

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக
அறிவு பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.
நன்றி: http://www.kathiravan.com/aanmeekam/archives/1083
1)சோகத்தை ~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை ~Down load செய்யுங்க
5)எதிரிகளை ~Erase செய்யுங்க
6) உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை ~switch off செய்யுங்க
8)வேதனையை ~Not reachable செய்யுங்க
9)பாசத்தை ~In coming செய்யுங்க
10)வெறுப்பை ~out going செய்யுங்க
11) சிரிப்பை ~In box ல் வெய்யுங்க
12)அழுகையை ~out box ல் வெய்யுங்க
13)கோபத்தை ~Hold செய்யுங்க
14)இன்முகத்தை ~send செய்யுங்க
15)உதவியை ~ok செய்யுங்க
16)இதயத்தை ~vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday
பாசிடிவ் விளக்கம்.
😀 FAIL என்ற வார்த்தைக்கு 'first Attempt In Learning', அதாவது ‘கற்றுக்கொள்வதற ்கான முதல் வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்.
😀 END என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.
😀 NO என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது ‘அடுத்த வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்..!!!
அருமையான பதிவு நண்பரே அழகாக விவரித்தீர்கள் நன்றி எனது பதிவு வாழ்க்கை வாழ்வதற்க்கே படியுங்கள் இதோ இணைப்பு –
ReplyDeletehttp://killergee.blogspot.ae/2015/11/blog-post_27.html
தமிழ் மணம் 1
ஆஹா... ஒரே தலைப்பில் இருவரது பதிவுகள்.... இதோ வாசிக்க வருகின்றேன் நண்பரே!
Deleteதங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி நண்பரே!