Breaking News
Loading...
Thursday, June 30, 2016

இட்லி, சாம்பார்

Thursday, June 30, 2016
இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்ட்: ஆய்வில் தகவல்,,,

சென்னை: 3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர். அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது-

கெலாக்ஸ் ஸ்பான்சர்மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியின் ஆய்வு இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் நடத்திய இந்த ஆய்வை கெலாக்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

1,காலை உணவுஇந்திய மக்களில் 4ல் ஒருவர் காலை உணவை சாப்பிடுவதில்லையாம். சென்னைவாசிகளில் குறைவான நபர்களே காலையில் சாப்பிடுவதில்லையாம்.

2.சத்தான உணவு இல்லைகணக்கெடுப்பில் கலந்து கொண்ட மும்பைவாசிகளில் 79 சதவீதம் பேர் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த 76 சதவீதம் பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 75 சதவீதம் பேரும், சென்னையைச் சேர்ந்த 60 சதவீதம் பேரும் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லையாம்.

3.மைதாகொல்கத்தா மக்களின் பாரம்பரிய உணவில் அதிகம் மைதா உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. அதே சமயம் மிகக் குறைவான புரோட்டீன் உள்ளது. மேலும் அதில் நார் சத்து என்பதே இல்லை.

4.பராதாடெல்லி மற்றும் மும்பைவாசிகள் காலை உணவாக சாப்பிடும் பராதாவில் அதிக எண்ணெய் உள்ளது. மேலும் அவர்கள் அதிகம் சாப்பிடும் பிரெட்டில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எதுவுமில்லை.

5.இட்லி, சாம்பார் சென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பார் அதிக சத்துக்கள் உள்ள உணவாம். அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவையாம்.

கூல்ட்ரிங்க்ஸ்,,, சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer