ஸ்ட்ராபெர்ரி பொமிகிரனேட் ஸ்மூத்தி
தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி - 5 முதல் 6
மீடியம் சைஸ் பொமிகிரனேட் - 1 (மாதுளை முத்துக்களை மட்டும் எடுக்கவும்)
குளிர்ந்த பால் - ஒரு கப்
சர்க்கரை/ தேன் - சுவைக்கேற்ப
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரியின் மேல் உள்ள பச்சைக் காம்புகளை நீக்கிவிட்டு, பழத்தைக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை மாதுளை முத்துக்களோடு கலந்து பிளெண்டரில் போட்டு நன்கு பிளெண்ட் செய்யவும். பிறகு, வடிகட்டவும். காய்ச்சிக் குளிர வைத்த பாலை இதில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை அல்லது தேனைக் கலந்து சில்லென்றுப் பரிமாறவும்.
ஆப்பிள்-கிரான்பெர்ரி-பனானா ஜூஸ்
தேவையானவை:
ஆப்பிள் - கால் கப் (தோல் நீக்கி நறுக்கியது)
பொடியாக நறுக்கிய வாழைப்பழம் - 1
கிரான்பெர்ரி - அரை கப்
தயிர் - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
விதை நீக்கிய கிரான்பெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு நன்கு பிளெண்ட் செய்யவும். இதில் தயிர், சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து, நன்கு பிளெண்ட் செய்து சில்லென்றுப் பரிமாறவும்.
கேசர் ஸ்ரீகந்த்
தேவையானவை:
தயிர் - ஒரு கப்
க்ரீம் சீஸ் - 200 கிராம்
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
சூடான பால் - 2 டீஸ்பூன்
பிஸ்தா - 3 முதல் 4 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஐந்து நிமிடம் ஊற விடுங்கள். வடிகட்டியின் மேலே மஸ்லின் துணியை விரித்து, அதில் தயிரைக் கொட்டவும். துணியை லேசாக மடக்கி, தயிரை மெல்ல அழுத்தினால், தயிரில் உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறும். தண்ணீர் முழுவதுமாக வெளியேறிய பின் கெட்டித் தயிரை மிக்ஸியில் சேர்த்து, க்ரீம் சீஸையும் சேர்த்து, இரண்டு மூன்று மூறை சுழற்றி எடுக்கவும். இரண்டும் ஒன்றாகக் கலந்து திக்கான மிக்சரா வர வேண்டும். இதில் சர்க்கரை, பிஸ்தா சேர்க்கவும். பாலில் ஊறவைத்த குங்குமப்பூக் கலவையைச் சேர்த்துக் கலக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்து, பிஸ்தா தூவிப் பரிமாறவும்.
thanks to vikatan.com
நல்ல குறிப்புகள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1
நல்ல தகவல் நன்றி!!
ReplyDelete