Breaking News
Loading...
Saturday, February 13, 2016

ரெபரெட்டரி

Saturday, February 13, 2016
கென்ட் மைன்ட், ஜெனராலிடிஸ், முதன் முறையாக உடலில் இயங்கும், ஜீவகாந்த சக்தியை முழுமையாக அதை தற்கால அலோபதியில் உறுப்பை பார்ப்பது போலவே, உறுப்புகளை எழுதி Dr. J.T.கென்ட் அவர்கள் விளக்கியுள்ளார். 

அந்நூலின் பெயர் கென்ட் ரெபரெட்டரி ஆகும். 

ஆனால் அவர் எழுதிய LECTURE WRITTING என்ற நூலை பார்த்தால் எப்படி கேஸ் ரெக்கார்டு செய்ய வேண்டும் என்பது காண முடியும்? அவரது வெற்றி, தோல்விகளை பற்றி அப்படியே கூறியுள்ளார். 

(இடம் சுட்டி விளக்கியுள்ளார்.) மற்றும் அவர் எழுதிய KENT PHILOSOPHY என்பதில் ஆர்கனான் ஆப் மெடிசன் என்ற 2வது நூலையும் மிஞ்சியவாறு அதனை பற்றியும், இயற்கை நிகழ்வுகளை மருத்துவ சாஸ்திரத்தை மிக, மிக தெளிவாக கூறியுள்ளார். 

(இது ஆர்கனான் ஆப் மெடிசனுக்கே, உயிரோட்டமாக அவ்வளவு இனிமையாக காணப்படுகிறது). 

அதை படித்து புரிந்து கொள்ளும் போது சமஸ்கிருதம் சொல்கிறது, 
1. ஆணவம்,
2.கன்மம், 
3. மாயை. இது ஒவ்வொரு மனிதனிடமும் உண்டு என்கிறது. மற்றும், 
4. மனம்.
5. புத்தி,
6.அகங்காரம்,
7. சித்தம் என்கிறது. 

மேலே கண்ட 6ம் கரைந்து சித்தம் (தெளிவு) பிறக்கிறது. 

ஆனந்தம் மலர்கிறது. உண்மையான மகிழ்ச்சி (பேரின்பம் பிறக்கிறது.)

 அதை படித்து, பார்க்கும் போது, மனம் மற்றும், பொதுக்குறிகளை பிடித்து கொடுத்தால் போதும் என்கிறார்.

கடைசியில் மனக்குறி ஒன்றே போதும் என்று இறுதி நாளில் கூறிவிட்டார். 

அதே போல் சிந்தடிக் ரெபரெட்டரியை எழுதிய ஆசிரியர்கள் நன்கு ஆராய்ச்சி செய்து, அதிகமான தெளிவான, முழுமையான செய்திகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில், கூறிவிட்டார்கள். 

அதாவது 3 தன்மையில் மட்டுமே கூறுகிறார். 1. மனம், 2. பிறப்புறுப்புகள், 3. பொதுக்குறி எல்லா உறுப்பிலும், பரவியிருப்பது. இதை ஜீவகாந்தம் என்றும், நோயின் அடிப்படை மியாசம் பதிவு என்றும் கூறுகிறார். 

உடல் உறுப்புக்கு முதலிடம் இல்லை. முக்கியமில்லை, 

ஆகவே மியாசம், அதன் வகை பின்பு குறிகளை தான் பார்க்கனும் என்கிறார். 

அப்படி பார்த்து கொடுக்கும் போது குறியும், மியாசமும், உறுப்பிலுள்ள நோயும் (தடை) போய்விடும். அது உண்மை, 

அதை படித்து பயன்படுத்தி பாருங்கள். உண்மை தான் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 கெண்ட் அவர்களது நூலை எப்படி பயன்படுத்த வேண்டும்? 

எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? 

உறுப்பினுள் சென்று மனதை மனக்குறிகளின் 4 வகைகளை பிடிப்பது எப்படி குறைந்த மருந்துகளை கொண்டே ஹோமியோபதி வைத்தியம் செய்வது எப்படி,

 என்பதை

 HOW TO CASE TAKING? 

HOW TO USE THE KENT’S REPERTORY? 

என்ற மிக, மிக சிறிய நூலை எழுதியவர். 

சமீப காலத்தில் வாழ்ந்தவர், Dr. BIDWILL M.D., NEWYORK. 

இதை படித்தால் நவரத்தினங்களை போல உருவத்தில் சிறிதானாலும் மதிப்பு மிக்கதாகும். 

படித்து பார்த்து புரிந்து கொள்ளவும்.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer