Breaking News
Loading...
Wednesday, June 22, 2016

ஜட்ஜ் பலராமையா - 1

Wednesday, June 22, 2016
ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
############################
கேள்வி : ஐயா நான் பள்ளியில் படிக்கும் மாணவன். நிறய மதிப்பெண்கள் பெற்று திகழ்ந்தவன். கடந்த 2 வருடங்களாக ஏனோ என்னுடைய ஞாபகசக்தி குறைந்துக்கொண்டே வருகிறது. படிப்பில் மந்த குணம். சோம்பல் ஆகியவை உள்ளது. ஒரு பொருளை ஒரு இட்த்தில் வைத்தால் அந்த இடத்தை கண்டுபிடிக்க முக்கால் மணி நேரமாகிறது. ஆகவே மீண்டும் நான் ஞாபகசக்தியை பெற என்ன வகையான மருந்து சாப்பிடவேண்டும்? என்பதை தெரியப்படுத்துங்கள்.
பதில் : பள்ளிப் பருவத்திலேயே ஞாபக மறதி வருவது வருந்தத் தக்கது. தங்கள் மனம் பல இடங்களில் சிதறி உள்ளதால் இவ்வித மறதி ஏற்படலாம். மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டால் மறதி வராது.
சுக்கு, ஓமம், மஞ்சள், மரமஞ்சள், இந்துப்பு, வசம்பு, அதிமதுரம், கோஷ்டம், அரிசி திப்பிலி சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் வாங்கிக்கொள்ளவும்.
இதில் சுக்கு மஞ்சள், மர மஞ்சள் இந்துப்பு வசம்பு தவிற மற்றவைகளை லேசாக வறுத்துக்கொண்டு பின்னர் ஒன்றாக சேர்த்து இடித்து நன்றாக ஜலித்து சூரணம் செய்துக்கொள்ளவும்.
இதை காலை, மாலை அரை தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பால் அல்லது தேனில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபக சக்தியோடு சேம்பல், மந்த புத்தி இவைகளை நீக்கும். இது ஒரு அற்புத மருந்து. மூளையும் பலமாகி மேதாவிகளாக வருவார்கள்

2 comments:

  1. கேள்வி-பதில் வகையில் சொன்ன விடயம் நன்று
    தமிழ் மணம் 1

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer