Breaking News
Loading...
Wednesday, January 13, 2016

அமர்ந்து சாப்பிடுவது ஏன்.??

Wednesday, January 13, 2016
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.??
இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....தெரியாதோர்க்கு, தமிழக 
கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. 
இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய 
தேவை போல் ஆகிவிட்டது.
 விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் 
சௌகரியம் என ஆகிவிட்டது ... .
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் 
கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!! 
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட 
வேண்டும். 
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் 
வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. 
எனவே ஜீரணம் தாமதமாகிறது. 
காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, 
சாப்பாடு ஜீரணமாகிவிடும். 
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் 
பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக 
நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி 
வலியுறுத்த பட்டது.

1 comments:

  1. உண்மைதான் நண்பரே நாகரீகம் என்ற பெயரில் மனிதன் பலவற்றை இழந்து விட்டான் நல்ல பதிவு

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer