கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலை கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக்கீரை என்றும் கூறுவர். 
இதன் பிறப்பிடம் இந்தியா தான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதன் பிறப்பிடம் இந்தியா தான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
* இந்தக் கீரையானது இமயமலைச்சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும்.
* சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும் இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம்
கீரை வகையைச் சார்ந்தது.
* சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டடமின்'ஈ' சத்தும், அதிகப்படியான தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர்
மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.
* புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒரு வித சத்து இக்கீரையில் இருக்கிறது. இக்கீரை
உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது.
* சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.
பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் அழகுக்கூடும்.
* மூச்சிரைப்பு நோயான ஆஸ்தும்£வைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச்சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன்
சேர்த்துக் கொள்வார்கள். நீரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரையாகும்.
இந்த அரிய வகை கீரையின் மகத்துவத்தை அறிந்தும் பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்!
இங்கு கனடாவில் இதனை நாம் பரவலாக பயன்படுத்தினாலும் இன்றுதான் இதன் பயன் பற்றி அறிந்து கொண்டேன் விபரமாக .உண்மையில் உங்கள் இந்த முயற்சி பாராட்டதக்கது.மொழிமாற்றம் செய்யும் வசதியும் கூடவே இணைத்திருப்பது அருமை .பலருக்கும் பயன்தரக்கூடிய ஒரு முயற்சி இது பாராட்டுக்கள் .தளராமல் தொடருங்கள் .
ReplyDeleteதங்களின் அன்பார்ந்த கருத்துரை கண்டு மனமகிழ்ந்தேன். தளத்தில் இணைத்திருந்தால், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். தொடர்ந்து தளத்திற்கு வருகை தாருங்கள் நண்பரே!
DeleteThe image shown here looks like Spinach not Lettuce
ReplyDelete