இந்து என்றால் சந்திரன் என்றும், இந்துக்கள் என்றால், சந்திரனின் அம்சமான சக்தியைப் பின்பற்றி வாழ்க்கை நடைமுறைகளை அமைத்து, தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தந்தை என்றால் உயிர் என்றும், தாய் உடல் என்றும், மதம் இந்து மதம் என்றும் அமைத்து எல்லாப் பொருள்களுமே தாய்மைக்கு சொந்தம் என பெரியோர்கள் சிந்தித்து வைத்தனர்.
“ மதியும் நதியும் “ பெண் என்றனர்.
சந்திரனும் சூரியனும் இந்திரனின் நண்பர்கள்.
இந்திரன் என்பது ஐந்து விதமான புலன்களுக்குத் தலைவன்.
புலன்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டு, உணர்வுகளை இயக்குபவன் இந்திரன்.
இந்திரனின் மனைவி இந்திராணி. இந்திராணி என்பது மனசாட்சி.
ஒரு மனிதனின் உணர்ச்சிகள் சூழ் நிலைக்கு ஏற்றபடி மாறிக் கொண்டு இருக்கும். மனசாட்சி மட்டும் மாறாது.
யுகம் என்பது இன்றைய காலப்படி சூழ் நிலை எனக் கொள்ள வேண்டும்.
இந்திரனின் சபையில் ஐந்து நடன மாதர்கள் இருந்தனர்.
ரம்பை என்பது கண்ணால் பார்ப்பது.
ஊர்வசி என்பது வசிய வார்த்தைகளால் பேசுவது.
மேனகா என்பது மேனி என்ற அழகு உடலைக் குறிக்கும்.
ஊர்மிளா என்பது மூக்கின் வழியாக சுவாசிக்கும் காற்றின் நறுமணமும் நாறும் மணமும் எனவும்,
திலோத்துமை என்பது காதின் வழியாக கேட்கும் அனைத்து விஷயங்களும், அனைத்து புலன்களும்.
இப்படியாக ஐந்து நடன மாதர்களும் ஐந்து உணர்வுகள்.
உணர்வுகளுக்கு ஆட்பட்டவன் இந்திரன். அதனால் தான் எப்பொழுதும் சுக போகங்களையே மனமென்ற இந்திராணி இந்திரனை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றாள்.
இத்தகைய உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களுக்கு இறைவனை அடையும் பாக்கியம் கிட்டுவதில்லை!
சரீர சுகத்தை விட, உயிருக்கு பங்கம் இல்லாமல், நீண்ட கால வாழ்க்கைக்குண்டான நெறிமுறைகள் வகுத்து, அதன்படி, இறைவனை அடையும் வழிமுறைகள் கண்டுணர்ந்து இறைவனை அடைந்தனர் சித்தர் பெருமக்கள்.
ஆத்ம திருப்தி, ஆத்மா திருப்தி அடையும் வழியுணர்ந்து,
அதனைக் கடைபிடித்தனர். அதற்கான வழிமுறைகளை இலை மறை காயாக அனுபவத்தால் உணர கவிதையாய் வடித்துள்ளனர் சித்தர் பெருமக்கள்.
ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு கோபம், குரோதம், மதம், மாச்சர்யம் என இத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது,
“ஆத்ம திருப்தி” என்கிற உன்னத நிலையை இழக்கின்றான்.
உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்டவன் இந்திரன். இந்திரனால் உடல் சுகம் பெறமுடியும். இறைவனை அடைந்து பரிபூரணமான உள்ள சுகம் பெற இயலாது.
உள்ள சுகம் பெறும் வழிமுறை இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபடுவதே ஆத்ம திருப்தியும் ஆத்மா திருப்தியும் அடைய வழியாகும்.
புராணக் கதைகளையும், இதிகாசக் கதைகளையும் அறிவைப் பயன்படுத்தி, உணரும் போது, அர்த்தங்கள் ஆயிரம் இருப்பதனை உணரலாம்.
அறியாத தகவல்கள் அறிந்தேன் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1