அப்படி கற்றுக்கொண்டாலும் பதவியை, பொருளை, கவுரவத்தை இழக்க வேண்டும் என்பதாலா?
நீடித்த நோய் ஒன்றைக் கொடூரமான மருந்தைக் கொண்டு சிகிச்சை செய்தால், அவ்வியற்கை நோயுடன் வேற்றுமையுள்ள செயற்கை நோயொன்று உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும், அம்மருந்து கொடுக்கப்பட்டு வரும் காலங்களில் இயற்கை நோய் அடக்கப்பட்டே இருக்கிறது என்பதையும், மருந்தின் கொடுமையினால் நோயாளியின் உடல் வலிமை குறைந்து, இனி மருந்து கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு, அதை நிறுத்திய பின்பு அடக்கி வைக்கப்பட்ட இயற்கை நோய் திரும்பி வருகிறது (Side Affect).என்பதையும் அலோபதி வைத்தியர்களால் அறிய முடியவில்லையா?
அரிப்புடன் கூடிய சரும நோய்களுக்கு கடுமையான பேதி மருந்துகளை அடிக்கடி கொடுத்து வந்தால் மிக விரைவில் சரும நோய் மறைந்து விடுகின்றன.
ஆனால் செயற்கையான (நோயுடன் ஒற்றுமை இல்லாத) குடல்களின் நோயை (கடுமையான பேதியை) இனி தாங்க முடியாது என்ற நிலையில் இனி பேதி மருந்துகளை உட்கொள்ளமுடியாது என்னும் போது நோயாளியிடம் முன்பு தோன்றிய சரும நோய் தற்போது ஏற்படும்.
அல்லது உள்ளே இருக்கும் சோரா விஷம் ஒரு கெடுதலான குறியைத் தோற்றுவிக்கும்.
அதனால் தலைவலியும் திருகு வலியும் சேர்ந்து கொண்டு கடுகளவும் குறையாத பழைய நோயுடன் ஜீரணக் கோளாறும் உடல்வலிமைக் குறைவும் சேர்ந்து கொள்ளும்.
நீடித்த நோயை நீக்கும் நோக்கத்துடன் அலோபதி வைத்தியர்கள் நோயாளி உடலின் வெளிப்புறத்தில் (சருமத்தில்) செயற்கை புண்களை உண்டாக்கி அப்புண்களை ஆற விடாமல் செய்து வருகின்றனர். அப்படி செய்வதால் ஒரு நீடித்த வகை நோயை நீக்க முடியாது.
எப்படி என்றால் உள்ளே உள்ள நோயின் குறிகளுடன் இது வேற்றுமை குணம் கொண்டது, மாறானதும் கூட புண்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் போது அவைகளினால் வேதனையும் அதிகரித்து விடுகிறது.
வேதனை இயற்கை நோயை விட வலிமை பொருந்தியதாகவும் வேறுபட்டும் இருப்பதால் இயற்கை நோய் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை அடக்கப்படலாம்.
அவ்வாறு நோய் அடக்கப்பட்டு இருக்கும் போது நோயாளியின் உடல் வலிமை படிப்படியாக குறைந்து விடுகிறது. சருமத்தில் செயற்கை புண்களை உண்டாக்கி ஆறவிடாமல் செய்து வந்தால், கை கால் வலிப்பு வருடக்கணக்கில் அடங்கிதான் இருக்கும்.
ஆனால் புண்களை ஆறும்படி விட்டவுடன் மீண்டும் கை கால் வலிப்பு தோன்றும் மற்றும் தற்போது முன்பைவிட கடுமையாகவும் தோன்றும். சொறி சிரங்குகளை அடக்க பேதி மருந்துகளை உபயோகிப்பது கை கால் வலிப்பை அடக்க சருமத்தில் செயற்கை புண்களை ஏற்படுத்தி அவைகளை ஆறவிடாமல் செய்வது ஆகிய காரியங்கள் இயற்கைக்கு மாறுபட்டவை.
நோயாளியின் உடல் வலிமையை உறிஞ்சி குடிப்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அலோபதி முறையில் பற்பல வகைப்பட்ட நோய்களை நீக்குவதற்கு என்று தற்போது கண்ட கண்ட மருந்துகளை கலந்து கொடுக்கும் (சிரப் (அ) டானிக்) வழக்கம்.
மேலுள்ள இரண்டையும் விட மிக மிகக் கொடியது நோயாளியின் உடல் வலிமையை முழுதும் உறிஞ்சிவிடுகிறது.
ஒரு சில நாட்களுக்கு நோயை அடக்கி வைப்பதை தவிர அவைகளால் எச்சமயத்திலும் நோய் தீர்க்கப்படுவதில்லை. அது தவிர அம்மருந்துகளை நீடித்து கொடுப்பதால் பழைய இயற்கை நோயுடன் புதிய செயற்கை நோயும் சேர்ந்து கலந்து விடுகிறது.
குறிப்பு:
தற்காலத்தில் மனதிலும், உடலிலும் இப்படி குழப்பம் ஏற்பட்ட பிறகு உடலில் எங்கு வேண்டுமானாலும் (ஜீவகாந்த சக்தி) கட்டிகளை ஏற்படுத்துகிறது. இதை தான் புற்றுநோய் என்கிறார்கள். (அதற்கு) கட்டிக்கு மருந்தும் தருகிறார்கள். சரியாகாததால், ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருப்பதை இப்போதும் காணலாம்.
குறிப்பு:
வலிப்புக்கும் மூலநோய்க்கும் உடலில் புண்களை உண்டாக்குவது பாபிலோன் வை(பை)த்தியம். சரும நோயை மறைக்கும் பேதிமருந்தை தருவது சித்த மருத்துவமாகும்.
(40). மூன்றாவதாகப் பல காலமாய் உடலில் வேலை செய்த பிறகு புதிய நோய் (அலோபதி மருந்தால்) வேற்றுமை குணமுள்ள பழைய நோயுடன் சேர்ந்து கலப்பு நோய் ஒன்றை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாகப் பழைய புதிய நோய்கள் இரண்டும் நோயாளியின் உடலில் தத்தம் தகுதிக்கேற்ப உறுப்புகளை அடைந்து தனித்தனியே இருந்து வருகிறது.
சிபிலிஸ் (மேககிராந்தி) நோயுள்ளவரை சோரா விஷம் தாக்குவதையும், அதே போல் சோரா விஷம் உள்ளவரை சிபிலிஸ் நோய் தாக்குவதையும் இதற்கு உதாரணங்களாய் கூறலாம். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று வேற்றுமையுள்ளவை. ஆதலால் ஒன்றை மற்றொன்று நீக்காது குணமும் செய்யாது இதைச் சற்று விளக்கமாய்க் கீழே எழுதுவோம். மேகக் கிராந்தி உள்ள ஒருவர் உடலில் சோரா விஷம் அதிகரித்தவுடன், மேகக்கிராந்தி குறிகள் அடக்கப்பட்டு சோரா விஷத்தின் கூறுகளாகிய சருமக் கோளாறுகள் வெளிப்படும்.
ஆனால் சிறிது காலம் கழிந்தவுடன் இரு விஷங்களும் ஏறக்குறைய சம பலம் உள்ளவையாதலால் கலப்பு நோயாய் மாறிவிடும். அதாவது ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தை பிடித்துக் கொண்டு தனித்தனியே உடலில் குடியிருந்து கொண்டு வருகிறது. அதனால் இப்போது நோயின் அளவு அதிகமாகி குணம் செய்வது சிரமம் ஆகிவிடுகிறது.
குறிப்பு:
இதைத்தான் எய்ட்ஸ் என்கிறது அலோபதி மருத்துவ உலகம். வேற்றுமை குணமுள்ள இரு திடீர் தொற்று நோய்கள் உதாரணமாகப் பெரியம்மையும், சின்னம்மையும் ஒருவர் உடலில் சந்திக்கும் போது ஒன்றை மற்றொன்று அடக்கி செயலற்றதாகச் செய்துவிடுகிறது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
ஆயினும், அவை கடுமையாகவும் பெருவாரியாகவும் தோன்றும் காலங்களில் ஒன்றை மற்றொன்று அடக்குவது போய் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரே உடலில் கலப்பு நோயாக தோற்றமளிக்கிறது.
இந்நிகழ்சிகள் மிக அபூர்மாகவே ஏற்படுவது வழக்கம். (இதைத்தான் இன்று புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது.)
குறிப்பு:
இவ்வாறு நோயை அப்போதைக்கு சரி செய்கிறோம் என்று அலோபதி மருந்து ஆண்டிபயாடிக் தரப்படுகிறது. அப்போதைக்கு மறைகிறது. அதனால் நாளை என்னவாகும் பாருங்கள் விபரிதம் அல்லவா ஏற்படும்.
ஏற்கெனவே பிறவித்தொடராக செய்த பாவம் தான் கருமையத்தில் பதிந்து வரிசையாக உடலின் பகுதியில் துன்பமாக காட்டுகிறது.
இப்படி முன்பு கூறப்பட்டபடி வைத்தியம் செய்வதால் ஆன்மாவில் (கருமையத்தில்) நோயின் சுமை மேலும் அல்லவா சுமத்தப்படுகிறது.
இதே இடத்தில் மகரிஷி கூறுவதாவது.
தன் உடம்புக்கு கேடு செய்யாதே (மேலே கண்ட மருந்துகள் என்ன செய்கிறது பாருங்கள்). பிறர் உடம்புக்கு கேடு செய்யாதே (அலோபதி டாக்டர்கள் என்ன செய்யகிறார்கள் பாருங்கள்) செய்கிற பரிகாரமும் பிற்காலத்தில் பக்க விளைவாக வந்து விடுகிறது.
(உடலுக்கும் உயிருக்கும் தீமை செய்யாதே. உடல் உறுப்பை அறுத்துவிடாதே. தூக்க மருந்து, வலி மருந்து தந்து உணர்ச்சியை மழுங்க செய்து உயிருக்கு கேடு செய்யாதே என்கிறார் ஹானிமேன்.)
அதாவது பாடல்:
தனக்கும், பிறருக்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும் தீமை செய்யாதே என்று கூறுகிறார். நன்கு இந்த இடத்தில் சிந்தித்து பாருங்கள் சிந்திக்க தெரிந்தவர்களுக்கெல்லாம் இதுவும் அதுவும் புரியும்.
(41). அலோபதி முறையில் மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்வதினால் ஏற்படும் கலப்பு நோய்களைக் கணக்கிட முடியாது. இடைவிடாமல் (அலோபதி) தகுதியற்ற மருந்துகளை கொடுப்பதால் அம்மருந்துகளின் தன்மைக்கு இணங்க பழைய இயற்கை நோயுடன் மிகக் கொடிய, புதிய செயற்கை நோய் ஒன்று இப்போது சேர்க்கப்படுகிறது.
அவ்வியற்கை, செயற்கை நோய்கள் ஒன்று கூடி ஒரு கலப்பு நோயாக இப்போது மாறுகிறது. ஒன்றுக்கு இரண்டாகவும் சிக்கலாகியதால் தற்போது நிலைமை மோசமாகி குணமாவது மிக மிக கடினமாகி விடும். பறங்கி புண் உள்ள மேக்கிராந்தி நோயுடன் சோரா விஷ ஆதிக்கமோ அல்லது கெட்ட சதை வளர்ச்சி செய்யும் மேக வெட்டையோ சேரும் போது அந்நிலைமைக்கு தகுதியற்ற அலோபதியில் பாதரசம் கலந்த மருந்துகளை அதிக நாட்களுக்கு, நீடித்து கொடுத்து சிகிச்சை செய்தால் நோய் குணமாவது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, பாதரச விஷத்தனால் தோன்றும் புதிய செயற்கை நோயும், பறங்கி புண்ணுக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு பயங்கரமான நோயும் ஒன்று சேர்ந்து உடலை நாசம் செய்துவிடுகின்றன.
இப்போது மிக மிக சிரமப்பட்டுதான் நோயாளியின் ஆரோக்கிய நிலைமையை மீட்க முடியும்.
(42). சிற்சில சமயங்களில் ஒருவர் உடலில் இரண்டு அல்லது மூன்று இயற்கை நோய்களை ஒரே நேரத்தில் தோன்ற இயற்கையே அனுமதிப்பதை மேலே பார்த்தோம். ஆனால் வேற்றுமை குணமுள்ள நோய்கள் தான் அவ்வாறு தோன்றுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்
ஆதலால் அவை ஒன்றை ஒன்று நீக்கவோ, குணம் செய்யவோ முடியாது. ஆகவே அவை ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தை பிடித்து கொண்டு நோய் செய்து உயிரை போக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவும்.
(43). இயற்கை கற்பிக்கும் இணையற்ற கல்வி. ஒற்றுமை குணமுள்ள இரு நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போது அதாவது பழைய நோயை விட வலிமை வாய்ந்த புதிய நோயொன்று தோன்றும் போது ஏற்படும் விளைவு முற்றிலும் மாறானது அத்தகைய சந்தர்ப்பங்களில் இயற்கை எவ்வாறு நோயை குணம் செய்கிறது என்பதை பார்ப்பதுடன் நோய் எவ்வழியில் நீக்கப்பட வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பு:
வான்காந்தத்தைதான் ஹானிமேன் இயற்கை என்கிறார். (இதன் விளக்கத்தை சுலோகம் 20ன் பின்குறிப்பில் பார்த்துக் கொள்ளவும்.)
(44). ஒற்றுமை குணமுள்ள இரு இயற்கை நோய் ஓர் உடலில் சந்திக்கும் போது ஒன்று மற்றொன்றை விரட்டுவது கிடையாது. புதிய நோயின் ஆட்டம் அடங்கியவுடன் பழைய நோய் தலை தூக்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமான அடக்குமுறையும் இப்போது ஏற்படுவது இல்லை. தத்தம் தேவைக்கு ஏற்றபடி வெவ்வேறு உடல் உறுப்புகளைப் பீடித்து தனித்தனியாக இயங்குவதோ அல்லது ஒன்று சேர்ந்து கலப்பு நோயாக காட்சியளிப்பதோ கிடையாது.
45). சந்திக்கும் நோய்கள் இரண்டும் தன்மையிலே மாறுபட்டிருந்தாலும் தனித்தனியே உடலில் தோற்றுவிக்கும் நோய் குறிகளில் ஒற்றுமையுள்ளவைகளாயின், தவறாமல் ஒன்றை மற்றொன்று அழித்து விடுகிறது.
அதாவது அவ்விரண்டில் அதிக வலிமையுள்ள புதிய நோய் வலிமை குறைவாயுள்ள பழைய நோயை அழித்துவிடுகிறது. இதற்கு காரணம் கூறுவது மிக எளிது. வலிமை குறைந்த பழைய நோயுடன் ஒற்றுமையாக இருக்கும் காரணத்தால் அந்நோய் உடலில் எந்த பகுதியில் உறுப்பில் புகுந்து வேலை செய்துவருகிறதோ அந்தந்த உறுப்புகளிலும் பகுதிகளிலும் புதிய நோயும் புகுந்து விடுகிறது.
அதனால் பழைய நோய் தங்குவதற்கு இடம் இல்லாமல் உடலை விட்டு போய் விடுகிறது.
(46). ஒற்றுமையாக இருந்த காரணத்தால் ஏற்கனவே உடலில் இருந்த நோய்களைப் புதியதாகத் தோன்றிய நோய்கள் ஹோமியோபதி முறைப்படி குணம் செய்திருக்கும் இந்த விஷமாக பல உதாரணங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் எடுத்து கூறுவது இங்கு அவசியமில்லை.
ஏனெனில் மற்றவர்கள் மறுக்கவோ சந்தேகப்பட முடியாத விசயங்களை மட்டும் நாம் கவனிப்போம். விஷக்காற்றின் மூலம் பரவும் அம்மை நோயை மட்டும் குறிப்பாக எடுத்து பார்ப்போம். அம்மை நோய்களில் பெரியம்மை அதன் பெயருக்கு ஏற்றபடி பெரியதாகவே இருக்கின்றன. முதன்மையாகவும் இருக்கிறது.
அந்நோயில் ஏராளமான அபாயகுறிகள் தோன்றுவதால் அதை கண்டு மக்கள் நடுங்குகின்றனர். அதற்கு முன்னதாக உடலில் இருந்த பல நோய்களை அவை ஒற்றுமை குறிகளை கொண்டிருந்தமையால் குணம் செய்திருக்கிறது.
(பெரியம்மை நோயே குணம் செய்திருக்கிறது). கண்களில் கடுமையான வேக்காட்டை உண்டாக்கிப் பல சமயங்களில் குருடாக்கவும் செய்யும்.
பெரியம்மை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நீடித்த கண்வேக்காடு இருந்த ஒருவரின் உடலில் பெரியம்மை விஷத்தை குத்திச் செலுத்தியவுடன் அந்நோய் இருந்த இடம் தெரியாமல் குணமடைந்தது. தலையில் இருந்த பொருக்குகளை போக்குவதற்காக ஏதோ ஒரு மருந்தைத் தடவிக் கொண்டதால் ஒருவக்குக் கண் பார்வை மறைந்துவிட்டது.
இரண்டு வருடம் கழித்து அவருக்குப் பெரியம்மை விமூத்தை உடலில் குத்திச் செலுத்தியவுடன் மறைந்திருந்த பார்வை திரும்பி வந்துவிட்டது. பெரியம்மையில் காது செவிடாவதும் மூச்சுத்திணறலும் அடிக்கடி காணப்படும் கோளாறுகளாகும்.
நீடித்த செவிட்டுத் தன்மையோ மூச்சுத் திணறலோ இருந்தவர்களுக்குப் பெரியம்மை தோன்றி அதன் உச்ச நிலைமையில் இருக்கும் போது அந்நோய்கள் நீங்கி விட்டன. விதை வீக்கம் பெரியம்மையில் பல சமயங்களில் உண்டாகும் கோளாறுகளில் ஒன்று. மிகக் கடுமையாகவும் ஏற்படக்கூடும்.
அடிப்பட்டு இடது விதையில் கல் போன்ற கடினமான வீக்கம் இருந்த ஒருவருக்குப் பெரியம்மை ஏற்பட்டவுடன் குணம் தோன்றியது. பெரியம்மையில் நோயாளிக்கு துன்பம் தரும் கோளாறுகளில் வயிற்றுக் கடுப்பும் ஒன்று.
வயிற்றுக் கடுப்பு நோய் இருந்த ஒருவருக்குப் பெரியம்மை ஏற்பட்டவுடன் வயிற்றுக் கடுப்பு நீங்கியது. பெரியம்மையும், பெரியம்மை தடுப்பு மருந்தும் ஒற்றுமைக் குறி உள்ளவை.
ஆனால் பெரியம்மைத் தடுப்பு மருந்தை விட பெரியம்மை வலிமை வாய்ந்தது. ஆதலால் பெரியம்மைத் தடுப்பு மருந்தைக் குத்தியவுடன் ஒருவருக்குப் பெரியம்மை தோன்றினால் தடுப்பு மருந்தை அது பயனற்றதாகச் செய்துவிடும்.
மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் சமயத்தில் பெரியம்மை தோன்றுமானால் அதன் கடுமையைத் தடுப்பு மருந்து பெருமளவு குறைத்துவிடும். பெரியம்மைத் தடுப்பு மருந்தில் பெரியம்மையைத் தடை செய்யும் வல்லமையுடன் வேறொரு வகையான சரும நோயை உண்டாக்கும் தன்மையும் இருக்கிறது.
தடுப்பு மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் காலத்தில் உடம்பு முழுவதும் கடுமையான அரிப்புடன் வட்டமான, சிவந்த சிறு புள்ளிகள் தோன்றும்.
இவ்விதமான சரும நோய், பெரியம்மை தடுப்பு மருந்து உடலில் குத்தப்பட்டவுடன் குணமடைந்து விடுகிறது. பெரியம்மைத் தடுப்பு மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் சமயத்தில் ஜுரம் ஏற்படுகிறது.
முறைச் ஜூரம் இருந்த இரண்டு பேர்களுக்கு பெரியம்மைத் தடுப்பு மருந்தைக் குத்தியவுடன் ஜூரம் குணமடைந்து விட்டது. ஜூரங்கள் ஒற்றுமையுள்ள நோய்களானதால் ஒரே உடலில் இரு ஜூரங்கள் சேர்ந்திருக்க முடியாது. கக்குவான் இருமலில் காணப்படும் ஜூரமும் இருமலும் சின்னம்மையிலும் காணப்படுவதால் அவ்விரு நோய்களும் ஓரளவு ஒற்றுமையுள்ளவை.
அதனால் ஒரே சமயத்தில் இரு நோய்களும் பெருவாரியாகப் பரவியிருந்தபோது சின்னம்மையினால் தாக்கப்பட்டிருந்த குழந்தைகளை கக்குவான் இருமல் அச்சமயம் தாக்கவில்லை.
கக்குவான் இருமல் சின்னம்மையுடன் முழுவதும் ஒற்றுமையுள்ளதல்ல. அதாவது சின்னம்மையில் காணப்படும் சருமக் கோளாருகள் கக்குவான் இரும்பலில் ஏற்படுவதில்லை.
கக்குவான் இருமலுக்கும் சின்னம்மை போன்ற சருமக்கோளாறுகளை உண்டாக்கும் சக்தி இருந்தால் சின்னம்மையினால் தாக்கப்பட்டவர்களுக்கு என்றென்றும் கக்குவான் இருமல் ஏற்படாது. சின்னம்மையின் சருமக் கோளாறைப் போன்றதொரு சருமக் கோளாறு இருந்த ஒருவருக்குச் சின்னம்மை தோன்றியவுடன் அச்சருமக் கோளாறு குணமாகி விட்டது.
(47). நோயை விரைவிலும் நிரந்தரமாகவும் நிச்சயமாகவும் நீக்க எத்தகைய செயற்கை நோய்ப் பொருளை (மருந்தை)த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் வைத்தியருக்குக் கற்றுக் கொடுக்க மேலே காட்டிய இயற்கையின் வழியை விடச் சிறந்தது வேறொன்றுமே இல்லை.
(48). உடலிலுள்ள நோயை வைத்தியரின் திறமையாலோ அல்லது அதனுடன் வேற்றுமை கொண்ட மற்றொரு நோய்ப்பொருளாலோ (அது எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும் சரி) எந்த ஒரு சமயத்திலும் நீக்க முடியாது.
ஒற்றுமையும் சிறிது அதிக வலிமையும் உள்ள நோய்ப் பொருளால்தான் நீக்க முடியும் என்பதை மேலுள்ள இயற்கையில் ஏற்படும் உதாரணங்களிலிருந்து தெரிந்து கொண்டோம். அழிவற்ற, மாற்ற முடியாத, இதுவரைகண்டுபிடிக்கப்படாத இயற்கைச் சட்டப்படியே இவை நிகழுகின்றன.
பயனுள்ள நிறைய தகவல்கள் நண்பரே நன்றி
ReplyDelete