101. கொள்ளை நோய் ஒன்றால் தாக்கப்பட்டுத் தன்னிடம் சிகிச்சை பெறவரும் முதல் நோயின் குறிகளைக் கொண்டு அந்நோயின் முழு உருவத்தையும் தெரிந்துகொள்ள வைத்தியருக்கு முடியாமல் போவது சகஜம்.
பல நோயாளிகளை ஊன்றிக் கவனித்த பிறகுதான் நோயின் மொத்தக் குறிகளை அறிய முடியும் ஆயினும் மிகக் கூர்ந்து கவனிக்கும் வைத்தியர் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகளைப் பார்த்தவுடனே பல சமயங்களில் நோயின் உண்மையான தன்மையையும் முழு உருவையும் அறிந்து கொண்டு அதற்கேற்ற ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
அவரால் முடியும்.
102. கொள்ளை நோயால் தாக்கப்படும் போது, பல நோயளிகளைப் பார்த்த பின்பு அனைவருக்கும் ஒரே விதமான குறிகள் தோன்றினால், அந்த அதிகப்படியான குறிகளை எடுத்து தொகுத்துப் பார்த்தால் அந்தக் குறிகளைப் பெற்ற மருந்து எதுவென்று தெரிந்துவிடும்.
இப்போது கொள்ளை நோயால் தாக்கப்பட்ட அனைவருக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம் இதுதான் தடுப்பு மருந்தாகும்.
(உதாரணம் பசி இல்லாமை தூக்கம் இல்லாமை முதலியவை) காணப்படும் விசேஷத் தன்மைகள் தெளிவாய்த் தெரிவதுடன் அதன் சிறப்புக் குறிகளும் முக்கிய குறிகளும் மேலும் விளக்கம் பெற்று நோயின் தனிப்பட்டகுறிகளாய் அமைகின்றன.
குறிப்பிட்ட ஒரு சமயத்தில் கொள்ளை நோயொன்றினால் தாக்கப்படும் எல்லா நோயாளிகளும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் நோயை அடைந்திருக்கின்றனர் என்பது நிச்சயம் .
ஆதலால் அவர்கள் எல்லோரும் ஒரே நோயினால்தான் தாக்கப்பட்டிருக்கின்றனர். ஆயினும் இத்தகைய கொள்ளை நோயின் முழு உருவத்தையும் ஒரே ஒரு நோயாளியிடமிருந்து அறிய முடியாது.
மாறுபட்ட உடல் அமைப்புள்ள பல நோயளிகளின் நோய்க்குறிகளைத் தொகுத்துத்தான் அறியமுடியும்.
103. அனேகமாகத் திடீரென்று தோன்றும் குணமுள்ள கொள்ளை நோய்களைப் போலவே விஷநோய்க் கூறுகளால், அவைகளிலும் முக்கியமாக சோரா எனப்படும் விஷ நோய்க் கூற்றினால், ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களை மிக நுனுக்கமாய் ஆராய்ந்து அவைகளின் குறிகளனைத்தையும் மிக விரிவான முறையில் கவனிக்க வேண்டும்
ஏனெனில் கொள்ளை நோய்களில் காணப்படுவதைப் போலவே நீடிக்கும் வகை நோய்களிலும் ஒரு நோயாளியிடம் அந்நோய்களின் பல குறிகளில் ஒரு சிலவே காணப்படும்.
இரண்டாவது நோயாளியிடம் வேறு சில குறிகள் தென்படும். இவ்விதம் ஒவ்வொரு நோயாளியிடமும் காணப்படும் ஒவ்வொரு விதமான நோய்க் குறிகள் நோயின் மொத்தக் குறிகளில் ஒரு பகுதியே. ஆதலால் எல்லாப் பகுதிகளையயும் ஒன்று சேர்த்துப்பார்த்தால்தான் விஷநோய்க் கூற்றினால் உண்டாக்கப்படும் நோய்களின் முழு உருவத்தையும் நாம் உணர முடியும் .
முழு உருவத்தை உணராமல் விஷ நோய்க் கூறுகளை நீக்க கூடிய ஹோமியோபதி மருந்தைக்கண்டு பிடிக்க முடியாது. விஷநோய்க் கூறுகளை நீக்கும் மருந்துகளால்தான் நீடிக்கும் வகை நோய்களைக் குணம் செய்யவும் முடியும்.
104. எவ்வகையைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு நோயின் மொத்தக் குறிகளை அதாவது அதன் உருவத்தை, ஒழுங்காய் வரைந்துவிட்டோமானால், மிக கஷ்டமான ஒரு காரியத்தை முடித்தவர்களாவோம்.
சிகிச்சை செய்யும் காலத்தில் வைத்தியருக்குத் தேவையான சமயங்களிலெல்லாம் மேற்படி நோயின் உருவம் உதவி செய்யும். மொத்தக் குறிகளிலுள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித் தனியே ஆராயலாம் சிறப்புக் குறிகளைத் தேடிப் பிடித்து முழு நோயையும் நீக்க வல்ல மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இரண்டாவது முறையாக நோயாளியைச் சோதனை செய்யும்போது முதல் சோதனையில் காணப்படாத புதுக்குறிகள் இருந்தால் அக்குறிகளைச் சேர்த்து, முதல் சோதனையில் காணப்பட்டு அப்பொழுது காணப்படாத குறிகளை அடித்துவிட்டால், மருந்துகளால் ஏற்பட்ட விளைவுகளையும், நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வைத்தியர் எளிதிலே கண்டு கொள்ளலாம்.
*இரண்டாவது வினாவுக்கு விடை105-145:-
(வினாவின் விவரங்களை 71-சுலோகத்திற்கு கிழே பார்க்கவும்.)
105. உண்மையான வைத்தியரொருவர் நோயை நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தீர்மானிப்பது எப்படி என்ற முதல் கேள்விக்கு மேலே விடை அளித்தாகிவிட்டது.
அடுத்தபடி இயற்கையாக ஏற்படும் நோய்களை நீக்கத்தக்க பொருள்கள் மருந்துகளுக்குள்ள நோயுண்டாக்கும் சக்தி ஆகியவைகளைப்பற்றி தெரிந்துகொள்வது எப்படி என்ற இரண்டாம் கேள்விக்கு விடையளிக்க வேண்டும்.
இவ்விடை தெரிந்தால்தான் அதாவது ஒவ்வொரு மருந்தும் (நோயற்ற உடலில்) தோற்றுவிக்கும் (செயற்கை நோய்க்) குறிகளின் பட்டியலைக் கொண்டுதான் அவைகளில் எந்த மருந்து சிகிச்சைக்கு வந்துள்ள (இயற்கை) நோயின் மொத்தக் குறிகளுடன் ஏறக்குறைய ஒற்றுமையுள்ள குறிகளை உண்டாக்கியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அம் மருந்தை கொடுத்து குணம் செய்ய முடியும்.
106. பல மருந்துகளைப் பற்றி அவை ஒவ்வொன்றும் நோயற்ற உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களும் தோற்றுவிக்கும் (செயற்கை) நோய்க்குறிகளும் என்னென்னவென்று முதலில் விவரமாய்த் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இயற்கை நோய்களுக்கு ஏற்றதாயுள்ள மருந்தைத்தேடி எடுக்க முடியும். அதற்கு நாம் முன்னமே மெட்டிரியா மெடிகாவை படித்திருக்கவேண்டும்.
107. ஒவ்வாரு மருந்துக்கும் என்னென்ன நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை இருக்கிறது என்று நிர்ணயிக்க மருந்துகளை நோய் உள்ளவர்களுக்குக் கொடுத்துச் சோதிக்கலாம் ஆனால், அவ்வாறு செய்தால் மருந்தினால் உடலில் தோன்றக் கூடிய நோய்க் குறிகள் இயற்கை நோயின் குறிகளுடன் கலந்து குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
108. ஆதலால் ஆரோக்கியமான மனித உடலிலே மருந்துகளால் தோன்றுவிக்கப்படும் நோய்குறிகள் என்னென்ன என்பதைத் தவறு இல்லாமல் நிர்ணயிக்க வேறு வழி இல்லை.
ஒவ்வொரு மருந்தும் நோயற்ற ஒருவரின் உடலிலும், மனதிலும் என்னென்ன மாற்றங்களையும் குறிகளையும் அதாவது நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியே, மிதமான அளவுகளில் நோயற்ற ஒருவருக்குக் கொடுத்துச் சோதிப்பதைத் தவிர வேறு சிறந்த வழி ஒன்றுமே இல்லை. செயற்கை நோய்க் குறிகளை (நோயற்ற உடலில்) உண்டாக்கும் இயல்பைப் பெற்றிருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் இயற்கை நோயை நீக்குகிறது.
109. இந்த வழியை முதன் முதலில் கண்டுபிடித்தது நானே. ஹோமியோபதி மருந்துகளால்தான் மனித வர்க்கத்தின் நோய்களை நீக்க முடியும், அவை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும் என்ற பேருண்மையில் ஆழ்ந்த, அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்ததாலேயே விடா முயற்சியுடன் இவ்வழியில் தொடர்ந்து சென்றேன்.
குறிப்பு:-
ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தாவது அறிவு உயிரினம் வரை உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும், உடலுறவிற்காகவும் அது எடுக்கின்ற முயற்சியில் தடை ஏற்பட்டால், ஆறு குணங்கள் தோன்றுகிறது.
அதனால் எதிர் தரப்பு உயிரினம் பாதிக்கப்பட்டால், அதுவே சாபமாக பதிந்து விடுகிறது. நுட்பமான உடலமைப்பையும், மன அமைப்பையும் பெற்ற மனிதன் அதே செயல்களை, வலிமையாகவும், நுட்பமாகவும் செய்வதால் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையிலிருந்து எழும் நச்சு அலையே சாபம் எனப்படும்.
உதாரணம்:-
செல்போனில் டையல் செய்யும் போது, அது டவரில் போய் பதிவாகி குறிப்பிட்ட நபருக்கு போய் சேர்வதை போல, கருமையத்தில் மனிதனின் எல்லா பாவமும் பதிவாகி இருக்கிறது.
அந்த பாவம் மீண்டும் வராமல் தடுத்து கொள்ளவும். ஏற்கனவே உள்ள பாவமூட்டைகளை கரைத்து கொண்டே வரவும், தவம் தற்சோதனை, காயகல்பம் போன்ற பயிற்சிகளை தருகிறார்.
இதே போல வள்ளலார் அவர்கள் கூறும் போது, ஆறரிவு பெற்ற மனிதனுக்கு அன்பு செய்யும் போதும், மற்ற உயிரினங்களின் மீது இரக்கம் காட்டும் போதும், சன்மார்க்கத்தில் மனம் இடைவிடாமல் மனதை வைத்து உணவுகளை தயாரித்து பங்கிட்டு உண்பதால் மனம் ஒரே நிலையில் இருந்து, மனோசக்தி அதிலிருந்து உற்பத்தி ஆகி அந்த பாவங்களை அழித்து கொண்டோ கரைத்துக் கொண்டோ வரும் என்கிறார்.
{மனோசக்தி என்று இவர் கூறுவது அருட்பெருஞ்சோதி என்கிறார். இதே மனோசக்தியை தான் திருமுலர் என்பவர் பசு என்றும், ஆதிசங்கரர் அத்வைதம் என்றும், ஒளவையார் அவர்கள் பரமாய சக்தி என்றும், ஹானிமேன் அவர்கள் மியாசம் என்றும், வியாசர் அவர்கள் தனது படைப்பான மகாபாரதத்தில் பஞ்சபூதங்களை காட்ட பஞ்சபாண்டவர்கள் என்றும், பஞ்சபூதத்திலிருந்து எழுகின்ற ஓர் ஆற்றலை (உயிர் அதன் படர்கை நிலையே மனம); ஐந்து விதமான மனோ நிலைகளை காட்டுகிறார்.
அதனை கட்டுபடுத்துகின்ற பேராற்றலாக திரௌபதி என்ற கதாபாத்திரத்தை படைக்கிறார். ஆக திரௌபதி வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாக பஞ்சபாண்டவர்களின் மனதையும், இப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்று உடல், உயிர், உயிரின் படர்கை (மனம்) அதையும் கட்டுபடுத்துகின்ற ஒரு பெரிய சக்தி தான் பேராதார சக்தி.
(மகரிஷி அவர்கள் கூறும் வான்காந்த சக்தியும், வள்ளலார் கூறும் அருளை தந்துக்கொண்டேயிருக்கும் அருட்பெருஞ்சோதி என்பதும் இந்த பேராதார சக்தியைதான்.) இந்த வான்காந்தத்தை தான் திரௌபதி என்றும்) (அ) மகாவிஷ்ணு என்றும் கூறுகிறார். இந்த செய்தியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கி கூறினார்.
ஏசு அவர்கள் பரலோகத்தில் இருக்கும் என் பரமபிதாவே (கர்த்தர்) என்றும், நபிநாயகம் அவர்கள் (அல்லா) எங்கும் நிறைந்திருப்பவன் என்று கூறுகிறார்.
சைவ சித்தாந்தம் கூறுவதாவது, முழுப்பொருளே முதல் பொருளே அமைதியே சிவம். என்று கூறுவதும் இந்த ஆற்றலை தான். வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதையே தான் வான்காந்தம் என்றும் கூறுகிறார்.
இப்படி தான் பல ஞானிகள் கூறுகின்ற ஒரு பெரிய பொருளைதான் அவரவர் நிலைக்கேற்ப பெயரிட்டு கூறுகிறார்கள். ஆகவே ஜீவகாருண்யமே, பசி, பிணி நிக்குதலே அமைதி (அ) மோட்சம் அடைய சிறந்த வழி என்று வள்ளலார் கூறுகிறார்.
110. தவறுதலாக அல்லது தன்னுயிரையோ, பிற உயிரையோ மாய்க்கும் பொருட்டு அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பம் காரணமாய் நோயுற்ற உடலுள்ளவர்கள் மருந்துப் பொருள்களை அதிக அளவில் உட்கொண்டபோது உடலில் காணப்பட்ட விளைவுகளை எனக்கு முன்னிருந்த ஆசிரியர்கள் பலர் கவனித்துக் குறித்து வைத்திருக்கின்றனர்.
என் உடலிலும் நோயற்ற வேறு சிலர் உடலிலும் அம் மருந்துகளைச் செலுத்திச்சோதனை செய்தபோது தோன்றியகுறிகள் அவ்விளைவுகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையாய் இருந்ததை நான் கவனித்தேன்.
விஷமிடப்பட்ட வரலாறுகளைப் பற்றியும் இத்தகைய பலம் பொருந்திய மருந்துகளின் கெடுதலான விளைவுகளைப் பற்றியும் அவர்கள் விரிவாய் எழுதியதற்கு முக்கியக்காரணம் அம்மருந்துகளை உபயோகிப்பது ஆபத்து என்று மற்றவர்களை எச்சரிக்கவே ஆகும்.
ஆயினும் இவ்விஷ மருந்துகளை உட்கொண்டு தங்களிடம் சிகிச்சை பெற வருவோர் தெய்வாதீனமாய்ப் பிழைத்துவிட்டால் பார்த்தீர்களா என் சாமர்த்தியத்தை?
எவ்வளவு கொடுமையான விஷத்திலிருந்து காப்பற்றி விட்டேன் என்று தற்பெருமை பேசிக்கொள்ளவும் அவர்கள் இறந்து விட்டால் நான் என்ன செய்வேன்? விஷம் அவ்வளவு கொடுமையானது என்று கூறி விஷத்தின் மீது பழியைச் சுமத்திவிட்டு தான் தப்பித்துக்கொள்ளவும், இவ்விவரங்கள் ஓரளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.
மருந்துப் பொருள்களிலுள்ள விஷத் தன்மைக்கு அத்தாட்சிகள் என்று சர்வ சாதாரணமாய் அவர்கள் குறித்து வைத்துள்ள விவரங்கள் கீழுள்ள மாபெரும் உண்மைகளை வெளியிடுகின்றன என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
1. இயற்கை நோய்களில் ஏற்படும் ஒற்றுமையான குறிகளை நீக்கும் வல்லமை அம் மருந்துகளுக்கு இருக்கிறது.
2. இம் மருந்துகளுக்குள்ள நோய்களை உண்டாக்கும் சக்திகள் ஹோமியோபதி முறைப்படி நோய்களை நீக்க அவைகளால் முடியும் என்பதற்கு அடையாளம்.
3. நோயற்ற உடலில் மருந்துகள் ஏற்படுத்தும் மாற்றங்ளிலிருந்துதான் அவைகளின் நோய் தீர்க்கும் வல்லமையை அறிய முடியும் வேறு வழி கிடையாது.
நோய்களைக் குணம் செய்ய உதவும் மருந்துகளின் சக்தியை சாமார்த்தியமாய்ப் கூறப்படும் கற்பனைகளின் மூலமோ மருந்துகளின் வாசனை, சுவை, தோற்றம், நிறம் ஆகியவைகளைக் கொண்டோ, ரசாயன முறைப்படி ஆராய்ச்சிகள் செய்தோ அல்லது பல மருந்துகளைக் கலந்து கொடுப்பதாலோ அறிய முடியாது.
111. மருந்துகளால் ஏற்படுத்தப்படும் உண்மையான விளைவுகளைப்பற்றி நான் கவனித்தறிந்த விவரங்கள் எனக்கு முன் இருந்தவர்கள் எழுதி வைத்துள்ள விவரங்களுடன் ஒற்றுமையாய் இருக்கின்றன.
நோயற்ற மனிதன் உடலில் நிலையான, அழிவற்ற இயற்கைச் சட்டங்களுக்கு உட்பட்டுத் தான் உண்டாக்கும் நோய்க்குறிகளை மருந்துகள் நீக்குகின்றன என்பதும் அவ்வியற்கைச் சட்டங்களின் துணை கொண்டு ஒவ்வொரு மருந்தும் அதன் தன்மைக்குத்தக்கபடி உண்மையான நோய்க் குறிகளை உண்டாக்குகின்றது என்பதும் இப்பொழுது எளிதிலே விளங்கும்.
112. மிக அதிகமான அளவுகளில் மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட கெடுதாலான விளைவுகளைப்பற்றி முற்காலத்திய வைத்தியர்கள் எழுதிவைத்துள்ள விவரங்கலிலிருந்து ஆரம்பக் காலத்தில் தோன்றிய குறிகளுக்கு நேர் மாறான குறிகள் முடிவுக்காலத்தில் தோன்றின என்பது தெரிகிறது.
*முதல் வேலைக்கு?அதாவது மருந்துகள் உயிர்ப்புச் சக்தியைத் தாக்கும் முதல் வேலைக்கு நேர் எதிராக உள்ள இக்குறிகள் உடலிலுள்ள உயிர்ப்புச் சக்தியின் எதிர்த்தாக்குதலினால் அதாவது அதன் இரண்டாம் வேலையால் ஏற்பட்டவை.
முதல்வேலை-(Primary Action) இரண்டாம் வேலை-(Secondary Action) நோயற்ற உடலில் மருந்துகளைக் குறைந்த உளவில் கொடுத்துச் சோதனை செய்யும்போது இரண்டாம் வேலைக் குறிகள் அனேகமாய் ஏற்படுவதில்லை.
மருந்துகளின் அளவை மேலும் சிறிது குறைத்துச் சோதனை நடத்தினால் இரண்டாம் வேலைக் குறிகள் என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை.
ஹோமியோபதி முறைப்படி நோய்களை நீக்குவதற்காக மருந்துகளை உபயோகிக்கும் போது உடலை நோயற்ற நிலைமைக்கும் மீட்டுக் கொண்டு வர எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குத்தான் உயிருள்ள உடல் மருந்தை எதிர்த்து வேலை செய்கிறது.
113. மயக்கமூட்டும் மருந்துகள் மட்டும் மேலுள்ளதற்கு விதி விலக்கு. நோயற்ற உடலில் அம் மருந்துகளை மிதமான அளவுகளில் கொடுத்துச் சோதனை செய்தால் கூட முதல் வேலையில் அவை சில சமயஙகளில் உடலின் உணர்ச்சிகளைப் போக்கி விடுகின்றன. அதனால் அவைகளின் இரண்டாம் வேலையில் அவை உடல் உணர்ச்சிகளை அதிகரிக்கின்றன.
114. மயக்கமூட்டும் மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்தும் நோயற்ற உடலில், மிதமான அளவில் கொடுக்கப்பட்ட போது, அதன் முதல் வேலையைத்தவிர, அதாவது ஆரோக்கியத்தைக்கெடுத்துப் பல நாட்களுக்கோ சில நாட்களுக்கோ நீடிக்கும் நோயொன்றை ஏற்படுத்துவதற்கான நோய்க் குறிகளைத் தவிர வேறு எதையும் உண்டாக்கவில்லை.
115. சில மருந்துகளால் அவைகளால் முதலிலோ பிறகோ தோற்றுவிக்கப்படும் நோய்குறிகளுக்கு ஓரளவு மாறான அல்லது முற்றிலும் எதிரான வேறு பல நோய்க் குறிகள் தோன்றுகின்றன. அவைகளை மருந்தின் இரண்டாம் வேலை என்றோ அல்லது உயிர்ப்புச் சக்தியின் எதிர்ப்பு என்றோ நினைக்கக் கூடாது. மருந்துகளின் முதல் வேலையில் அவை ஒரு பகுதியே ஆதலால் அக் குறிகளை மருந்தின்*மாற்று வேலை எனப் பெயரிட்டு அழைக்கிறோம்.
116. மருந்துகளின் குறிகளில் சில எல்லா மனிதர்களிடமும் தோன்றுகின்றன. சில மிக அபூர்வமாகவோ அல்லது ஒரு சிலரிடம் மட்டுமோ தோன்றும். மற்றும் சில ஆரோக்கிய நிலையிலுள்ள எவருக்குமே தோன்றுவதில்லை.
117. பெரும்பாலான மக்களுக்கு எவ்வித தீங்கையும் உண்டாக்காத சிற்சில பொருள்கள் ஒரு சிலருக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ நோயை உண்டாக்குகின்றன.
இதற்குக் காரணம் அவர்களுடைய மாறுபட்ட உடல்வாகு என்று சொல்லப்படுகிறது. உடல்வாகு காரணமாய்த்தான் அப்பொருள்கள் மற்றுமுள்ள பலரையும் தாக்கவில்லை என்று நினைப்பது சரியல்ல
ஏனெனில் நோயற்ற உடலில் நோய்க் குறிகளை ஏற்படுத்த இரண்டு விஷயங்கள் தேவை ஒன்று நோயை உண்டாக்கும் பொருள்களுக்கு இயல்பாய் அமைந்துள்ள சக்தி மற்றொன்று நோயுண்டாக்கும் பொருளால் தாக்கப்படும் தன்மை உயிப்ப்புச் சக்திக்கு இருத்தல் (* மாற்றுவேலை (Atlernating Action) ஆகவே ஒரு நோய்ப் பொருளால் ஒரு சிலர் மட்டும் நோய் வருவதற்கு அவர்களுடைய உடல்வாகு ஒன்றே காரணம் என்று சொல்ல இடமில்லை.
அந்நோய்ப் பொருள்களின் சக்தி, உயிர்ப்புச் சக்தியின் நோயை ஏற்கும் தன்மை ஆகிய இவ்விரண்டும் அதில் பங்கு கொள்கின்றன. நோய்ப்பொருள்கள் எல்லோர் உடலையும் தவறாமல் தாக்கத்தான் செய்கின்றன.
ஒரு சிலர் உடலில் மட்டும் நோய்ப் பொருளை ஏற்கும் தன்மை இருப்பதால் அவர்களுக்கு நோய் தோன்றுகின்றன. ஒரு நோய்ப் பொருளின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்று கருதப்படும் நபர்களிடம் தென்படும் நோய்க் குறிகளைக் கவனித்து அக்குறிகளுடன் நெருங்கிய ஒற்றுமை குறியுடைய அந்நோய் பொருளை ஹோமியோபதி மருந்தாய் உபயோகித்தால் நோயுற்றவர்கள் எல்லோருக்கும் குணம் ஏற்படுகிறது.
ஆகவே நோய்ப் பொருள்கள் எல்லோர் உடலிலும் தம் சக்தியைக் காட்டத்தான் செய்கின்றன என்பது இப்பொழுது விளங்கும்.
118. ஒவ்வொரு மருந்தும் மனித உடலைத்தாக்கி அதற்கே உரியதான நோய்க் குறிகளைத்தோற்றுவிக்கிறது. அந் நோய்க் குறிகள் வேறு மருந்துகளால் தோற்றுவிகப்கப்படும் நோய்க்குறிகளும் முற்றிலும் ஒற்றுமையுள்ளவைகளாய் இருப்பது கிடையாது.
119. தாவரங்களில் பல இனங்கள் இருக்கின்றன. புறத்தோற்றம், உயிர் வாழும் விதம், வளர்ச்சி, சுவை, வாசனை முதலிய விஷயங்களில் ஒவ்வொரு இனத்திற்கும் வேற்றுமை இருக்கிறது.
உலகில் கிடைக்கும் கனிமப் பொருள்கள் உப்புப் பொருள்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று பல விதங்களில் மாறுபாடாய் இருக்கின்றன. இதனால்தான் குழப்பம் இல்லாமல் அவை ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாய்ப் பாகுபாடுசெய்து அறிந்து கொள்கிறோம்.
இதே போல அவை உண்டாக்கும் நோய்க் குறிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்பொழுது அவை உண்டாக்கும் நோய்க் குறிகளில் வித்தியாசம் இருக்கிறதோ அப்போது அவை நீக்கும் நோய்க் குறிகளிலும் வித்தியாசம்; இருக்கத்தான் செய்யும் என்று சொல்லத் தேவையில்லை.
ஒவ்வொரு பொருளும் மனிதர்களின் ஆரோக்கியத்தைக் குழைத்து, ஒவ்வொரு விதமான, வேற்றுமைகளை உடைய நோய்க் குறிகளை உண்டாக்கும்.
120. மனிதனின் உயிரும் சாவும், நோயும் ஆரோக்கியமும் மருந்துகளில் அடங்கி இருக்கின்றன. ஆதலால் ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள தனிப்பட்ட குணங்களை கவனமாய் அறிந்து கொள்ளவேண்டும்.
மருந்துகளைப்பற்றிய உண்மையான அறிவைப் பெறவும் நோய்களை நீக்க அவைகளை உபயோகிக்கும்போது தவறு நேராமல் இருக்கவும் நோயற்ற உடலிலே அவைகளைக் கொடுத்துச் சோதனை செய்து அவைகளின் வலிமையையும், உண்மை விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்
தவறு இல்லாமல் சரியான மருந்துகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்தால்தான் மனிதனின் மனதிலும், உடலிலும் ஏற்படும் நோய்களை விரைவிலும் நிரந்தரமாகவும் நீக்க முடியும்.
121. நோயற்ற உடலிலே மருந்துகளால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் யாவை என்று கண்டுபிடிக்கச் சோதனை செய்யும்போது அம்மருந்துகளின் தன்மையை அனுசரித்து அவைகளின் அளவுகளைக் குறைக்கவும் கூட்டவும் வேண்டும் இவ்விஷயத்தை மறக்கக் கூடாது.
அதாவது கொடூரதன்மையுள்ள மருந்துகள் குறைந்து அளவுகளில் கொடுக்கப்பட்டாலும் உறுதியான உடல் கட்டு உள்ளவர்களையும் தாக்கி நோய்க் குறிகளை உண்டாக்குகிறது.
அதிகமான கொடூரத்தன்மை இல்லா மருந்துகளை அதிக அளவுகளில் கொடுத்துச் சோதனை செய்யலாம் மிகப் பலவீனமான தன்மையுள்ள மருந்துகளை சோதனை செய்வதற்காக உட்கொள்ளும் மனிதர்கள் நோய் இல்லாமல் இருப்பதுடன் நல்ல உடலையும் எளிதிலே உணர்ச்சிகளை அறியும் தன்மை பெற்றிருக்கவேண்டும்.
122. இம் மருந்துச் சோதனைகளில் இரண்டு மாபெரும் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
ஒன்று வைத்தியக் கலையின் எல்லாப் பிரிவுகளும் மாசுமரு அற்றதாய் இருக்கவேண்டும் .
இரண்டாவது மனித சமூகத்தின் பிற்காலச் சந்ததிகள் எல்லோருடைய நலன்களும் செவ்வனே பாதுகாக்கப்படவேண்டும்.
ஆதலால் உபயோகிக்கும் மருந்துகள் தமக்கும் நன்றாய்த் தெரிந்தவைகளாய் இருக்க வேண்டும். அவைகளின் சுத்தத் தன்மையில் எவ்விதச் சந்தேகத்துக்கும் இடம் இருக்கக் கூடாது.
123. இம் மருந்துகள் ஒவ்வொன்றும் முற்றிலும் தூய்மையான உருவில் உட்கொள்ள வேண்டும் அதாவது அருகில் கிடைக்கும் பச்சிலை மூலிகைகளை நசுக்கிச் சாறு பிழிந்து உட்கொள்ள வேண்டும்.
சாறு கெட்டுப் போகாமல் இருக்க அதனுடன் சிறதளவு ஆல்கஹால் கலக்கலாம். அயல் நாடுகளிலேயே கிடைக்கக்கூடிய பச்சிலை மூலிகைளைத் தூள் செய்து உட்கொள்ள வேண்டும்.
அல்லது அவை பசுமையாய் இருந்த சமயத்தில் சாறு பிழிந்து உடனே ஆல்கஹாலுடனும் பிறகு குறிப்பிட்ட அளவில் தண்ணீருடனும் கலந்து வைக்கப்பட்ட திரவத்தை உட்கொள்ளலாம்.
உப்புக்களையும் பிசின்களையும் தேவையான நேரத்தில்தான் தண்ணீரில் கரைத்து உட்கொள்ளலாம்.
(* ஆல்கஹால்(Alcohol)என்பது சுத்தம் செய்யப்பட்ட சாராயம்.)
காய்ந்து போய் விட்ட பச்சிலை மூலிகைகளில் மருந்துச்துச்சக்தி குறைவாகத்தான் இருக்கும்.
ஆதால் பசுமையாய்க் கிடைக்காத மூலிகைகளைத் துண்டு துண்டாய் வெட்டிக் சுடு தண்னீரை ஊற்றி வடிக்கட்டித் தயாராகும் கஷாயத்தைச் சூடாய் இருக்கும்போதே உபயோகிக்க வேண்டும.
தாவரங்களைக் கொண்டு தயாரிக்கபப்பட்டவை மிக விரைவில் புளித்துக் கெட்டுப்போய் விடுகின்றன.
124. இச் சோதனைகளில் ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியே உபயோகிக்க வேண்டும்.
வேற்றுப்பொருள் எதனுடனும் கலக்கக் கூடாது மருந்தை உட்கொண்ட அன்றும் அடுத்துச் சில நாட்கள் வரையிலும் அல்லது மருந்தின் விளைவுகளை ஆராயவேண்டுமென்று நாம் விரும்பும் நாட்களிலும் மருந்துக் கலப்புள்ள எவ்பொருளையும் உட்கொள்ளக்கூடாது. 125. சோதனைக்காலம் முழுவதும் சோதனையாளர் உணவு விஷயத்தில் கண்டிப்பான ஒழுங்கை அனுசரிக்க வேண்டும்.
நாவுக்குச் சுவைதரும் பொருள்களைக் கூடுமான வரை விலக்க வேண்டும். உடலுக்கு ஊட்டம் தரும் எளிய உணவை மட்டும் உட்கொள்ளலாம்.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், குழம்பு, ரசம் ஆகியவைகளும் விலக்கப்படவேண்டும். காப்பி, டீ, ஒயின் முதலிய மதுபான வகைகள் ஆகிய பொருள்களையும் அறவே தள்ள வேண்டும்.
வழக்கம்போல பிரமிப்பான தகவல்கள்தான்
ReplyDeleteநண்பரே எழுத்துகள் மிகவும் சிறியதாக இருக்கின்றது
தமிழ் மணம் 1