாண சுந்தரர் என மானிட உருவத் தோற்றங்களில்
தோற்றம் அளிப்பது வியக்த மூர்த்தியாகும்.
அங்கங்கள் எதுவும் இல்லாமல்,
லிங்க வடிவில் காணப்படுவது அவ்வியக்த மூர்த்தியாகும்.
சிவ லிங்கத்தில் உருண்டை வடிவமாக
இருக்கும் பாகம் " ருத்ர பாகம்".
நாதமயமான லிங்கத்தின்
பொருந்தும் பாகத்தில் எட்டு மூலமாகக்
கொண்டு பொருந்தும் பாகம் "திருமால் பாகம்".
பீடத்தின் கீழ்ப்புரத்தின் நான்கு மூலைகளும்
"பிரம்ம பாகம்".
உருண்டை வடிவிலான லிங்க பாகம் "ஆணாகவும்"
திருமால் பாகம் "பெண்ணாகவும்"
பிரம்ம பாகம் "ஆணும் அன்று, பெண்ணும் அன்று "
என்று சொல்லப்படும்.
மானிடனாக மட்டுமல்ல,
படைக்கும் ஒவ்வொரு உயிரனமும்,
ஆணாகவோ, பெண்ணாகவோ, ஆணும் அன்று
பெண்ணும் அன்று என்றே இருக்கும்
என்பதனை உணர்த்தவும்,
ஆண் உஷ்ணம் (கோபம்) கொண்டவனாகவும்,
தலைமைத்துவம் கொண்டவனாகவும்
இருப்பான் என்பதனையும்,
பெண்ணானவள் சார்ந்தவளாகவும்,
எதனையும் தாங்கிக் கொள்பவள் ஆகவும்,
நெகிழ்ந்து கொடுப்பவளாகவும் இருப்பவள்
என்பதனையும், அன்பு பாராட்டுபவள் ஆகவும்
இருப்பதனை உணர்த்துகின்றது.
தனித் தன்மை இல்லாதவர்கள் ஆகவும்
நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் ஆகவும்
திருவாகவும் நங்கையாகவும்
விவேகமாகவும் தனித்திருப்பவர்கள் ஆகவும்
தன்னை உணர்ந்து வாழ்வியலை
தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும்
வல்லமை உடையவர்கள் ஆகவும்
இருப்பதனை உணர்த்துகின்றது.
ஒன்றை ஒன்று சார்ந்தே ஒன்று இருக்கும்
என்பதனை உணர்த்துகின்றது.
ருத்ர பாகம் சூரியனாகவும்,
திருமால் பாகம் சந்திரனாகவும்
பிரம்ம பாகம் நீரும் நிலமும் இணைந்த
உலக பாகமாகவும் உணர்த்துகின்றது.
இந்த லிங்கத்தின் இடைப்பகுதியில் சதாசிவம்,
மேற்குப் புறத்தில் ஈசன் எனப்படும் சங்கரனும்,
கிழக்குப் புறத்தில் ஈசாணனும்,
வடக்குப்புறத்தில் பிரம்மனும்,
தெற்குப் புறத்தில் திருமாலாகவும்
ஆகிய ஐந்து மூர்த்திகள் இருப்பதாகவும்
உணர்த்தப்படுவது , ஐவகைத் தொழில்கள்
மானிடனாகப் பிறப்பவன் மேற்கொள்ளப்படுவதனையும்
உணர்த்து கின்றது.
பஞ்ச பூதங்கள் எனப்படும்,
நிலம், நீர், காற்று, ஆகாயம் (விண் ), நெருப்பு
இவற்றினைச் சார்ந்தே வாழ்பவனாகவும்,
இருப்பதனையும் உணர்த்துகின்றது.
மெய்ஞானிகள் எல்லாம் வல்ல
இறைவனை இலிங்க வடிவில் அமைத்து
வழிபட்டனர்.
அருவ உருவத் திருமேனியே இலிங்கத் திருமேனி.
என்னவெல்லாம் செய்கிறார் சிவபெருமான்..?
எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.
சத்யோஜாதம் -படைத்தல்-மேற்குதிசை -நிலவடிவம்-பால் நிறம்
வாமதேவம் - காத்தல் - வடக்கு திசை - நீர் - சிகப்பு நிறம்
அகோரம் - அழித்தல் - தெற்கு திசை - நெருப்பு - கருப்பு நிறம்
தற்புருடம் - மறைத்தல் - கிழக்கு திசை - காற்று - குங்கும நிறம்
ஈசானம் - அருளல் - வட கிழக்கு - ஆகாயம் - படிக நிறம்.
சத்யோ ஜாதம் - படைத்தல்
வாமதேவம் - காத்தல்
அகோரம் - அழித்தல்
தற்புருடம் - மறைத்தல்
ஈசானம் - அருளல்
எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.
சத்யோஜாதம் -படைத்தல்-மேற்குதிசை -நிலவடிவம்-பால் நிறம்
வாமதேவம் - காத்தல் - வடக்கு திசை - நீர் - சிகப்பு நிறம்
அகோரம் - அழித்தல் - தெற்கு திசை - நெருப்பு - கருப்பு நிறம்
தற்புருடம் - மறைத்தல் - கிழக்கு திசை - காற்று - குங்கும நிறம்
ஈசானம் - அருளல் - வட கிழக்கு - ஆகாயம் - படிக நிறம்.
தீயவர்களை அழிக்க முற்படும்போது தோன்றுவது அதோமுகம்.
எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே.
அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடை யோற்கே.
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.
நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.
அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும்
சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே.
அதோ முகம் மா மலர் ஆயது கேளும்
அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே.
தொடரும்.....
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!