மனிதனின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமாக நட்பு என்ற
ஒன்று இருக்கும். இது பாகுபாடு இல்லாமல், காரண காரியமில்லாமல்
பிடித்தம் ஏற்பட்டு, நட்பாய் மலர்கிறது!
உறவுகள் அற்றவர்கள் என்ற வலி, வேதனையில் இருந்து மறதி கொடுப்பது
நட்பு தான் என்றாலும், மிகுந்த வலியை வேதனையைத் தருவதும் அதே நட்பு
தான்.
ஒரு மனிதனுக்கு அதிக வலியை தரக்கூடியது எது எனில்
"நம்மிடம் பிரியமாக ,அன்பாக நடந்து கொண்டவர்கள் ஏதோ ஒரு
எதிர்பாரத சூழலில் தனது ஸ்டேட்டஸ் (பொருளாதார நிலை,தகுதி நிலை )
மாறியவுடன் தனக்கு எதிரே வரும்போது கண்டுகொள்ளாமல் யாரோ
செல்வதுபோல அலட்சியமாக செல்லும்போது தரும் வலியானது மிக
கொடுமையானது "
இது உறவுகளிடமிருந்தும் ,நண்பர்களிடமிருந்தும் இது போன்ற
அலட்சியங்கள் நிகழ்வதுண்டு.
நட்பு என்னும் நட்பூ உதிர்ந்த மலராகிவிட்டது!

இதில் உறவினர்களின் அலட்சியத்தை கூட ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் நட்பாய் பழகியவரிடம் இருந்து வரும்போது மிகவும் தாங்கிக்
கொள்ள முடியாத வலியாக மனதை பாதிக்கிறது.
நான் நட்பே தவறு எனும் கருத்துக்கு வரவில்லை.
நாம் பகவான் கிருஷ்ணருக்கும் ,குசேலருக்கும் உள்ள நட்பை பற்றி
படித்தவர்கள்.
ஆனால் இன்றைய பொருளாதாய அவசர உலகில் எல்லாமே வேஷமாகி
கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் நம் கூடவே நட்பாய் இருந்துகொண்டு நமது வளர்ச்சி கண்டு
பொறாமையால் வெம்பி வதங்கி நமக்கு எதிராக நடக்கும் அத்தனை
பிரச்சினைக்கும் காரணமாக அவர்களே இருப்பார்கள்.
எனவே வள்ளுவ பெருந்தகை கூறி இருப்பர்
"கேள்போலும் பகைவர்களை எண்ணற்க வால் போலும் நண்பர் தொடர்பு "
என்பார்.
அதாவது எதிரியை கூட அடையாளம் கண்டுவிடலாம்
நண்பனாக இருந்துகொண்டே தீங்கு செய்பவர்களை அடையாளம் காண
முடியாது.
எனவே அவரே நண்பரை தேர்ந்தெடுக்கும் வழிமுறையை தருகிறார்.
"தேறான் தெளிவும் தெளிந்தகண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் "
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கூட நண்பனாக இருந்து எதிரியாக
மாறியவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆதலால் ஒருவனை உடனடியாக நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது
என்கிறார்.
தேரான் தெளிவும் அதாவது ஒருவனை நண்பனாக ஏற்றுக்கொள்வதற்கு
முன் அவனை நமது நண்பனாக ஏற்றுக்கொள்ளலாமா?
கூடாதா? என ஆராய்சி செய்ய சொல்லியிருக்கிறார்.
எப்படி ஆராய்சி செய்வது "அவன் நாம் இல்லாதபோதும் நம்மை பற்றி என்ன
பேசுகிறான்,துன்பமான வேலைகளில் அவன் எப்படி நம்மிடம்
நடந்துகொள்கிறான்
சிந்தனையும்,செயலும் நம்மோடு ஒத்து போகிறதா ?.....
இது போன்ற ஆராயச்சியில் சில மாதங்கள் ஈடுபட்டு அதற்கு பிறகு
நண்பனாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தெளிந்தகண் ஐயுறவும் இவ்வாறு ஆராய்ச்சி செய்து நண்பனாக
ஏற்றுக்கொண்ட பின் அவனைப்பற்றி யார் எது சொன்னாலும் ,தானும்
அவனை எந்த சூழ்நிலையிலும் சந்தேகப்பட கூடாது.
அவ்வாறு சந்தேகப்படின் அது தீரா இடும்பை தரும் என்கிறார்.
இடும்பை என்றால் துன்பம் ஆகும்.தீரா இடும்பை என்பது தீர்க்க முடியாத
துன்பத்தில் போய் முடியும் என அழகாக எக்காலத்திற்கும் பொருந்தும்
உண்மையை கூறியிருப்பார்.
ஒரு நண்பனை தேர்வு செய்வதில் வள்ளுவர் கூறும் வழிமுறையில்
தேடினால் நட்பு பொய்யாக மாற வாய்ப்பு இல்லை.
ஆனால் இன்று நாம் நட்பை தேட அவ்வளவு பொறுமை
எடுத்துக்கொள்வதில்லை.
காலையிலே பஸ்ஸில் பார்த்தவுடன் பேசியவுடன்,உடன்
பணியாற்றுபவர்களையெல்லாம் சோதித்து பார்க்க நேரமில்லாமல்
நட்பாய் ஏற்றுக் கொள்கின்றோம். ஏற்றுக்கொள்வதால் இதுபோன்ற
பாதிப்புகள் வருகிறது.
உறவாக இருந்தாலும் ,நட்பாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இல்லாதபோது,
பரஸ்பர அன்பாக இருக்கும்போது அதனால் ஏற்படும் வலியிலிருந்து
விடுபடலாம்.
உறவுநிலை பற்றிய ஒரு பாடலில் நமது கவிஞரும்
"பானையிலே சோறு இருந்தா பூனைகளுக்கும் சொந்தமடா
சோதனையை பங்கு போட்டால் சொந்தமில்லை பந்தமில்லை "என்கிறார்.
இந்த வரிக்குள்ளே உறவுநிலைகளின் தன்மையைப்பற்றி அழகாக கவிஞர்
கையாண்டிருப்பார்.
எனவே ஒரு மனிதன் உறவாலும்,நட்பாலும் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து
துவண்டு விடாமல் நம்மையே நமக்கு நண்பனாக கொண்டு தட்டி
எழுப்பி நிமிர வேண்டும்.
அதற்கான மனப்பயிற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் நமது மனதே நமக்கு எதிராக மாறி நம்மை
தாழ்த்தும்.அதாவது பிறரோடு தம்மை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை
கொண்டு சோர்வடைய முயலும்,
நம்மால் எதுவும் செய்ய இயலாது என தாழ்வுகொள்ள வைக்கும்.
இது போன்ற தருணங்களில் மனதின் போக்குக்கு விட்டுவிடாமல்
நம்மை நாமே தட்டி கொடுத்து எழுந்து நிற்க,
உயர்ந்து நிற்க முயல வேண்டும்.
இதற்கு செல்ப் மோட்டிவேட் (சுய தேற்றுதல் அல்லது ஆர்வமூட்டுதல்)
அவசியம் ஆகும்.
இதற்கு தன்னம்பிக்கையூட்டும் நூல்களை படித்தல்,தியானம் ,யோகா போன்ற
பயிற்சி செய்தல் இது போன்ற பயிற்சிகளை நம் அன்றாட செயல்களோடு
சேர்த்து பயிற்சி எடுக்க முயலவேண்டும்.
இந்த உலகில் தன்னலமில்லாத, எதிர்பார்ப்பில்லாத,கலப்பிடம் இல்லாத
ஒரே உறவு தாயன்பு ஆகும்.
ஏனைய உறவிலும் ,நட்பிலும் காலத்திற்கேற்ப கலப்படம் அதிகம் என்பதே
எனது கருத்து
.

130 பதிவுகள் இன்றோடு.
பதிவுலகில் 30 நாட்கள்!
ஆம். ஒரு மாதம் முடிந்துவிட்டது.
பயணங்கள் தொடர்கிறது.....
பதிவுலகில் 30 நாட்கள்!
ஆம். ஒரு மாதம் முடிந்துவிட்டது.
பயணங்கள் தொடர்கிறது.....
அருமை
ReplyDeleteநன்றி சகோதரரே!
Deleteநிறைய விடயங்கள் அருமையான கருத்துகள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1
உறவிலும் ,நட்பிலும் காலத்திற்கேற்ப கலப்படம் அதிகம் என்பதே
ReplyDeleteஎனது கருத்து----தங்கள் கருத்து சரியானதே......
நன்றி நண்பரே!
Delete