Breaking News
Loading...
Wednesday, February 10, 2016

ஆர்கனான் -10

Wednesday, February 10, 2016



126. சோதனையாளர் சோதனைக்காலம் முழுவதும் உள்ளத்தாலோ உடலாலோ அளவு மீறி உழைக்கக் கூடாது. புத்திச் சிதறவிடக் கூடாது.

 உணர்ச்சிவயப்படக்கூடாது. கவனத்தைக் கவரக்கூடிய எந்த அவசர வேலையும் அவருக்கு இருக்கக் கூடாது. கவனமாய்த் தன்னை ஆராய்வதிலேயே நேரத்தைச் செலவிடவேண்டும். 

அவ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது அதைக் கலைக்கக் கூடாது. அவருடைய உடலுக்கு இயற்கையாய் அமைந்துள்ள ஆரோக்கிய நிலைமையுடன் அவர் இருக்கவேண்டும். தன்னுடலில் மருந்தினால் உண்டாகும் உணர்ச்சிகளைச் சரியான முறையில் சொல்லவும். விளக்கவும் போதுமான அறிவுள்ளவராய் இருக்கவேண்டும். 

127. ஆண், பெண், ஆகிய இரு பாலரிடமும் மருந்துகள் சோதிக்கப்பட வேண்டும் 


ஆண் பெண் -உறவு விஷயமாக மருந்துகளால் ஏற்படுத்தப்படும் இயற்கைக்கு மாறான மாறுதல்கள் அப்பொழுதுதான் வெளிப்படும். 

128. மருந்துகளின் விளைவுகளைச் சோதித்தறிவதற்காக அவைகளை அப்படியே உபயோகம் செய்யக்கூடாது. வீரியம் செய்துதான் உபயோகிக்க வேண்டும் 


அப்போதுதான் அவைகளினுள்ளே மறைந்து இருக்கும் சக்திகள் வெளியாகும். அவைகளை ஒழுங்கான முறையில் நன்றாகப்பொடி செய்தும் பலமாய்க் குலுக்கியும் வீரியப்படுத்தி உபயோகித்தால் அவைகளிலுள்ள மறைந்திருந்த சக்திகள் நம்பமுடியாத அளவுக்கு வெளிப்படுகின்றன. 

நவீன ஆராய்ச்சிகள் இவ் விஷயத்தை வெளியிடுகின்றன. சக்தியற்றவை என்று கருதப்படும் பொருள்களாய் இருந்தாலும் அவைகளிலுள்ள மருந்துச் சக்தியை ஆராய அம்முறை மிகச்சிறந்தது. என்பதை நாம் இப்போது அறிகிறோம். 

அதற்காக நாம் கையாளும் வழி என்னவென்றால் சோதளையாளர் வெறும் வயிறாக இருக்கும் போது ஒவ்வொரு நாளும் மருந்தின் முப்பதாவது வீரியத்திலுள்ள நான்கு அல்லது ஐந்து மிகச் சிறிய மாத்திரைகளைச் சிறிது தண்ணீருடன் கொடுக்கிறோம். இதைப்போலவே அவர் பல நாட்களுக்கு மருந்தைத் தொடர்ச்சியாய் உட்கொண்டு வரவேண்டும். 

129. மேலுள்ள அளவுப்படி மருந்தை உட்கொண்ட பிறகு அதானல் தோன்றும் விளைவுகள் (நோய்குறிகள்) தெளிவாய் இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் மேலும் சில மாத்திரைகளைக் கூடுதலாய் உட்கொண்டு வரலாம். 


நோய்க்குறிகள் தெளிவாகவும், பலமாகவும், நோயற்ற நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவுக்கும் மாறுதலும் ஏற்படும் வரை மருந்தை உட்கொண்டு வரவேண்டும்.

 மருந்துகள் எல்லா உடம்பிலும் ஒரே விதமாய் வேலை வெய்வதில்லை. ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. 

பலவீனமாயுள்ள ஒருவரின் உடலில் சக்தி வாய்ந்ததென்று கருதப்படும் ஒரு மருந்தை மிதமான அளவில் கொடுத்தால் நோய்க்குறிகள் உண்டாவதில்லை. 

ஆனால் அதே மனிதர் சக்திக்கு குறைவாயுள்ள மற்றோர் மருந்தினால் பலமாய்த் தாக்கப்படுகிறார். 

இது மட்டுமல்ல திடகாத்திரமான உடலுள்ளவர்களில் சிலர் சக்திக் குறைவான மருந்துகளால் கடுமையாய்த் தாக்கப்பட்டு சக்திவாய்ந்த மருந்துகளால் லேசாகப் பாதிக்ப்படுகின்றனர். 

இவ்விஷயத்தை நாம் முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஆதலால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆரம்பத்தில் மருந்தைக் குறைவான அளவில் கொடுத்துப்பிறகு தேவையானால் நாளுக்கு நாள் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். 

130. முதல் வேளையில் கொடுக்கப்படும் மருந்து தேவையான அளவிற்குப் பலம் வாய்ந்ததாய் இருந்தால் ஒரு நன்மை இருக்கிறது. 


அதாவது நோய்களின் வரிசையின் ஒழுங்கை சோதனையாளர்களால் அறியமுடிகிறது. 

ஆகவே ஒவ்வொரு குறியும் எந்தநேரத்தில் தோன்றியதென்பதைச் சரியாகக் குறித்துக் கொள்ள முடியும். மருந்தின் தன்மையையும் அதன் முதல் வேலை, இரண்டாம் வேலை, மாற்று வேலை ஆகியவைகளின் ஒழுங்கையும் தெளிவாய்த் தெரிந்துகொள்ள இக் குறிப்புகள் மிகவும் உதவியாய் இருக்கின்றன். 

சோதளையாளருக்கு உணர்ச்சிகளை நுட்பமாய் அறியும் தன்மையும் கவனிக்கும் திறமையும் இருந்தால் மிகவும் குறைந்த அளவில் உள்ள மருந்தே பல சமயங்களில் போதுமானதாக இருக்கும். ஒரு மருந்து வேலை செய்யும் கால அளவைப்பல முறை சோதனை செய்து ஒப்பிட்டுப் பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும். 

131. ஒரே மருந்தை ஒருவருக்குத் தொடர்ச்சியாய்ப் பல நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது அதிகரித்த அளவில் கொடுத்து வந்தால் அம் மருந்தினால் உண்டாகக் கூடிய நோய்க்குறிகள் அனைத்தையும் பொதுப்படையாய்த் தெரிந்து கொள்ள முடியாது. 


முன்னதாகக் கொடுக்கப்படும் மருந்து அதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்ட மருந்தினால் தோன்றிய நோய்க் குறிகளில் சிலவற்றை நீக்கும் அல்லது மாற்றும் இவ்விதம் நீக்கப்படும் அல்லது மாற்றப்படும் குறிகளைத் தனியாய்க் குறித்துக்கொள்ளவேண்டும். 

மறு முறை நடத்தப்படும் சுத்தமான சோதனையின் மூலம் அக்குறிகள் உடலின் எதிர்ப்புக் காரணமாய்த் தோன்றியதா அல்லது மாற்று வேலையினால் தோன்றியதா என்பதைத்தெரிந்து கொள்ளும் வரை அவைகளைச் சந்தேகமுள்ளவைகளாகவே கருதவேண்டும். 

132. நோய்ககுறிகள் தோன்றும் வரிசையின் ஒழுங்கையோ அல்லது மருந்து உடலில் தங்கி வேலை செய்யயக்கூடிய கால அளவையோ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 


அவைகளின் குறிகளை அறிவதே போதுமென்று நினைக்கும் சமயங்களில் அம்மருந்தைச் தொடர்ச்சியாய்ப் பல நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்த அளவில் கொடுத்து வருவதே நலம். 

இவ்வழிப்படி முன் பின் தெரியாத, பலமற்ற மருந்துகளின் குறிகளையும் வெளிப்படுத்தலாம். உணர்ச்சிகளை நுட்பமாய் அறியும் உடல்வாகு உள்ளவர்களிடம் இச்சோதனையை செய்து வருவது மிகச் சிறந்தது. 

133. மருந்தை உட்கொண்ட பிறகு ஏதோ ஒரு உணர்ச்சி அதாவது நோய்க்குறி தோன்றுவதாக வைத்துக்கொள்வோம் அக்குறிகளின் உண்மையான தன்மையைத் தெரிந்து கொள்ள சோதனையாளர் அச்சமயத்தில் தன் இருக்கையைப் பலவிதமாய்மாற்றி,அதாவது தாக்கப்பட்டுள்ள பகுதியை அசைத்தல், அறையினுள் அல்லது வீட்டுக்கு வெளியே நடமாடுதல்,நின்று கொள்ளல், உட்காருதல், கீழே படுத்துக்கொள்ளல் முதலிய பல செய்கைகளைச் செய்து அவைகளில் எதனால் நோய்க்குறி அதிகமாகிறது, குறைகிறது அல்லது மறைகிறது, எந்த விதமாய் உடல் இருந்தபோது உணர்ச்சி தோன்றியதோ அந்த விதமாய் உடலை மீண்டும் வைத்தால் அவ்வுணர்ச்சி திரும்பித் தோன்றுகிறதா? உணவு உட்கொள்வது, பானங்களைக் குடிப்பது, பேசுவது, இருமுவது, தும்முவது முதலிய பல உடல் வேலைகளில் எதனாலாவது உணர்ச்சியில் மாறுதல் உண்டாகிறதா? ஆகிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். 


அத்துடன் பகலில் அல்லது இரவில் எந்தநேரத்தில் அக்குறி வழக்கமாகவும் மிகத் தெளிவாகவும் தோன்றுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். 

இவ்வழியினால் ஒவ்வொரு மனநோய்க்குறிக்கும் உள்ள தனிப்பட்ட சிறப்புத் தன்மை வெளியாகும். 

134. வெளியே உள்ள எல்லா (நோயுண்டாக்கும்) பொருள்களும் விசேஷமாய் எல்லாமருந்துகளும் உயிர் உள்ள உடல்களைத் தாக்கி அதனதன் தன்மைக்கேற்றவாறு ஆரோக்கியத்தைக் குலைத்து நோய்குறிகளை உண்டாக்குகின்றன. 


ஆனால் ஒரு மருந்துக்கு உரித்தாயுள்ள நோய்குறிகள் யாவும் ஒரே ஒரு மனிதரிடமோ, ஒரே சமயத்திலோ அல்லது ஒரே சோதனையிலோ தோன்றுவது கிடையாது. 

சில குறிகள் ஒருவருக்கு ஒரே ஒரு சோதனையில் மட்டும் தோன்றுகின்றன. மற்ற குறிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது சோதனையில் தோன்றுகின்றன. அதன் குறிகளில் சில நான்காவது எட்டாவது அல்லது பத்தாவது சோதனையாளரிடம் ஏற்படலாம். 

இன்னும் சில இரண்டாவது, ஆறாவது அல்லது ஒன்பதாவது சோதனையாளரிடம் தோன்றியிருக்கலாம். 

இதைத்தவிர எந்த ஒரு குறியும் எல்லா சோதனையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் ஏற்படுமென்று சொல்ல முடியாது. 

135. ஒரு மருந்தின் சக்தியால் தோன்றக்கூடிய நோயின் முழு விவரங்களையும் அறிந்து கொள்வது எப்படி, பற்பல வித உடல்வாகு உள்ள ஆண:-பெண் இரு பாலருக்கும் பல முறைகள் அம்மருந்தைக் கொடுத்துச் சோதித்தால்தான் அனேகமாக எல்லா விவரங்களும் கிடைக்கும். 


ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள நோயுண்டாக்கும் சக்தியைச் சோதித்தாகி விட்டது என்று நாம் திடமாக நம்ப வேண்டுமானால் அம்மருந்தை எவ்வளவு தடவை சோதித்தாலும் பழைய குறிகளைத் தவிர புதிய குறிகள் எதுவும் தோன்றாமல் இருக்க வேண்டும். 

136. ஒரு மருந்தின் சக்தியினால் உண்டாக்கப்படும் நோய்க் குறிகள் யாவும் ஒரே ஒரு மனிதரிடத்திலேயே தோன்றுவதில்லை. உடல் அமைப்பிலும் அறிவுத்திறனிலும் மாறுபட்டுள்ள பற்பல மனிதர்களிடத்தில் தான் தோன்றுகின்றன என்பவைகளை மேலே குறிப்பிட்டிருக்கிறோம். 


ஆயினும் அழிவற்ற, மாற்ற முடியாத இயற்கைச் சட்டப்படி ஒவ்வொரு மனித உடலிலும் அக்குறிகள் அனைத்தையும் உண்டாக்கும் குணம் மருந்துகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. இந்தக் குணத்தைப் பெற்றிருப்பதால் ஒற்றுமையான குறிகளையுடைய (இயற்கை) நோயுள்ளவர்க்கு மருந்தைக் கொடுத்தால் அம்மருந்தின் குறிகள் யாவும் நோயற்ற உடலில் மிக அரிதாகத் தோன்றும், 
குறிகள் கூட நோயை நீக்க உதவியளிக்கின்றன. 

அச்சமயங்களிலே மருந்து மிகச் சிறிய அளவில் இருந்தாலும் ஹோமியோபதிச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படுவதால் நோயாளியின் உடலில் இயற்கை நோயின் குறிகளை ஒத்த ஒரு செயற்கை நோயைச் அமைதியான முறையில் உருவாகிறது. அதனால் பழைய நோய் விரைவிலும் நிரந்தாமாகவும் நீக்கப்படுகிறது. 

137. சோதனையைச் சுலபமாய் நடத்த நாம் தேர்ந்தெடுக்கும் சோதனையாளர் உண்மையை மதிப்பவராகவும் எல்லா விஷயங்களிலும் மிதமாய் இருப்பவராகவும் உணர்ச்சிகளை உணரக் கூடியவராகவும் அதாவதது தன்னுடலில் உண்டாகும் மிகச் சிறிய உணர்ச்சியைக் கூடக் கிரகித்தறியும் வல்லமையுள்ளவராகவும் இருக்கவேண்டும். 


இத்தகைய சோதனையாளருக்கு மருந்தை மிகவும் மிதமான அளவுகளில் கொடுத்தால் மருந்தின் வேலை மிகத் தெளிவாய்த் தென்படும். 

அதாவது இரண்டாம் வேலையின் குறிகளோ,உயிர்ப்புச் சக்தியின் எதிர்ப்பினால் ஏற்படும் குறிகளோ அதனுடன் கலக்காமல் அவசியமாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிகள் மட்டும் உண்டாகும். 

ஆனால் மித மீறிய அளவுகளிலே மருந்தைக் கொடுத்துச் சோதனைசெய்தால் இரண்டாம் வேலைக் குறிகள் பல தோன்றுவதுடன் முதல் வேலைக்குறிகளும் மிக வேகமாகவும்; கடுமையாகவும் ஏற்படுவதால் குழப்பம் உண்டாகிக்குறிகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போகும் இவைகளைத் தவிர அதிக அளவில் மருந்துகளைக் கொடுத்தால் உயிருக்கு ஆபத்தும் நேரலாம். 

பிறர் உயிரையும் தன்னுயிர் போல கருதுபவர் இந்த தவறைச் செய்ய மாட்டார். 

138. மருந்து உடலில் வேலை செய்யும் காலத்தில் சோதனையாளருக்கு எற்படும் எல்லா உபாதைகளும் ஆரோக்கிய நிலைமையிலிருந்து மாறுபட்ட குறிகளும் மருந்தினால் தான் உண்டாக்கப்படுகின்றன. 


மருந்தை உட்கொள்வதற்குப் பல காலம் முன்னதாக இயற்கையான முறையில் சோதனையாளருக்கு அதைப்போன்ற நோய்க் குறிகள் தோன்றிய குறிகளை மருந்தை உட்கொண்ட பிறகும் தோன்றுமானால் அக்குறிகள் ஏற்படுவதற்குச் சாதமகமான உடல்வாகு சோதனையாளருக்கு இருக்கிறது என்றே நினைக்கவேண்டும். 

இவ்விதச் சந்தர்ப்பத்தில் அக்குறிகள் மருந்தின் விளைவேயாகும். உட்கொள்ளப்பட்ட மருந்து உடலெங்கும் பரவி ஆரோக்கிய நிலைமையில் மாறுதலை ஏற்படுத்தும் சமயத்தில் நோய்க்குறிகள் தாமாகவே தோன்றுவதற்கு இடமில்லை. அவை மருந்தின் விளைவேயாகும். 

139. தன் உடலிலேயே மருந்துச் சோதனையை நடத்த முடியாத போது வைத்தியர் வேறு ஒருவரிடத்தில் சோதனையை நடத்தலாம். 


சோதனையாளர் மருந்தை உட்கொண்டதினால் தன்னுடலில் தோன்றும் உணர்ச்சிகள். உபாதைகள் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவைகளையும் அப்போதைய நேரத்தையும் அவ்வப்போது குறித்துக் கொண்டு வரவேண்டும். 

அத்துடன் மருந்து சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழிந்த பிறகு ஒவ்வொரு குறியும் தோன்றியது. எவ்வளவு நேரம் நீடித்திருந்தது. ஆகிய விவரங்களையும், குறித்துக் கொள்ளவேண்டும். 

சோதனை முடிந்த உடனே வைத்தியர் சோதனையாளரை தன் எதிரில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு நோய்க் குறியைப் பற்றியும் விவரமாய்க் கேட்டறிந்து முக்கிய விஷயங்களை எழுதிக்கொள்ளவேண்டும். 

சோதனை பல நாட்களுக்கு நடத்தப்படும் போது ஒவ்வொரு நாளும் சோதனையாளரை விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் சோதனையாளருக்குத் தன் நோய்க் குறிகளைப் பற்றி நல்ல ஞாபகம் இருக்கும். 

140. தன் நோய்க் குறிகளைச் சோதனையாளரால் எழுத முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் தனக்கு ஏற்படும் குறிகளையும் அவை ஏற்பட்ட விதத்தையும் அவர் வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும். 


சோதனையாளர் தானாகவே வைத்தியரிடம் தெரிவித்த விவரங்களை நம்பத்தக்கவையாக மதிக்கப்படவேண்டும் . அனுமானம் செய்யப்பட்ட (அளவிடப்பட்ட) குறிகளையும் உண்டு அல்லது இல்லை என்று விடை வரக்கூடிய கேள்விகளால் கிடைக்கும் குறிகளையும் கட்டாயமாய் விலக்க வேண்டம்.

 இயற்கை நோய்களின் உருவத்தை அறியும் விஷயமாக என்னென்ன எச்சரிக்கைகளை நாம் கையாள வேண்டுமென்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். (சுலோகம் 83? 84? 85) அவ்வெச்சரிக்கைகளையே அச்சமயத்திலும் நாம் கையாள வேண்டும். 

141. நோய் நொடியற்ற உடல் முன்கூட்டியே அபிப்பிராயம் கொள்ளாத உள்ளப்பாங்கு, உணர்ச்சிகளை எளிதில் கிரகித்தறியும் வல்லமை ஆகிய குணங்கள் பொருந்திய வைத்தியர் மேலே சொல்லப்பட்ட விதிகளுக்கிணங்க மருந்துகளைத்தன் உடலில் கொடுத்துச் சோதிப்பதுதான் சிறந்தது-ஆரோக்கிய நிலைமையில் ஒவ்வொரு மருந்தும் ஏற்படுத்தக் கூடிய மாறுதல்கள்,ஆரோக்கியமான உடலில் அது உண்டாக்கக் கூடிய செயற்கை நோய்கள், நோய்க் குறிகள் ஆகியவைகளைத் தெரிந்து கொள்ள இதுவே சிறந்த வழி மருந்துகளால் தன் உடலில் உண்டாகும் மாறுதல்களைத் திட்டமாகவும் தவறு இல்ல்hமலும் அவரால் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

( * தன் உடலிலேயே மருந்துகளைச் சோதிப்பதால் வைத்தியருக்கு விலை மதிக்க முடியாத வேறு அனுகூலங்கள் ஏற்படுகின்றன. 


மருந்துகளைச் சோதனை செய்த காலத்தில்தான் அனுபவித்த நோய்க் குறிகளினால் ஆரோக்கிய நிலைமையை மாற்றுவதில் அவைகளுக்கு உள்ள வல்லமையைப் பற்றிக் கடுகளவு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. 

நோயுண்டாக்கும் சக்திதான் நோய் தீர்க்கும் சக்தியாக மாறுகிறது. என்பது தெரிந்த விஷயம். தன்னைத்தானே ஆராய்ந்து கொள்வதால் தன்னுள் தோன்றும் உணர்ச்சிகள், தன் சிந்தனைகள் சொல்லும் விதம், குணம் ஆகியவையகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. (ஆத்ம விசாரனையினால்தான் ஒருவனுக்கு உண்மையான அறிவு தோன்றுகிறது.) அத்துடன் வைத்தியருக்கும் தேவையான கவனிக்கும் திறமை ஏற்படவும் இது வழி செய்கிறது.

மற்றவர்களிடத்தில் நடத்தப்படும் சோதனைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் விவரங்கள் அவ்வளவு சுவாராசியமுள்ளதாய் இருப்பதில்லை. பிறரிடம் சோதனையை நடத்தும்போது சோதனையாளர் தன் உணர்ச்சிகளை மாற்றாமல், மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே கூறினாரா இல்லையோ என்று கவலைப்பட வேண்டியிருக்கும். சோதனையாளர் தன்னை எந்த சமயத்திலாவது ஏமாற்றி விட்டாரோ என்ற சந்தேகம் இருக்கும். பிறரிடம் மருந்துகளைச் சோதனை செய்து அவைகளின் நோய்க் குறிகளைக் கண்டுபிடித்து உண்மையை அறிந்து கொள்வதில் இவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன.

இந்த இடையூறுகளை முற்றிலும் நீக்க முடியாது ஆனால் தன் உடலிலேயே மருந்துச் சோதனையை நடத்தினால் எந்த ஒரு இடையூறுக்கும் இடமில்லை மருந்தினால் தன்னுடலில் தோன்றிய உணர்ச்சிகளின் தன்மை அவருக்குத் திட்டவட்டமாய்த் தெரியும் மற்ற மருந்துகளையும் உட்கொண்டு சோதனை செய்ய வேண்டுமென்ற ஆவல் மேன்மேலும் அதிகமாகும். இவ்விதம் தன் உடலிலேயே அடிக்கடி மருந்துச் சோதனைகளை நடத்திக்கொள்வதால் செயற்கை நோய்க் குறிகளைக் கவனித்தறியும் கலையில் அவருக்கு நாளுக்கு நாள் பழக்கம் அதிகமாகிறது.

நோய் தீர்க்கும் மருந்துகளின் உண்மையான மதிப்பையும் உபயோகத்தையும் இச்சோதனைகளில் வைத்தியரின் ஆர்வம் அளவு கடந்து நிற்கும் மருந்துச் சோதனையினால் உடலில் தோன்றும் நோய்க்குறிகள் உடலுக்குத் தீங்கிழைக்குமோ என்ற கவலையே வேண்டாம். மருந்துகளால் அடிக்கடி தாக்கபட்ட சோதனையாளரின் உடல் வைரம் பாய்ந்தது போல உறுதியாகி எல்லாவிதச் செயற்கை, இயற்கை நோய்ப் பொருள்களையும், விரட்டியடித்து வெற்றி காண்கிறது என்பது அனுபவ வாயிலாக வெளிப்படுகிறது.)



142. ஒரு நோயை நீக்குவதற்காக ஒரு மருந்தை கொடுத்த பிறகு தோன்றும் பல நோய்க்குறிகளில் எவையெவை மருந்தினால் தோன்றியுள்ளன. எவையெவை நோயினால் தோன்றியுள்ளன என்று பிரித்துச் சொல்வது மிகக் கடினம் மிகக் கூர்மையாக கவனிக்கும் திறமை உள்ளவர்களாலேயே அது கண்டுபிடிக்க முடியும். 

143. மருந்துகள் பலவற்றை மேலே உள்ளபடி நோயற்ற உடலில் ஒவ்வென்றாகக்கொடுத்துச் சோதித்து அவைகளால் தோற்றுவிக்கப்படும் எல்லா நோய்க்குறிகளையும் கவனமாவும் உண்மையாகவும் குறித்துவைத்துக்கொண்டோமானால் நம்மிடம் ஒரு உண்மையான மருந்துகளின் இயல்புகளைக் கூறும் நூல் ( மெட்டீரியா மெடிகா-Meteria Mesdica ) இருக்கிறது என்று நம்பலாம். ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள நோய்குறிகளை பற்றி உண்மையான பொய் கலப்படமற்ற, நம்பத்தகுந்த விவரம் இந்நூலில் அடங்கியிருக்கிறது. அவ்விவரங்களின் துணை கொண்டு ஹோமியோபதி முறைப்படி இயற்கை நோய்களுக்கு ஏற்றதான மருந்துகளை தேர்ந்தெடுக்கலாம்.

144. மேலே குறிப்பிட்ட மெட்டீரியா மெடிகாவில் கற்பனையான விஷயமெதையும் சேர்க்கக் கூடாது சேர்க்கப்படும் ஒவ்வொரு விஷயமும் உண்மையானதாய் இருக்க வேண்டும். 
145. கணக்கற்ற பற்பல மருந்துகளைச் சோதித்து மனிதனின் ஆரோக்கிய நிலைமையை மாற்றுவதில் அவைகளுக்கு உள்ள உண்மையான சக்தியை ஒழுங்காக அறிந்து கொண்டால் தான், பல்லாயிரக்கணக்காய் இருக்கும் இயற்கை நோய்கள் ஒவ்வொன்றிற்கும் அதனுடன் ஒற்றுமை உள்ள செயற்கை நோயை உண்டாக்கும் பொருளை (குணம் செய்யக்கூடிய ஒற்றுமை உள்ள மருந்தைக்) கண்டுபிடிக்க நம்மால் முடியும். செயற்கை நோய்க்குறிகள் உண்மையாய் இருப்பதாலும் மருந்துச் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஏராளமான நோய்க்குறிகளை வெளிப்படுத்தியதாலும் தகுந்த ஹோமியோபதி மருந்து இல்லையென்று சொல்லக்கூடிய நோய் எதுவுமே இல்லை என்று கூறலாம். மூன்றாவது வினாவுக்கு விடை:- 

146. இயற்கை நோய்களை ஹோமியோபதி முறைப்படி நீக்க மருந்துகளின் உண்மையான வேலைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். மருந்துகளின் உண்மையான வேலைகளை தெரிந்துகொள்ள அவைகளை நோயற்ற மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்த போது செயற்கை நோய்களை தோற்றுவித்த இக்கருவிகளை (மருந்துகளை) உண்மையான வைத்தியர் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது மூன்றாவது வினாவாக அமைந்துள்ளது. 

147. மருந்து சோதனை நடத்தப்பட்ட போது தமக்குள்ள செயற்கை நோய்க் குறிகளை வெளியிட்ட பற்பல மருந்துகளில் எந்த மருந்தின் நோய்க்குறிகள் குறிப்பிட்ட ஓர் இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுடன் காணப்படுகின்றனவோ?அம்மருந்தே அவ்வியற்கை நோய்க்கு ஏற்றவாறு ஹோமியோபதி மருந்தாக இருக்கும் இருந்தே தீரவேண்டும் அந்நோய்க்கு அதுவே அமிர்தம். 

148. நீக்கப்படவேண்டிய (இயற்கை) நோயுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள (செயற்கை நோய்க்) குறிகளை உண்டாக்கும் இயல்பும் சக்தியும் மருந்துக்கு உள்ளது. அதாவது ஒற்றுமையுள்ள செயற்கை நோயை உண்டாக்குகிறது என்ற காரணத்தினால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மருந்து தகுந்ததோர் அளவில் கொடுக்கப்பட்டால் நோயாளியின் உயிர்ப்புச்சக்தியினுள்ளே நுட்பமாக நுழைந்து இயற்கை நோயினால் தாக்கப்பட்டுள்ள அதே உடல் உறுப்புகளையும் பகுதிகளையும் தாக்கி அவ்விடங்களில் தன்னுடைய செயற்கை நோயை புகுத்துகிறது. அதுவரை உடலை பிடித்திருந்த இயற்கை நோயைவிட அதிகச்சக்தியும் ஒற்றுமையும் வாய்ந்த செயற்கை நோய் தோன்றியவுடன் உயிர்ப்பு சக்தி துள்ளியெழுந்து முன்பிருந்த இயற்கை நோயிலிருந்து விடுதலை பெறுகிறது. செயற்கை நோயின் சக்தி அதிகமாய் இருந்தபோதிலும் நாம் உபயோகித்த மருந்தின் அளவு மிகக் குறைவாய் இருப்பதால் அது உயிர்ப்பு சக்தியினால் சீக்கிரமே வெல்லப்படுகிறது. இதனால் உடலிலிருந்து பழைய,புதிய நோய்கள் இரண்டும் நீங்க நீடித்த குணமும் ஆரோக்கியமும் தோன்றுகின்றன. 

149. இவ்வாறு தகுந்த ஹோமியோபதி மருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சரியாக உபயோகிக்கப்பட்டால் என்ன நேருகிறது. கெடுதலான குறிகளுடனும் பலவிதமான உபாதைகளுடனும் காணப்பட்டட நோய் சமீபத்தில் தோன்றியதாக இருந்தாலும், ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது நாட்பட்டதாய் இருந்தாலும் சில நாட்களிலும் மாயமாய் மறைந்து போகிறது. செயற்கை நோய்க்குறிகள் காணப்படுவதில்லை மிகவும் நாட்பட்ட நோய்கள் (விசேஷமாகச் சிக்கலாகிவிட்ட நோய்கள்) நீங்குவதற்கு இன்னும் சிறிது காலம் அதிகமாகத்தான் ஆகும். அலோபதி முறைப்படி சிகிச்சை செய்யப்பட்ட சமயங்களில் இயற்கை நோயுடன் அலோபதி மருந்துகளின் விளைவுகளாகிய செயற்கை நோயும் ஒன்று சேர்ந்து நோயாளியின் உடல் பாழாகி விடுவதால் நோய் நீங்கப் பல காலமாகும். 

150. ஒன்று அல்லது பலம் குறைந்த நோய்க்குறிகள் சிறிது காலமாகத்தான் இருக்கின்றன. என்று சொல்லிக்கொண்டு வரும் நோயாளிக்கு மருந்து தேவை என்று நினைக்கக்கூடிய நோய் இருப்பதாக வைத்தியர் கருதக்கூடாது நோயாளியின் உணவிலும் பழக்க வழக்கங்களிலும் சிறிது மாறுதல் செய்தாலே அக்கோளாறுகள் குணமாகிவிடும். 

1 comments:

  1. நல்லதொரு முயற்சி .பாராட்டுக்கள் .

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer