Breaking News
Loading...
Wednesday, December 30, 2015

முப்பது வயசா...?

Wednesday, December 30, 2015
 நம்ம வயசு முப்பதுக்கு மேலே போகும் போது இந்த விஷயங்களை எல்லாம் மனசிலே வைச்சிக்கனும்.....

என்ன விஷயங்கள்னு கேட்கறீங்களா....

வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. 
அதன் நிலைப்பாடு மேகத்தினை போல, 
ஏன் மாறவில்லை என்றும் கேட்க இயலாது, மாறிய பிறகு ஏன் மாறினாய்
் என்றும் கேட்க இயலாது. 
வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் பாதுகாப்பிற்கு நீங்கள் தான் 
குடையை வைத்திருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நொந்துக் 
கொள்வதில் எந்த பயனும் இல்லை.

வயது ஏறும் போது, அந்த நிலைக்கு ஏற்ப நீங்களும் உங்களை 
மாற்றியமைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
 சரியாக சொல்ல வேண்டுமெனில், உங்களை நீங்கள் அடுத்த நிலைக்கு 
எடுத்த செல்ல வேண்டும்.
ஆண்களை பொறுத்தவரையிலும் முப்பது வயதென்பது அவர்களது 
வாழ்க்கையின் முக்கியமான கட்டம். 
முப்பதுகளில் சறுக்கிய சிலர் கடைசி வரை எழாமலேயே கூட 
இருந்திருக்கின்றனர். 
எனவே, முப்பதை எட்டும் ஆண்கள் இந்த விஷயங்களை கட்டாயம் 
தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
...
முப்பது வயதில் ஒவ்வொரு ஆணும், அறிந்திருக்க வேண்டிய முக்கியமான 
விஷயம், அவர்களது வாழ்க்கை பயணம் எதை நோக்கி நகரப் போகிறது 
என்பது தான். 
பயணத்தை தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள், 
உங்களது எல்லை கோடு எவ்விடத்தில் இருக்கிறது என்றாவது அறிந்திருக்க 
வேண்டியது அவசியம்.
கண்டிப்பாக முப்பது வயதில், சேமிப்பு அவசியம். திருமணம், மனைவி, 
குழந்தைகள், இவ்வளவு நாட்கள் உங்களை பார்த்துக்கொண்டபெற்றோரை 
நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை என இவை அனைத்திற்கும் 
சேமிப்பு முக்கியம்.
உங்களின் பிள்ளைகள் தோள் உயரத்திற்கு வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள் 
என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்!
இருபதுகளில் உங்களோடு லூட்டி அடித்துக்கொண்டிருந்த நட்பு வட்டாரங்கள் 
முப்பதுகளிலும் அதே மாதிரி இருக்க வாய்ப்புகள் இல்லை. 
என்பதனையும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆராய்ந்து செய்வது அவசியம் 
என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்....
உங்களது தொழில் மற்றும் வேலைகள் அதற்கு இடமும் கொடுக்காது. 
ஆயினும் கூட, உங்களை தோள் கொடுத்து தாங்க ஓர் நல்ல நட்பு வட்டாரம் 
அவசியம் தேவை. அவ்வாறான நண்பர்களை கட்டிக்காக்க வேண்டியது 
அவசியம்.  இரட்டை வேஷம் போட்டு நடிக்காதீங்க.... உண்மையா இருங்க...
முப்பது வயதை எட்டிய பிறகும் கூட அப்பா, அம்மா, அண்ணன் என்று 
குடும்பத்தை சார்ந்து இருப்பது தவறு. 
நீங்கள் தனித்து நிற்க வேண்டும், போராட வேண்டும், 
உங்களுக்கான நிலையையும், பெயரையும் நீங்களே அமைத்துக்கொள்ள 
வேண்டும்.
 உதவி நாடுவதை நிறுத்தி, நீங்கள் அவர்களுக்கு உதவும் நிலைக்கு உயர 
வேண்டும்.


இனியும் நீங்கள் உங்களது உடல்திறன், ஆரோக்கியம் மீது அக்கறையின்றி 
இருத்தல் கூடாது. 
உடற்பயிற்சி, நல்ல உணவு முறை என மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது
 அவசியம். 
ஏனெனில், முப்பது வயதிற்கு மேல், உங்களது உடல்நிலை உங்களை 
மட்டுமின்றி, உங்களது குடும்பத்தையும்பாதிக்கும் என்பதை மனதில் 
வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பாதையில் நீங்கள் பயணிக்க தொங்க வேண்டிய நேரம் இது.
 பணம் ஈட்டுவதற்காக மாட்டுமின்றி. உங்களது தரத்தையும், 
வாழ்க்கையையும் அடுத்த நிலைக்கு நகர்த்த நீங்கள் தயங்காமல் பயணத்தை 
ஆரம்பிக்க வேண்டும். 
பிரிவுகள் ஏற்படலாம், ஆயினும் கூட நீங்கள் முழுவீச்சில் முனைந்து 
செயல்பட வேண்டியது அவசியம், பிரிவுகளில் தான் பிரியமும் கூடும்.
உங்கள் தொழிலை, வேலையை அனைத்தையும் நீங்கள் விரும்பி செய்ய 
வேண்டும். 
இந்த காதல், நீங்கள் தோற்றாலும் மீண்டு வர இயலும்.
 இது வெற்றியை மீட்டெடுக்க உதவும் கருவி. 
எனவே, உங்களை நீங்களே விரும்ப தொடங்க வேண்டிய தருணம் இது....
 நாற்பது வயதினில் உணர்வுகள் உச்ச நிலைக்கு 
செல்லும்....எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளுதல் .... 
தேவையற்ற அவ நம்பிக்கைகள், யாரையும் நம்பாத ஒரு நிலை இவை 
சந்தர்ப்ப சூழல்கள் உங்களை மாற்றிவிட வாய்ப்புள்ளது என்பதனை 
உணருங்கள். தினமும் சிறிது நேரமாகிலும் யோகா....தியானம் செய்ய 
பழகுங்கள்....
இத்தகைய பழக்கம் தொடருமானால்.... நீங்கள் எதனையும் சிந்தித்து 
செயல்பட ஆரம்பித்துவிட்டீர்கள்....

நீங்கள் எதிர்பார்க்கும் நிம்மதி உங்கள் வசமே!
ஒரு டிப்ஸ்
ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற
சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது இந்த நோய்.

சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, ஊசி இன்றி இந்த முறையில் முயற்சி செய்து பார்ப்போம்.

கொத்தமல்லி – அரை கிலோ, வெந்தயம் – கால் கிலோ என தனித்தனியாக எடுத்து பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

பின்னர், கலந்த பொடியில் 2 கரண்டி பொடியை 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி 3 வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்னர் குடித்து வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது 45 நிமிடம் வேறு எதனையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

தொடர்ந்து இதனை ஒரு மாதம் குடித்து வந்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து குடிப்பதற்கு முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து இதனை சோதனையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer