ஜான்சி ராணி (கி .பி
1835-1858 )காலத்திற்கு
முன்னரே வெள்ளையனை
எதிர்த்து போரிட்ட.......
முதல்
பெண் அரசி வேலு
நாச்சியார் 25-12-1796 -
இல் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக
போரிட்டு வெற்றியும்
பெற்ற முதல்
பெண்மணி.
உலகில் வேறு எந்த ராணியும்
வேலுநாச்சியார் வீரத்திற்கும்
அரசியல் விவேகத்திற்கும் இணை
இல்லை.
தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம்,
ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச்,
இங்கிலிஷ், ஜெர்மன் என
பத்து மொழிகள்
பேசக்கற்றவர்.
சிறு வயதிலேயே போர்க்கலைகளிலும்
தேர்ந்தவராக விளங்கினார்.
வாள் சண்டை, வில்வித்தை,
யானையேற்றம், குதிரையேற்றம்,
வளைதடி ஆகியவற்றில் சிறந்து
விளங்கினார்.
போர்வாளை தன் கைகளால்
இரண்டாக உடைக்கும் வலிமைப்
பெற்றவர்.
ஆறடி உயரத்தில் பேரெழில்
கொஞ்சும் அழகில்
மயிலாகவும் வீரத்தில் விட்டு
கொடுக்காத
புலியாக இருந்தவர்.
1790ல் தனது மகள் இறந்த
பிறகு வேதனையால்
நோய்வாய்பட்டவர் 1796ல்
டிசம்பர் 25ல் இறந்தார்.
இறக்கும் முன் மருது
சகோதரர்களை தனது வாரிசாக
அறிவித்து சிவகங்கையை
ஒப்படைத்தார்...
வீரத்தமிழச்சி வேலுநாச்சியாரின்
வழிவந்த தமிழ்ப் பெண்களே
பின்னாளில் இந்திய தேசிய
இராணுவத்தின் மகளிர் படைப்பிரிவில்
பெருமளவு இடம் பெற்றிருந்தனர்
என்பது தமிழருக்கு மேலும் சிறப்பு.
நம்
தேசத்தந்தை நேதாஜியின் வரலாறு
மறக்கப்பட்டதைப் போன்று வீரமங்கை வேலு
நாச்சியாரின் வரலாறும் மறைக்கப்
பட்டுள்ளது.
இன்று ஒட்டுமொத்த
இந்தியர்களும் கொண்டாடப்பட
வேண்டிய வேலு நாச்சியாரின் புகழ் பல
தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பது
வேதனையானது.
எனவே
அவ்வீரப்
பெண்மணியின் வரலாற்றை நாம்
அனைவரும் அறிய வேண்டும்.
இன்று வீரமங்கை
வேலுநாச்சியாரின் 218வது நினைவு நாள்.
மண்ணீல் வீரம் முத்தமுட்டநாள்....
By
Chandrasekara Swaminathan
DeepaOli Whatsapp Group
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!