Breaking News
Loading...
Friday, March 28, 2014

தும்பை

Friday, March 28, 2014
தும்பை வேர்,-தும்பைப் பூ,
தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.
மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி.....
தும்பைப் பூ
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.
தைவேளைஇலை
சாறை 1 துளி காதில் விட்டால் சீழ் வருவதுக் குறையும்.
3 தைவேளை இலையை எடுத்து கையில் வைத்து கசக்கி 2 அல்லது 3 சொட்டு காதில் விட்டால் காது குத்தல், காது இரைதல், காதில் சீழ் வடிதல், காது மந்தம் ஆகியவை தீரும்.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer