Sankaran NSK
By
🔵Sankaran Nsk🔵
சூபி சொன்ன கதை.
ஒரு மனிதன்
காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தான்.
அங்கே ஒதுக்குப்புறத்தில் ஒரு நரியைப்பார்த்தான்.
அதற்கு இரண்டு கால்கள் இல்லை.
இது எப்படி உயிர் வாழ்கிறது என்று அதிசயித்தான்.
அப்போது இரையை வாயில் கவ்வியபடி ஒரு புலி வந்தது.
மனிதன் பதுங்கிக்கொண்டான்.
புலி இரையைக்கீழே போட்டுவிட்டு
வயிறார சாப்பிட்டுவிட்டு
மீதியை
நரிக்கு விட்டுவிட்டுப் போய்விட்டது.
நரி இந்த மீதியை உண்டு பசியாறியது.
இதைப் பார்த்த மனிதன்
“எனக்கு பெரிய உண்மை புரிந்துவிட்டது;
யார் எங்கிருந்தாலும் ஆண்டவன் உணவிடுகிறான்.
நானும் இந்த நரி போல் சும்மா இருப்பேன்.
எனக்கும் உணவு கிடைக்கும்”
என்று நினைத்தான்.
ஒரு மரத்தடியில் சும்மா படுத்துக்கிடக்கலானான்.
பசி கொடுமையால் தவித்தான்.
உணவேதும் கிடைக்கவில்லை.
விடாப்பிடியாக சும்மாவே கிடந்தான்.
பின் பசி பொறுக்காமல்,
“கடவுளே, ஏன் எனக்கு உணவிடவில்லை?”
என்று கத்தினான்.
அசரீரி கேட்டது:
“முட்டாளே!
ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்?
புலி போல இரு!”
🔵Sankaran Nsk🔵
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!