இருந்திருக்கலாம்
முதிர் கன்னியாகவே!
😔😔😔😔😔😔😔😔
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என்
அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி
சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர
விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும்
முடிந்துவிட்டது!!
முழுதாய் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன்
விடுப்பு!
எடுத்து சென்றாய் என்
இதயத்தை
கூடவே கொடுத்து
சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது
பாலாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன்
உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக
நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே
சென்றார்கள்!
அயல் நாட்டில்
இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம்
உனக்குதானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என்
பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய்
குழந்தைக்கு பெயரை
மட்டும்!!
துக்கம் தொண்டையை
அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் –
இருந்திருக்கலாம்....
முதிர்கன்னியாகவே!!!!
super poem sir
ReplyDeleteThank You! Please join in followers list!
Delete