Breaking News
Loading...
Friday, December 25, 2015

மனம்

Friday, December 25, 2015



மனமெனும் குதிரையினை அடக்க காஞ்சி பரமாச்சார்யார் கூறியது:

"ஜீவன் என்பவன் தேரில் உட்கார்ந்துள்ள யஜமான் மாதிரி.

 சரீரம் தான் தேர். 

தேருக்கு சாரதி யாரென்றால் புத்தி.


 அது பல குதிரைகள் பூட்டிய தேர்.

 குதிரைகள் எவை என்றால் அவைதான் நம் இந்திரியங்கள். 

குதிரைகளை சாரதி ஏவி, வழி நடத்துவது லகானைப் பிடித்துத் தானே. 

கடிவாளம் என்பது தானே?

 அந்த லகான் அல்லது கடிவாளம் தான் நம் மனது. (மனது குதிரையை 

விட வேகமாய் ஓடப் பார்க்கிறது இல்லையா) நம் புத்தியாகின்ற சாரதி 

தான் அந்தக் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கவேண்டும்.

 அதற்குத் தேவை சாதனங்களால், விவேக வைராக்கியங்களால் 

உறுதிப்பட்ட நல்லறிவு என்ற தேர்ப்பாகன்.

( இந்தத் தேர்ப்பாகன் நம் அனைவரிடமும் இருக்கின்றான். ஆனால் 

நாமதான் அலட்சியம் செய்துவிட்டு வேறேவழியில் போகச் 

சொல்லியோ, அல்லது, நாமே குதிரையை விரட்டியோ விட்டுடறோம்.) 

மனதாகிய கடிவாளத்தைக் கவனமாய் இழுத்துப் பிடித்து விடுகின்ற 

அளவுக்கே விட்டோமானால், இந்திரியக் குதிரைகள் உத்தமமான 

விஷயங்களிலேயே அல்லது வழியிலேயே போய் போக வேண்டிய 

இடத்துக்குச் சரியாய்க் கொண்டு சேர்க்கும்.

 சேர்ந்தபின்னால் ஜீவன் ஆன யஜமான் ஆன்மாவைத் தன் பாட்டில் 

அனுபவிக்கலாம்."

மனம் இருந்தால் மட்டுமே மார்கங்கள் தேவைப்படும் , 

மனம் இல்லை என்றால் எவ்விதமான மார்க்கமும் இருக்காது .

 தனியாக ஒரு மார்க்கத்தை பின் பற்ற தேவை இல்லை , 

மனம் எங்கு அடங்குகிறதோ அங்கே தான் இறையை காண , உணர முடியும் .

மனம் என்னும் மாய குரங்கை அடக்க இருக்கும் வழிகள் தான் வேறே தவிர , 

மனம் அடங்கிய பிறகு , மனம் அடக்கியவர்களுக்கு  எவ்விதமான தனி ஒரு 

மார்க்கமும்  தேவை படாது .

இங்கு மார்க்கம் என்று குறிப்பிடுவது , 


மத , இன , சமய , தனி முறை வழிபாடுகள். 

இவை எதுவும் மனம் என்று ஒன்று இல்லாத ஞானிக்கு தேவையே படாது .

ஆதாலால் மனம் என்ற குரங்கை , 


குதிரை என்னும் வாசி முறையை பயன்படுத்தியோ ,

 அல்லது அன்பு என்னும் ஞான முறையின் மூலமோ

 ( அன்பு என்று நாம் நினைத்துக்கொண்டு இருப்பது வேறு , 

பரத்திடம் இருக்கும் அன்பு என்பது வேறு ) அடக்கி அல்லது இல்லாமல் 

செய்து இறையுடன் இறையாய் இருப்போம் அன்பர்களே .

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer