அறிந்து கொள்ள மட்டுமே ! அனுபவ வைத்தியரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.. சுய வைத்தியம் கூடாது.
மருந்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - 4
9. Moral Affections Want of Moral Feeling :
Abrot. Alco. Am-c. Anac. Ars. Aster. Aur. Bell. Bism. Bufo. Cass. Cham. Chin. Choc. Clem. Coca. Cocc. Coloc. Con. Croc. Cur. Germ. Hep. Hura. Hyos. Kali-br. Kali-c. Kali-n. Lac-c. Laur. Lyc. Nat-m. Nat-ac. Nit-s-d. Nux-v. Op. Ozone. Ph-ac. Phos. Pic-ac. Plat. Psil. Raph. Sabad. Sep. Squil. Stram. Tarent. Thuj. Verat.
நல்லதையே உறுதியாகவும். அசையாமலும் செய்யும் மனம் கொண்டவர், புள்ளையாக இருந்தாலும் சரி. பையனாக இருந்தாலும் சரி சலுகையே கிடையாது,
10. Anger, Answer, When Obliged to :
Arn. Ars. Bry. Cham. Coloc. Nat-m. Nux-v. PH-AC. Puls.
உரிய பதிலை சொல்லும் போது [அவருக்கு] கோபம் வரும்,
அதாவது கணவனோ. மனைவியோ. தலைவியோ. தலைவனோ.
அதிகாரிகளோ. டாக்டரோ. இப்படி சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களிடம்.
கேள்வி கேட்கும் போது அவர்கள் அதற்கு உரிய பதிலை சொல்லும் போது
கோபப்படுதல்,
ஒரு சிலருக்கு திருப்பி. திருப்பி கேட்டால் கோபம் வரும் அது இயற்கை,
கோபம் எல்லா உயிர்களிடமும் இருக்கிறது,
மனதில் பதிவாக பதிந்து விட்டது என்று மகரிஷி. வள்ளலார் சொல்கிறார்,
இவர்கள் எப்படி என்றால் கணவன் வந்து காப்பி போட்டாச்சா என்று
கேட்கிறார் ; போட்டாச்சு என்று அந்த பதிலை சொல்லும் போதே கோபம்.
வெடுக்குன்னு பேசுவார்கள் பாருங்கள் அது மாதிரி,
அதே மாதிரி மனைவி கணவனிடம் இன்றைக்கு வேலைக்கு போறீங்களா
என்று கேட்பார்கள், போறேன் அதுக்கு என்ன இப்போஎன்ன? என்று
வெடுக்குன்னு பதில் சொல்லுவார்கள்,
போறேன் என்பது ANSWER.
அதற்கு என்ன இப்போ என்பது INTERRUPTION.
ஆனால் நமக்கு தேவையான பதில் என்ன?
போறேன் என்பது மட்டும் தானே,
ஆனால் போறேன் அதுக்கு என்ன இப்போ. குடியா முழுவி போச்சு,
ஏன் எப்ப பார்த்தாலும் கேட்கற, இப்படி பல வார்த்தைகள் உச்சரிச்சுக்கிட்டு
போகலாம்,
இது வந்து பொழப்பு. ஜீவனம். அது எல்லாம் இப்ப வேண்டாம்,
மேலும். இன்னும் ஓர் உதாரணம், நோயாளிடம் டாக்டர் பேசும் போது
மருந்து. பத்தியம். சாப்பிடும் முறை. மருந்து கூறிவிட்ட பின்பும்.
பத்தியமில்லை என்று சொல்லி பிறகும் கூட
ஏங்க பாலை குடிக்கலாமா என்பார்,
குடிக்கலாம்.
பசும் பால் குடிக்கலாமா? எருமைபால் குடிக்கலாமா?
கிடைக்ககூடியதை குடிக்கலாம்,
எல்லாமே கிடைக்கும் நீங்க எதை என்று சொல்லுங்க?
பசும் பால் குடித்துக்கோ,
பசும் பால் சாப்பிட்டால் உடம்பு இளைத்துவிடுமே. என்று சொல்கிறார்களே
சரி எருமைபால் குடித்துக்கோ,
எருமை பால் குடித்தால் கொலஸ்ட்ரால் வரும் என்று சொல்றாங்களே,
பச்சை பால் சாப்பிடலாமா? சூடாகவா அல்லது ஆற வைத்து
சாப்பிடலாமா? உப்பு போடலாமா? சர்க்கரை போடலாமா?
இப்படி பத்தியமே இல்லையென்று சொன்னால் போதும் மருத்துவர்க்கு
பொறுப்பு இருப்பதால் கோபப்படுவார்.
ஏமா. பத்தியமே இல்லை என்று சொல்கிறேன், கேட்கிறாயே என்று
கோபத்துடன் பதில் கூறுவார்,
மற்றும் ஓர் உதாரணம்,
என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை.
எப்ப கூட்டிக்கிட்டு வரட்டும்.
காலையில் கூட்டிகிட்டு வாமா, பள்ளி இருக்கிறது,
சரி மாலையில் கூட்டிக்கிட்டு வாமா. டியூசன் மாலையில் உள்ளது,
சரி ஞாயிறு கூட்டிக்கிட்டு வாமா,
ஞாயிறு SPECIAL CLASS உள்ளது,
அரைநாள் லீவோ.PERMISSON -னோ போட்டு கூட்டிட்டு வாமா, முடியாது,
TEST நடக்குதுங்க,
சரிம்மா உங்க பிள்ளை மருந்து கொடுக்க லக்கி இல்லை என்று
(பொறுப்பு இருப்பதால்) உரிய பதிலை சொல்லும் போது கோபத்துடன்
கூறுதல்.
இப்ப பாருங்க இதில் 9 மருந்து வருது,
இந்த இடத்தில் ARS.
நாம் முன்பே MATERIA MEDICA படித்து இருந்தால். ARS காரர் எப்படி
இருப்பார் என்று தெரியும். சுடுநீர் சாப்பிடுவார்,
ARN - மிக விரைவில். கோபம் தாங்க மாட்டான்,
BRY- தொழில் மீது ரொம்ப அக்கறையாக இருப்பார்,
CHAM. - கோபக்காரன்,
COLOCYNTHIS - கடுமையான வெட்டும் வலி, பொறுக்க முடியாது
N-M. - ஏக்கம் பிடித்தவன்.
NUX - அதிகமாக உதாரணம் சொன்னால் பிடிக்காது,
PH-AC, PULS எப்படி இருப்பான் மீண்டும் MATERIA MEDICA படித்து தெரிந்து
கொள்ளவும்,
இப்படி டாக்டர். நோயாளி என்று உலகில் யாருமில்லை,
அனைவரும் நோயாளி, ஏதோ ஒரு நிலையில். பதட்டத்தில்.
தன்மையில் மிக. மிக அதிக அளவாக (அ) குறைந்த அளவாக தாக்கப்பட்டு
உலகில் உள்ள நம் எல்லோரையும் நோயாளியாக தான் நம்மை
வைத்திருக்கிறது.
இயற்கை என்ற இறைவன், நாம் தான் பெரிய ஆபிசர். விஞ்ஞானி. பெரிய ஞானி, பெரிய டாக்டர். பெரிய குற்றவாளி. பெரிய ஜெயில் அதிகாரி என்று..... எல்லா பிரிவினரும் இந்த மன நோயாளியாக தான் இருக்கிறோம்.
இதை தான் HIDE என்கிறார், (மறைத்தல்).
இப்படி உயிர் உள்ள இனம் ஒன்றே உயிரினம்.
அதில் அறிவு வகை. பண்பு உண்டு.
நம்மை ஆட்சிசெய்தவர். நாம் அடிமை என்பதெல்லாம் இயற்கையின் முன்பு
இல்லை, எல்லா பிரிவிலும் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அவ்வளவு தான், நாம் இப்படி தான் ஒவ்வொரு தலைப்புக்குள் இருக்கும்
முன்பே மெட்டிரியா மெடிகா மருந்துகளை படித்து வைத்து இருக்கணும்.
நம்மிடம் பேசும் போது இவர் எந்த தலைப்பு என்று தெரிந்து கொள்ளனும்,
பிறகு மருந்து எடுப்பது சுலபம்,
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க விரும்பும் நாம் , அவர் பேசும் போது நாம் பேசக்கூடாது, பேசினால் தடம் மாறி விடும்,
படிக்காவிட்டாலும். தலைப்பு தெரியாது, மருந்தும் தெரியாது,
கேசும். புரியாது,
யாருக்கும் தெரியாது,
நம்மிடம் (மனிதன்) இருக்கும் பட்டமும், பதவியும் சரி. நாம் பெரிய KING என்ற நினைப்பும் சரி. மருந்துகளும், பல நூல்களின் உதவியும் சரி.
நடிப்பும். ஜம்பமும். வேகமும். அதிகாரமும். பதவியும். சம்பளமும் (அதிக)
பெருஞ்செல்வம். பட்டமும். பதவியும். பேரும் வைத்து ஒரு நோயாளியை
குணப்படுத்த முடியவே முடியாது, என்று அன்போடு அறிவுறுத்தப்படுகிறது,
இனி இதே மாதிரி நீங்கள் அந்த தலைப்புக்குள் சென்று தலைப்பு மாறாமல் விரித்து பார்த்து பொருள் கொண்டு. தலைப்புக்கு வந்து விடவும், தகுந்த மருந்துகளும் இங்கேயே தரப்பட்டுள்ளது, அந்த தலைப்புகளை எடுத்து தொகுத்து. அதில் வரும் முதன்மையான மருந்துகளை எடுத்து தொகுத்து. அந்த மருந்து சரி தானா என்று மெட்டீரியா மெடிக்காவில் பார்க்கனும், ஒரே நேர்கோட்டில் இரண்டு. மூன்று மருந்துகள் வந்துவிட்டால். அதில் ஒன்றை கண்டுபிடிக்க Compartive of Materia Medica வை பார்த்து.
ஒரு மருந்தை தேர்வு செய்து தகுந்த வீரியத்தில் கொடுக்கவும், பொருத்தமாக மருந்தாக இருந்தால் உடனே வேலை செய்யும், இதே போல் தான் பார்க்கனும், நமது இயலாமையை ஏதேதோ பேசி. சொல்லி மழுப்ப கூடாது,
11. Anger, Break things, desire to :
Androc. Apis. Bell. Calc. Carbn-s. Hura. Hyos. Lyss. Nux-v. Sang. Sol-t-ae. Staph. Stram. Sulph. Tarent. Tub. Veart.
கோபத்தின் போது பொருட்களை உடைத்தல் அல்லது உடைக்க விரும்புதல், விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால் கோபம்,
12. Anger, Contradiction, from :
Aesc. Aloe. Am-c. Anac. Ars. Aur. Aur-ar. Bry. Cact. Calc-p. Cocc. Ferr. Ferr-ar. Gall-ac. Grat. Granit-m. Helon. Hura. Ign. Lyc. Medd. Merc. Nat-ar. Nat-c. Nat-Sil. Nicc. Nit-ac. Nux-v. Olnd. Op. Petr. Pitu-a. Prot. Sep. Sil. Stram. Tarent. Thuj. Til. Verat.
என் பேச்சை கேட்காவிட்டால் கோபம் வரும்,
என் கருத்துக்கு எதிராக செயல்பட்டால் போபம் வரும்,
நான் சொன்ன பேச்சை கேட்காவிட்டால் கோபம் வரும்,
13. ANGER eat when obliged to :- Ars.
சாப்பிடுனு சொன்னாலே எனக்கு கோபம் வருதுங்க, உதாரணம் பிள்ளைகளை வா கண்ணு சாப்பிடு கூப்பிட்டாலே கோவிச்சுக்கும்,
14. Anger Him Self :
Adam. Anac. Aloe. Ars. Aur. Bell. IGN. Lyc. Nux-v. Gink-B. Neon. Staph. Sulph.
என் மேலேயே கோபம் வருகிறது என்பார், உதாரணம், பாருங்க வீனா போனவனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டேன் என்பார், பாருங்க அந்த முண்ட பையனை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டேன், இப்ப அவன் தெள்ளவாரி, ஏன் பண்ணிகிட்டேனு என் மேலேயே கோபம் வருதுங்க என்பார்,
15. Graph. Hell. Lac-h. Lap- Anger, Interruption, from :
Androc. Bry. Cench. Cham. Cocc. Germ. Granit-m mar-c. Marb-w. Nux-v.
செருப்பு போட முடியிலைனா. சர்ட் பட்டன் போட முடியவில்லை யென்றால் எங்கே போறிங்க என்று கேட்டால் காலில் இருக்கற செருப்பை உதறி விடுவார், துண்டை தூக்கி எறிந்து விடுவார், அவலட்சனமாட்டம் போறப்ப வாய் வெச்சிட்டியா என்று கோபப்படுதல், இவர் செயல்படுவதை குறிக்கிட்டாலோ. இடையூர் செய்தாலோ. தடுத்தாலோ கோபப்படுவார்,
16 ANGER Noise at :-
Adam. BamB-a. Hep. IP.
சின்னசத்தமோ இறைச்சலோ கேட்டால் கோபம் வரும், எனக்கு அமைதியாக இருக்கணூங்க என்பார்,
17 Anger Noise sleep during:-
Calad.
தூங்கும் போது சின்னசத்தமோ இறைச்சலோ கேட்டால் கோபம் வரும், எவ்வளவு சத்ததிலும் வேலை செய்வேன் ஆனால் தூங்கும் போது சத்தம் கூடாது என்பார், நிம்மதியாக தூங்க வேண்டும் என்பார்,
18. Anger, Past events, about :
Calc. Carb-an. Nat-m. Nit-ac. Sars. Sep. Staph. Sulph.
பழையதைப் பற்றியே நினைத்து கோபப்படுதல், பாருங்க தேவையில்லாம. டாக்டர் எனக்கு குளுக்கோஸ் போட்டார், பல ஆயிரம் செலவு வெச்சிட்டார் என்று இப்ப கோபப்படுவார், இப்படி கடந்த காலத்தை நினைத்து இப்ப சொல்லி கோபப்பட்டால் இது தான் தலைப்பு,
19. Anger Silent Grief :
Alum. Ars. Aur. Bell. Cocc. Coloc. Hyos. IGN. Lyc. N-C. N-M. Nux-v. Ph-ac. Phos. Plat. Puls. Staph. Verat
உள்ளுர வருத்தமுடன் கோபம், கோபத்தை வெளியே காட்டாமல் உள்ளே அடக்கி கொள்பவர், ஏங்க வருத்தபடுறீங்கடூ கேட்க வேண்டியது தானே என்றால் என் புருஷனாச்சே. என் பொண்டாட்டியாச்சே கேள்வி கேட்டால் சோறு போடமாட்டேன் என்றால் என்ன பண்றது... சாப்பாட்டிற்கு லாட்டரி அதனால் தான், என்று உள்ளுக்குள்ளே புளுங்குவார்,
20. Anger, Sudden :
Bar-acet. Bar-c.. Bell. Germ. Hep. Lyc. Merc. Phos. Prot. Puls. Staph. Tub. Stront-c. Cere. Granit-m.
திடீரென்று கோபப்படுபவர், எனக்கு பாருங்க டக்குன்னு கோபம் வந்திடும், பேசிக்கிட்டே இருப்பார்ங்க. டக்குன்னு கோபப்படுவார் என்பாள் அவர் மனைவி,
21. Anger, Talk Indisposed to :
Am-m. Bry. Hydrog. Ign. Nat-m. Petr. Puls. Stann. Staph. Stront-c. Sul-ac. Verat.
கோபம் வந்தால் எதுவுமே பேசாமல் அமைதியாக [உம்முன்னு] இருப்பார், இந்த பையனுக்கு கோபம் வந்தால் தனி அறையில் போய் உட்கார்ந்திடுதுங்க என்பார்கள்,
22. Anger, Tear himself to pieces, could :
Sulph
தன் சேலை. வேஷ்டியை கிழிப்பதும் பொருளை உடைத்து தூளாக்குவதும், மரத்தை. பாத்திரத்தை நொருக்குவார்,
சண்டையில் கூட என்னிடம் மோதினால் நார். நாராக கிழிச்சிடுவேன். குத்து. குத்துனு கும்மிடுவேன். நொருக்கிடுவேன் என்பார்,
23. Anger, Throws things away :
Androc Camph. Cham. Cina. Coff. Coloc. Hydrog. Kreos. Ozone. Prot Staph. Thea. Tub. Tarent.
கையில் கிடைத்த பொருளை தூக்கி எறிதல். தூக்கி எறிந்து பேசுதல், அண்டா. குண்டா சொம்பு. தட்டு. பைல் தூக்கி எறிவார். பெரியோரையும் தூக்கி எறிந்து பேசுவார்,
24. Anger, Touched when :
Ant-c. Cham. Cina. Iod. Lach. Sanic. Tarent
முன் கோபக்காரர்கள், இவரை சிறிது சீண்டினாலும். கோபம்,
ஏன் என்றால் இவர் கோபத்தில் நிரம்பியிருப்பார், இவர் முன்பு தூரமாக நின்று கொண்டு ஒரு தும்பல் தும்பினாலும். காத்துல என் கிட்ட எச்சி வராதா என்பார், நாம் சொறிந்து கொண்டால் நம்மை வந்து அடிப்பார்கள்,
25. Anger, Trembling with :
Acon. Alum. Ambr. Arg-n. Aur. Cham. Chel. Cop. Daph. Ferr-p. Gels. Lyc. M-aust. Merc. Nit-ac. Nux-v. Pall. Petr. Phos. Plat. Ran-b. Sep. Staph. Yohim. Zinc.
கோபத்தில் நடுங்குதல், கோபத்தில் நாக்கு உளரும். கை. கால் நடுங்கும், தொடை கால்கள் எல்லாம் ஆடும், வெறி நாய்களை கூட பார்க்கலாம், கர்ஜனை உறுமுதல் எல்லாம் இது தான், நடுக்கல் தான், தாடை கூட ஆடும்,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!