Breaking News
Loading...
Sunday, March 20, 2016

கோடை காலம்

Sunday, March 20, 2016
கோடைகாலம் (Summer) என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும்.
Image result for கோடை  நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவின் மூலம் இக்காலத்தை அறியலாம். 

புவியில் அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில் பருவகாலங்கள் வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு காலங்களில் தொடங்குகின்றன.
Image result for கோடை பிரிட்டனில் கோடைகாலம் மே மாத மத்தியில் தொடங்கி ஆகஸ்ட் மாத மத்தியில் நிறைவடையும்.

 சீன வானிலையில், மே 5 அல்லது அதையொட்டி ஆரம்பமாகும் கோடைகாலம் ஜிகி (சூரிய குடும்பம்) அல்லது லிசியா என்று அழைக்கப்படுகிறது. மேலும் அது கோடைகால ஆரம்பம் என்றும் அழைக்கப்படும். சீனாவின் கோடைகாலம் ஆகத்து 6 அல்லது அதையொட்டி முடிவடைகிறது. 

அயர்லாந்தின் தேசிய வானிலை மைய ஆய்வு அடிப்படையில் சூன், சூலை, மற்றும் ஆகத்து மாதங்கள் கோடைகாலம் ஆகும். எனினும் அந்நாட்டு நாட்காட்டியின் படி கோடைகாலமானது மே 1 ஆம் தேதி தொடங்கி ஆககஸ்ட் 1 ஆம் தேதி முடிவடைகிறது. 

தென் மற்றும் தென்மேற்கு ஆசியாவில் எங்கெல்லாம் மழைப்பொழிவு ஏற்படுகிறதோ அங்கு கோடைகாலம் என்பது பொதுவாக மார்ச் முதல் மே/சூன் மாத ஆரம்பம் வரை இருக்கும். அது அவர்களுக்கு அந்த வருடத்தின் வெப்பமான காலம் என்பதுடன், அதுவே பருவமழையின் இறுதிக் காலமாக வரையறுக்கப்படுகிறது

அமெரிக்காவில் கோடைக்காலமானது பொதுவாக கோடை சூரியகணநிலை (சூன் 20 அல்லது 21) நாள் தொடங்கி இலையுதிர்கால சம இரவு நாள் (செப்டம்பர் 22 அல்லது 23) வரையான காலமாகும். 

அதே போல கோடைகாலத்தில் நிலவும் மற்றொரு நடைமுறை வழக்கம் என்னெவெனில், அந்த சமயத்தில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் "கோடை விடுமுறையால்" மூடப்பட்டிருக்கும். சூன் மாத மத்தியில் தொடங்கி ஆகத்து மாத இறுதி, மற்றும் செப்டம்பர் மாத தொடக்கம் வரை கோடைகாலம் நீடிக்கிறது. இதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது

 பருவகால மாற்றங்கள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பம் மற்றும் அதிகப்படியான மழைப்பொழிவு ஆகிய சமயங்களில் மலேரியா நோய் மிக வேகமாகப் பரவுகிறது

 வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலத்தில், கடற்கரை ஓரங்களில் பெய்யும் மழையின் காரணமாக, முதலைகள் அதிக அளவில் வாழ்கின்றன என்பதுடன், கடலின் உப்புத் தன்மையும் குறைந்து காணப்படுகிறது.

வட அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பப் புயலானது சூன் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை ஏற்படுகிறது. அதனுடைய உச்ச அளவானது ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் முழுவதும் காணப்படும்.

புள்ளிவிவரத்தின் படி அட்லாண்டிக் புயல் காலம் செப்டம்பர் 10 ஆம் தேதி உச்ச நிலையை அடைகிறது. இந்த வெப்பப் புயலானது வட கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அதிக அளவில் காணப்படுகிறது. அதே சமயம் அட்லாண்டிக் பெருங்கடலில் குறைந்த அளவே காணப்படுகிறது

வடமேற்கு பசிபிக் பகுதியில் வெப்பப் புயலானது பிப்ரவரி மற்றும் மார்ச்சில் குறைந்தும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகமாகவும் இருக்கும்.

 தென் அரைக்கோளப் பகுதியில் வெப்பப் புயல்கள் ஆண்டுதோறும் சூலை 1 ஆம் தேதி தொடங்கி வருடம் முழுவதும் காணப்படுகிறது. இதில் நவம்பர் 1 முதல் ஏப்ரல் இறுதி வரை வீசும் வெப்ப புயலும் அடங்கும். மேலும் அங்கு வெப்பப் புயலானது பிப்ரவரி மத்தியில் தொடங்கி மார்ச் மாத தொடக்கம் வரை உச்சம் பெற்று இருக்கும்

வட அமெரிக்காவின் உட்பகுதியில் இடிகளை உருவாக்கும் மேகங்கள் ஆலங்கட்டி மழைப்பொழிவை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மதியம் மற்றும் மாலை வேளைகளில் உண்டாக்குகிறது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதனை அதிக அளவில் காண இயலும். வட அமெரிக்காவின் சியேன்னே, யோமிங் ஆகிய இரு நகரங்கள் அதிக அளவில் ஆலங்கட்டி மழையைப் பெறுகின்றன. சராசரியாக ஒரு பருவ காலத்திற்கு ஒன்பது முதல் பத்து ஆலங்கட்டி புயல்கள் இங்கு ஏற்படுகின்றன
மக்கள் கோடைகாலங்களில் வெளியிடங்களுக்கு அதிக அளவில் செல்வதன் மூலம் இதமான வெப்பத்தை அனுபவிக்கிறார்கள். கடற்கரைமற்றும் சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகள் இந்த கோடைகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டைப்பந்துகைப்பந்து, தரைப்பந்து,டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. நீர்ச் சறுக்கு விளையாட்டு ஒரு பிரபலமான கோடைகால விளையாட்டாகக் கருதப்படுகிறது.


0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer