வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பது இன்பம் தரக்கூடியது. வீட்டையும் அழகாக உயர்த்திக்காட்டும். வீட்டில் பல்வேறு பகுதிகளிலும் செடிகளை வளர்க்கலாம். குறிப்பிட்ட இடத்தில் தோட்டம் அமைத்தாலும் வீட்டின் உட்புறங்கள், வரவேற்பு அறைகள், பால்கனிகள், மாடிப்படிகள் போன்ற இடங்களில் செடிகளை வளர்ப்பது வீட்டிற்கு அழகூட்டுவதாக அமையும்.
இட வசதி
வீட்டுத்தோட்டத்தின் பயன்பாடு என்பது அளப்பரியது. வீட்டில் உள்ள எல்லோரையும் கவர்ந்திழுப்பது. பலவகைகளிலும் பயன் தரக்கூடியது. தற்போது வீட்டுத்தோட்டம் அமைப்பதை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். செடிகள், கொடிகள், மரங்கள் என எல்லா வகைகளையும் ஒரு சிறு செயல்பாட்டுக்குள் ஒருங்கிணைத்து சிறப்பாக வளர்த்திட முடியும். அதற்கு சரியான திட்டமிடலும், இட வசதியும் தேவை.
அதற்காக இடவசதி அதிகமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரைப்பகுதியில் மட்டுமில்லாமல் வீட்டின் மாடிப்பகுதியிலும் தோட்டத்தை அமைக்கலாம். எங்கு அமைத்தாலும் பயனுள்ள செடிகளை பயி ரிடுகிறோமா? என்பது தான் முக்கியம். வீட்டிற்கு பயன்பாட்டிற்கான செடிகளாக இருக்க வேண்டியது அவசியமானது. கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் என்று வீட்டுத்தோட்டத்தின் விளைப்பொருட்கள் இருக்க வேண்டும்.
மூலிகை செடிகள்
காய்கறிச் செடிகளை தேர்வு செய்யும் முன் அவை அங்கு வளருமா? என்று முன்பே தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் போக சில மூலிகை செடிகளை வளர்ப்பது சில உடனடித் தேவைகளுக்கு பயன்படும். சிறு சிறு செடிகளில் அதிக அளவிலான சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மையும் இருப்பதை நம் முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி அறிவோம்.
அந்தவகையில் அவற்றை பயன்படுத்தி கொள்வது நல்லது. நிறைய மூலிகை செடிகள் அதிக அளவு சிரத்தை கொடுக்காமலேயே சிறப்பாக வளரும் தன்மை உடையது. இவைகளை வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். இந்த மாதிரியான மூலிகைச்செடிகளில் நிறைய நன்மைகள் உள்ளன.
வீட்டின் வாசல், பால்கனிகள், ஜன்னல்கள் போன்ற இடங்களில் இந்த செடிகளை தொட்டிகளிலோ அல்லது வேறு வகையான பயிரிடல் மூலமாகவோ முறையாக அமைத்து கொள்ளலாம். அந்தவகையில் வீட்டின் கட்டுமானத்தின்போதே இந்த செடிகளை வளர்ப்பதற்கு ஏதுவான சரியான கட்டுமான அமைவுகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
அருமை
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநன்றி நண்பரே
Deleteஅழகிய படங்களுடன் விளக்கவுரைகள் நன்று நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 1
தங்கள் வருகையுன் அழகிய கருத்துரைக்கும் நன்றி சகோ!
Deleteதங்கள் வருகையுன் அழகிய கருத்துரைக்கும் நன்றி சகோ!
Delete