Breaking News
Loading...
Wednesday, December 30, 2015

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!

Wednesday, December 30, 2015
உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!
தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - சிறிதளவு, கற்றாழை - 3-4 
துண்டுகள், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் 
நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் 
நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் 
துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், 
சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், 
அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி 
சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் 
மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி 
மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். 
ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது,
 புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, 
செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள 
பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

3 comments:

  1. நல்லதொரு பயனுள்ள தகவல் நண்பரே நன்றி
    நண்பரே தமிழ் மணம் ஓட்டு போட்டால் ஏற்றுக் கொள்ளவில்லையே....

    ReplyDelete
  2. Replies
    1. என் இனிய நண்பரின் வருகைக்கு நன்றி!
      இன்று தான் தமிழ்மணம் அங்கீகரித்திருக்கின்றது நமது தளத்தை!
      இனிமேல் ஓட்டு போடலாம் அய்யா!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer