நாம் அவசரமாக எங்காவது செல்லும்போது போனில் சார்ஜர் இல்லாவிடில் உடனே ஒரு சார்ஜரை எடுத்து பையில்
போட்டுக் கொண்டு போகும் இடத்தில் சார்ஜ் நிரப்பி கொள்ளலாம் என நினைத்து கொள்வோம்.அனால் திருதிஷ்டவசமாக நமக்கு தென்பட்ட இடங்களில் எல்லாம் சார்ஜ் ஏற்றும் வசதிகள் இருப்பதில்லை.இதற்காகவே நோமட் நிறுவனத்தினர் பணப்பையை சார்ஜராக உபயோகிக்கும் நுட்பத்தினை அறிமுகபடுத்தியுள்ளனர்.
95mm உயரமும் 125mm அகலமும் 25mm தடிமனும் மட்டுமே கொண்டிருப்பதால் மிகவும் எளிதான எடையைஉடைய ஒரு மெல்லிய சிறிதான பணப்பையில் சார்ஜினை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது . இதுவே ஒரு முழு ஐபோன் 6s ஐ முழுவதுமாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாக உள்ளது.
பணப்பையில் உள்ள சார்ஜ் தீர்ந்து விட்டால் அதனை எந்த usb சார்ஜரினைக் கொண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதிலுள்ள பிளாஷிங் இண்டிகேட்டர் லைட்டுகள் பணப்பையில் எவ்வளவு சார்ஜுகள் இருக்கிறது என்பதை தெரியபடுத்திக் கொண்டே இருக்கும் . இந்த பணப்பை ஒரு பணத்தை சேமிக்கும் பையாக மட்டுமே செயல்படாமல் சார்ஜினை சேமிக்கும் நிலையமாகவும் செயல்படுவது சிறப்பே ! ஒரே நேரத்தில் அனைத்து சாதனங்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வசதிகள் கொண்ட நவீன சாதனங்கள் இருப்பினும் இந்த பணப்பை போன்ற சார்ஜர் பயனர்களின் அவசர காலங்களில் கண்டிப்பாக கை கொடுக்கக் கூடியதாக அமையும் . ஐபோன்களுக்கு சார்ஜ் ஏற்றும் இந்த பணப்பையின் முன் உத்தரவுகளை $80க்கு பெறலாம்.
Thanks to www.onlineudhayan.com
Nic
ReplyDelete