படித்தில் பிடித்தது - “ வினாவும் விடையும்”
தமிழ் பெற்ற பல செல்வங்களுள் ஒன்று “சிந்தாமணிச் செல்வம் “ என்று போற்றத்தக்க சிறு நூல் “ விவேக சிந்தாமணி
பாடியவர் யார் ? காலம் எது ? பாடியவர் ஒருவரா பலரா ? -- இப்படி பல வினாக்களுக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.
ஆனால், இதிலுள்ள இரு பாடல்கள் வினாவும் விடையுமாக அமைந்துள்ளது.
ஒருத்தி ,தன் உயிர் தோழி வினா கேட்க,அதற்கு தோழி விடை கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.
அந்த காலத்திலும் விலைமாதர்களின் தொடர்பு, கள், சூது போன்றவைகள் எதன் பொருட்டு இருந்திருக்கின்றன என்ற உணமை
இப்பாடல் மூலம், விலை மாதர்களின் மன நிலையும், நல்லறத்தின் மாண்பும் கூறப்பட்டுள்ளன.
தலைவியின் வினா, “ என்னைப் பெற்ற தாய்போல்என்னிடம் அன்பு காட்டும் தோழியியே ! நல்லறம் வளர்க்கும் நங்கையே !
உன்னிடம் ஒன்று கேட்பேன். நீ உணமை அறிந்து சொல்ல வேண்டும். என்னைக் கூடிக் களிக்க வரும் ஆண்கள் எனக்கு
இன்பத்தைக் தருவதோடும் பொன்னையும், பொருளையும் வேறு கொட்டிக் கொடுத்து என் காலும் வீழ்கின்றனாரே !
ஏனடி .... இந்த ஆண்கள் இப்படி.....? “
அன்னையே அனைய தோழொ !
அறந்தனை வளர்க்கும் மாதே !
உன்னையோர் உண்மை கேட்பேன்
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள்
எனக்குப் பேரின்பம் நல்கி
பொன்னையும் கொடுத்துப் பாதப்
போதுனில் வீழ்வ தேனோ ?
இப்படி கேட்ட தலைவிக்கு, அவன் தோழி இவ்வாறு பதில் கூறுகிறாள்..,
“கேளடி தலைவி , அதன் காரணம் இதுதான் ! காதற் போரின் கடவுளான மன்மதனே மயங்கி விழும் படியான
வதனங்களை உடைய தலைவியே ! கூறுகிறேன் கேட்பாயாக !
நல்லறம் செய்யாதவர்களின், பொன், பொருள் பாழாக வேண்டும் என்றுதான, பிரம்மதேவன் நம் போன்ற
பெண்களையும் உண்டாக்கி இருக்கிறான் “
“ பொம்மெனப் புடைத்து விம்மிப்
போர் மதன் மயங்கி விழும்
கொம்மை சேர் முலையினாளே !
கூறுவேன் ஒன்று கேண்மோ !
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தாவாறே ! “
இப்பாடல் படிக்கச் சற்று நெருடலாக இருந்தாலும், அறத்தை (நல்லறம்) வலியுறத்துவத்ற்காகவே புலவரால்
எழுதப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவு. நல்லறம் செய்யாதார் செல்வம் இப்படித்தான் விலைமாதர்,
கள், சூது போன்றவற்றால் அழியும் என்பதையும் கூறி புலவர் எச்சரித்துள்ளார் என்று உணர வேண்டும்.
{ நன்றி -மஞ்சம் நடராசன் - -“தமிழ் மலர் “ ஞாயிறு மலர் ]
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!