Breaking News
Loading...
Sunday, January 10, 2016

மாத்திரையிலிருந்து விடுதலை....

Sunday, January 10, 2016


 நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் மருத்துவத்துக்கும் சம்மந்தம் இருக்கா?

 இருக்குனு அனைவரும் அறிந்ததே.

 நோய் வந்த பின் அதை சரி செய்வது என்பதை விட நல்ல சாப்பாடு சாப்பிட்டால் நோய் வராமலே தடுக்கலாம். 

இது வருமுன் காப்போம் என்ற சமாசாரம் .

சாப்பிடும் உணவுகளால் மனிதனின் குணம் மற்றும் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய காரணியாக விளங்குகின்றது என்பது அனைவரும் அறிந்தது. அது எப்படின்னு தான் தெரியாது என்பவர்களுக்காகவே ....

உடல் ஆரோக்கியமா இருக்கணும்னா  உடலில் உள்ள வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். 

அதிக ஆசை, கோபம், possessiveness பொச்சசிவ்னஸ் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்.

அமைதியாக இருப்பவர்கள் (அதாவது emotional attitude எமோசனை கட்டுபட்டில் வைத்திருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்). 

அதுவே கோபக்காரர்கள் (ஆதாவது எமோசனை கட்டுபடுத்த முடியாதவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது)

சாப்பாட்டு ஐட்டங்களை பொருத்து கூட குணம் மாறுபடும். 

உப்பு , காரம், மசாலா, எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு கோபம் அதிகமா வரும். 

காரனம் இவை உடம்பில் சூட்டை கிளப்பும் பொருட்கள்.

மாமிசம், வறுத்த பொறித்த உணவு பொருட்களுக்கு கோபத்தை தூண்டும் குணம் உண்டு.

 முடிந்தால் மட்டுமே இவற்றை குறைத்து கொள்ளுங்கள்.

ஆனால் உங்களுடைய உணவுகளில் நீங்கள் எதை குறைத்தாலும் குறைக்காவிட்டாலும் நிச்சயம் காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள், அது உங்கள் கோப குணத்தை தூண்டாது.

என்னால் எதையும் நிறுத்த முடியாது (சிகரெட், மதுபானம் உட்பட). எனக்கு இந்தப் பொருட்கள் தான் அதிகம் தேவை... அதை விடு / குறைத்துக் கொள் என்று  சொன்னா எப்படி.....

சூட்டை கிளப்ப கூடிய உணவுகளை முடிந்தால் மட்டுமே குறையுங்கள். 

ஆனால் அதிக காய்கறிகள், பழங்களை யும் சாப்பிடுங்கள் என்று தான் சொல்லுகிறேன். 

அவை உடல் சூட்டை தனிக்க கூடிய பொருட்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்துங்கள்.

முக்கியமான ஒன்று மாமிசம், மது, காரம், சிகரேட் போன்ற உடல்சூட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை நீங்கள் ஆரோக்கியத்துக்கு பயந்து விட கூடாது. ஏதோ ஒரு பயத்தில் அதை நிறுத்தி பிறகு அதை நினைத்து ஏங்குவது சாப்பிடுவதை விட தீங்கானது. ஏக்கம் அதிக சூட்டை கிளப்பும். 

ஏ.கா சிகரெட் பத்தி சொல்லரேன். அது கெடுதல்னு அடிக்கறவங்க அனைவருக்கும் தெரியும். 

சிலர் ஒரு நாள் நிறுத்திருவாங்க,

 ஆனா அதை நினைச்சே ஏங்கிட்டு இருப்பாங்க. 

அதை தான் நான் சொன்னேன், அப்படி ஏங்குவது சிகரெட்டை விட கெடுதல்.

 அதுக்கு ஒரு தம் பத்தவச்சுகரது எவ்வளவோ தேவலை. 

இப்படியே எந்த தீய பழக்கத்திலிருந்தும் விடுபடாம இருக்கிறது ஆரோக்கியத்துக்கு சவால் விடற விஷயம்.

மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேளுங்க.  ஆலோசனை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக விடற வழியை பாருங்க.  

எப்பொழுதும் எரிச்சல் படாம, உணர்ச்சி வசப்படாம ரிலாக்ஸா இருக்க ஆரம்பிச்சிட்டா பழக்கம் மாறிப் போகும்.



தர்பூசணி பழச்சாறு சாப்பிட உடல் வெப்பம் குறையும்.

உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தண்ணீர் அருந்துங்கள். சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து பின்பு தண்ணீர் அருந்துங்கள். நிதானமாக வாயில் தம்ளரை வைத்து தண்ணீரை அருந்துங்கள். ( அறுசுவையும் இருக்குமாறு உங்களின் உணவுகளை அமையுங்கள் )

சாப்பிடும் உணவை அவசர அவசரமாக உண்ணாதீர்கள்!

முதல் கவளம் நன்றாக மென்று உமிழ் நீரில் கலந்து அதனை ருசித்து சாப்பிடுங்கள். அதன்பின்னர், வழக்கம் போல நிதானித்து சாப்பிடுங்கள்.

முதலில் சிறிது ஸ்வீட் சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். ஜீரண நீர்கள் தயாராய் இருக்கும்... நன்கு ருசித்து, மென்று சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்கள் விரைவில் ஜீரண நீரால் கிரஹிக்கப்படும் போது, உங்களுக்கு உங்களை அறியாமலே திருப்தியும் ரிலாக்சா இருப்பதை உணர்வீர்கள்.

ரிலாக்சாகிட்ட நீங்க எந்த விஷயத்தையும் இதே போல நிதானித்து யோசித்து செயல்பட, பேச பழகிக்கோங்க....

உங்க டென்ஷன் குறைந்துவிடும்.... 

நோய்க்கும் உங்களுக்கும் இடைவெளி வர ஆரம்பித்து விடும்.

சாப்பிடும் மருந்துகளில் இருந்து விடுதலையும் கிடைக்க வழிகிடைத்திடும்....

மீண்டும் சந்திப்போம்....

4 comments:

  1. அருமை நண்பரே மனித வாழ்வுக்கு அவசியம் தேவையான விடயங்கள் நான் சேவ் செய்து கொள்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஐடியா அய்யாசாமியின் அக்கப்போரான பதிவுகள் தொடரும் நண்பரே!

      Delete
  2. அருமையான தகவல் திரட்டு
    சிறந்த உளநல வழிகாட்டல்
    பயன் தரும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer