Breaking News
Loading...
Thursday, February 18, 2016

ஒரு நிமிடம் உங்களோடு...

Thursday, February 18, 2016
 ஹோமியோபதி - இந்தியாவில் மட்டுமே குறைவான கல்வி கற்றவர்களும் , பல அனுபவ வைத்தியர்களிடம் கற்றுக் கொண்டு, வைத்தியம் செய்கின்றனர். நானும் அவ்வாறே, சந்தர்ப்ப சூழ் நிலை கற்றுக்கொள்ளவும் வைத்தியம் செய்யும் அளவிற்கு மாற்றியது என்றால் மிகையல்ல!

எனது மனைவியின் இரண்டாம் பிரசவம் மிகவும் வேதனை தரும்படியாய் அமைந்தது. பெண்குழந்தை பிறந்து, 21 நாட்கள் ஐசியூ விலே இருக்கும் நிலை. குழந்தை உயிருடன் இருக்குமா? இருக்காதா என ஒவ்வொரு நாளும், கண்ணில் நீரினை வரவழைத்த நாட்கள் ஒவ்வொரு நாளும் யுகமாய் கழிய, ஒரு வழியாக நலமுடன் டிஸ்சார்ஜ் செய்தனர்.

டிஸ்சார்ஜ் செய்யும் போது, அரைமணி நேரம் குழந்தை மருத்துவர்கள் லெக்சரர் கொடுத்தனர். குழந்தை மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ளது. வழமையான குழந்தை போல், கவிழ, பேச, நடக்க மிகுந்த கால தாமதம் ஆகும்... மாதா மாதம் செக்கப்பிற்கு வரவேண்டும் என்று கூறி வயிற்றில் எதையோ கரைத்து ஊற்றியது போல் கூறினார்கள்.....

டிஸ்சார்ஜ் செய்து வீடு வந்த அன்றிரவே, குழந்தை நீல நிறமாக மாறியது....குழந்தை அழவில்லை.... என்ன செய்வது என்றே தெரியவில்லை..
வீட்டிலுள்ளோர் அழுதனர்.... நிறைய செலவு செய்தும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், திக் பிரமை பிடித்தாற் போலானேன்....

தெய்வம் துணை செய்தது....

மூன்றாம் வீட்டில் ஒரு ஆசிரியர் இருந்தார்... இச்செய்தி, அவரின் காதிற்கும் எட்டியது போலும்... அழையா விருந்தாளியாய் வீட்டிற்கு வந்தார்.... விசாரித்தார்.... பாலாடை எடுத்துவாருங்கள் என்றார்... அதில் சிறிது தண்ணீர் விட்டு, சிறு வெள்ளை மாத்திரை உருண்டைகள் போட்டார்.... அது கரைந்த உடன் சில சொட்டுகள் குழந்தையின் நாவில் விட்டார்... இவ்வாறு இரண்டு மூன்று முறை விட்டார்.... இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்....

குழந்தை படுக்கையை நனைத்தது... மலம் கழித்தது... நன்றாக அழ ஆரம்பித்தது.... பின்னர் தாயிடம் பாலும் அருந்தியது....

கல்விக் கண் தரும் ஆசிரியரும் தெய்வந்தான்....
அன்று அந்த ஆசிரியரும் வைத்தியமும் செய்து, தெய்வமாக கண்ணிற்குத் தெரிந்தார்...

அப்பொழுது தான் ஹோமியோபதியின் மகத்துவம் தெரிந்துகொண்டேன்.... கடின உழைப்பு,,,, ஹோமியோபதி கற்றேன்...

மாதா மாதம் மருத்துவமனை செல்லவில்லை....

வழமையான குழந்தை போல் சூட்டிகையான, துருதுருப்பான இயல்பான குழந்தையானாள் எனது மகள்....

ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கின்றாள் இன்று....

ஹோமியோபதி கற்றுக் கொள்ள ஆர்வம் இருப்போர்க்கு சிறு விளக்கு போல், இருக்க வேண்டும்.... அதே சமயம் வெறுப்புண்டாக்கும் அளவிற்கு சொதப்பிடக் கூடாது என்று எண்ணியே, தேவையான அளவிற்கு வழங்கியுள்ளேன்....

தவறுகள் கண்டிருப்பின் அது என்னுடையதே! என் கவனக் குறைவினால் விளைந்ததே! மன்னியுங்கள்....

தொடரைத் தொடர சிறிது கால அவகாசம் தேவை....

தாய் திரவங்கள், மெட்டீரியா மெடிகாவில் முக்கிய மருந்துகள் பற்றிய பதிவுகளும் வர இருக்கின்றன... தொடர்ந்து ஆதரவளியுங்கள் நண்பர்களே!

தொடரின் ஒவ்வொரு பகுதியையும் வாசித்து, கருத்திட்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நண்பர் கில்லர்ஜிக்கு மீண்டும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்....

6 comments:

  1. ஹோமியோபதி மருத்துவம் மிகவும் சிறந்தது என்பதை விளக்க இதை விட சிறந்த நிகழ்வு எதுவும் இல்லை ஐயா...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பரே
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. எனக்கும் ,என் குடும்பத்துக்கும் என்றால் ,ஹோமியோபதி மருந்துதான் :)

    ReplyDelete
  4. greetings friend, we like your postings. very useful to the persons who do not know English.we expect more from you. thank you.

    ReplyDelete
  5. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அலோபதிக்கு சென்று சிகிச்சை செய்தேன் என்று சொல்வதைவிட 25 அயிரம் செலவு செய்து உயிர் பிழைக்க வைக்கப்பட்டேன். சில வேளைகளில் நண்பர் மூலம்ஹோமியோபதி மருந்து சாப்பிட்டு வருகிறேன்..ஹோமியோபதி கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கிறது. அதன்வழி முறைகளை சொன்னால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹோமியோபதி தொடர் 1 லிருந்து இதுவரை அனைத்து பதிவுகளையும் படியுங்கள். ஓரளவிற்கு புரிந்து கொள்வீர்கள்! முயற்சி திருவினையாக்கும்! நன்றி நண்பரே! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer