Breaking News
Loading...
Friday, December 25, 2015

தியானம்

Friday, December 25, 2015

தியானம்


நீ யாருக்கும் சொந்தமில்லை; யாரும் உனக்குச் சொந்தமில்லை

 என்பதை நினைவில் கொள்.  இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் ஒரு 

நாள் திடீர் என்று விட்டு விட வேண்டுமென்பதை நினைத்துப் பார். ஆகையால் 

இறைவனிடம் இப்போதே அறிமுகப் படுத்திக் கொள்.
  தெய்வீக ஞானமென்னும் பலூனில் தினமும் சவாரி செய்து வரப் போகின்ற மரணம் 


என்னும் சூட்சும யாத்திரைக்கு உன்னைத் தயார் செய்து கொள். மாயையினால் 

நீ உன்னைச் சதையும் எலும்பும் கூடிய ஒரு  கட்டான உடலாகக்

 காண்கின்றாய். அது ஒரு துன்பக் கூடமே தவிர வேறல்ல. இடை விடாது 

தியானம் செய். அதனால் நீ சீக்கிரமே உன்னை எல்லா விதமான 

துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய். உடலின் 

கைதியாக இருந்து கொண்டிருப்பதை நிறுத்து.  யோகம் என்னும் ரகசியத் 

திறவு கோலின் மூலம் பரம்பொருளினுள்  தப்பித்துக் கொள்ளக் கற்றுக் கொள்.

உன் மனத்திலிருந்து பிடிவாதமான சாத்திரக் குப்பைகளைக் களைந்தெறி. நேரடி 

அனுபவம் எனும் தெளிந்த அறிவைப் பெறு.  உன் ஆற்றல் வாய்ந்த 

வழிகாட்டுதலுக்கு உன்னைப் பொருத்தமாக்கிக் கொள். "வாழ்வில் ஏற்படும் 

ஒவ்வொரு குழப்பத்திற்கும் தெய்வீகக் குரலிடம் விடையுண்டு".


வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் 

தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், 

சத்தியங்கள் என்பதை நம்புகிறவள். வாழ்கையின் தத்துவம் ஓரளவு 

புரிந்திருந்தாலும், தவிர்க்க முடியாத கடமைகளுக்குள் என் வாழ்நாளின் 

கணிசமான பகுதியை வீணடித்து விட்டவள். ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு 

உண்மையை உணர்த்தக் கூடியது. ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் 

ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் 

என்பதைப் புரிந்து கொண்டவள். ஒரு வகையில் பார்த்தால் நாம் பிறக்கின்ற 

கணம் தொடங்கி இறுதி மூச்சு வரையில் இந்த வாழ்க்கைப் பயணமே ஒரு 


தரிசனம் தான். நாம் பிரம்மத்திலிருந்து தோன்றியதிலிருந்து, அதே 

பிரம்மத்தோடு ஒன்றும் வரை நமது ஆத்மா அடைவது ஆத்ம தரிசனம். 

இதுவும் அக தரிசனத்துள் ஒன்று. இந்த தரிசனங்கள் யாருக்கு வாய்க்கும்?

ஆர்வமும், முனைப்பும், உழைப்பும் உள்ள எவருக்கும் வாய்க்கக் கூடியவை 

இந்த தரிசனங்கள். அவரவரின் முயற்சிக்கேற்ப இவை அமையும் என்றாலும் 

அவற்றை அனுபவித்தே உணர வேண்டும். அந்த முயற்சிக்கு பலன் 

கண்டிப்பாக கிடைக்கும். குரு அருளால் உங்களுக்கும் அது சித்திக்க 

வேண்டுகின்றேன்..

தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .








நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .


நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியுமே தவிர, வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

ஆதலால் கண்கள் உருவம் அற்ற, ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப்  பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும்,பயமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்

அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும்  அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த தீப ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ+ட்சை என்பது மலம் ஒழிப்பு என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு . 
வள்ளலார் பாட்டு ,


0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer