இன்றைய பதிவில் ஓசோன் தெரபியை பற்றி ஒரு சிறிய விளக்கம்.
நீங்கள் அவ்வப்பொழுது News paper ல் ஓசோன் படலம் (Ozone layer) பற்றி படித்திருப்பீர்கள்.ஆனால் அதைப்பற்றிய புரிதல் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஓசோன் படலம் என்பது நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் படர்ந்துள்ள O3 எனும் வாயுவாகும்.சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக பூமியில் பட்டால் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது.
இடையில் ஓசோன் படலம் இருப்பதால் அது சூரியனில் இருந்து வரும் தேவையற்ற ஒளிக்கதிர் வீச்சுகளை வடிகட்டி நாம் உயிர் வாழ்வதற்கு ஏதுவான கதிர்வீச்சை மட்டும் அளிக்கிறது..
இப்போது உலகம் முழுதும் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் இந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதாகவும் அதனால் புவி வெப்பம் அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும் பிற்காலத்தில் இது பெரும் அபாயத்தில் முடியுமென்றும் வல்லுனர்கள் எச்சரிப்பதாக நாளிதல்களில் படித்திருப்பீர்கள்..
இந்த ஓசோன் எப்படி நமக்கு பயன்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.மருத்துவரீதியாக இதை நான் விளக்கினால் உங்களுக்கு புரியாது.அதனால் எளிமையாக விளக்குகிறேன்.
வானத்தில் வெகு தூரத்தில் படர்ந்திருக்கும் இந்த ஓசோனை ஓசோன் Machine மூலம் அதே ஓசோன் வாயுவை உருவாக்குகிறோம்..அந்த ஓசோன் வாயுவை நாம் பாதுகாத்து வைக்க முடியாது.உடனடியாக அதை பயன்படுத்தியாக வேண்டும்.இல்லாவிட்டால் ஓசோன் மூலக்கூறுகள் பிரிந்து அதன் ஓசோன் Property ஐ இழந்துவிடும்.
இந்த ஓசோன் வாயுவானது மனிதர்களுக்கு ஏற்படும் பல குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்தும் தன்மையுடையது..
நோயின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு முறைகளில் அதை பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக ஓசோன் வாயுவை மூட்டுகளில் செலுத்தினால் உடனடியாக மூட்டு வலிகள் குறையும்.ஆறாத புண்களை விரைவில் ஆற்றும்.ஆறாத புண்களால் அறுவை சிகிச்சை செய்து கால் விரலையோ கை விரலையோ நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பலரின் நோய்களை குணப்படுத்தும்..
பல்வேறு வகையான தோல் நோய்களை சோரியாசிஸ் உட்பட அற்புதமாக குணப்படுத்தும்.கேன்சர் நோயாளிகளுக்கு இப்போது மும்பையில் பரவலாக ஓசோனை பயன்படுத்துகிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீர்க்கட்டிகள்,அதனால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைகள் விரைவில் நிவர்த்தியாகும். சோதனைக் குழாய் சிகிச்சை தோல்வியில் முடிந்த நிறைய தம்பதிகள் ஓசோன் சிகிச்சையில் குழந்தைப் பேறு அடைந்திருக்கிறார்கள்...
இந்த தெரபியில் ஓசோன் வாயுவைத்தான் மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறோம்..ஆனால் நோயின் பெயர் மற்றும் தன்மைக்கு ஏற்ப applications வெவ்வேறு முறைகளில் பயன்படுத்துவோம்..
உதாரணமாக அனைத்து வகையான தோல் நோய்கள்,கேன்சர்,மைக்ரைன் தலைவலி,Convulsion எனப்படும் வலிப்பு நோய்,சில மூளை மற்றும் நரம்புக்கோளாறுகள் போன்ற நோய்களுக்கு ஓசோன் வாயுவை Drips மூலம் உடலில் செலுத்துவோம்..
இவ்வாறு ஓசோனை உடலில் செலுத்தும்போது இரத்தம் உடனடியாக சுத்திகரிக்கப்பட்டு மேற்கண்ட நோய்கள் குணமாகின்றன..நோயின் தீவிரத்தைப் பொறுத்து இந்தமுறையை அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருக்கும்..
முழங்கால் மற்றும் மூட்டுவலிகளுக்கு ஓசோன் வாயுவை ஊசி மூலம் மூட்டுகளில் செலுத்தினால் மூட்டு வலிகள் குறையும்..மும்பையில் எலும்பு சிறப்பு (Ortho doctors) மருத்துவர்கள் முழங்கால் மூட்டு வலிகளுக்கு இந்த ஓசோனை பயன்படுத்துகிறார்கள்..
சில குறிப்பிட்ட குடல் சம்பந்தமான நோய்களுக்கு ஆசன வாய் மூலம் ஓசோனை செலுத்தினால் நிறைய குடல் சம்பந்தமான நோய்கள் தீரும்..
மேலும் அதிக அளவில் Concentrate செய்யப்பட்ட சில ஓசோன் Oil களை தோல்வியாதிகளின் மேல் தடவலாம்..மேலும் ஓசோன் Oil ஐ தலையில் தடவினால் பொடுகு நீங்கி நல்ல முடி வளர்ச்சி ஏற்படும்.பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மிகச்சிறிய ட்யூப் மூலம் ஓசோன் வாயுவை செலுத்தும்போது பல அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன..
தீர்க்க முடியாத பல நோய்களையும், மேலும் குழந்தையில்லாதவர்களுக்கு தாய்மைப் பேறு அடையவும் ஓசோன் உதவுகிறது..
குழந்தையின்மைக்கு ஓசோன் தெரபி ஒரு வரப்பிரசாதமாகும்..அதைப்பற்றிய நீண்ட பதிவு விரைவில் வெளிவரும்..
நண்பர்களே! இந்த ஓசோன் தெரபியை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என பல மருத்துவர்களுக்கே தெரியாது..அவை அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்...
By
Dr. SIVARAMAN,
SHIVARAM HOSPITAL,
178 LAXMIPURAM,
PALANI-624601
PH:9791774700 / 9443245397
ஆச்சர்யமான விடயம் நண்பரே.... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமாற்றுமருத்துவ முறைகள் தொடர்ந்து வெளிவரும் நண்பரே!
Deleteஹோமியோபதி, வேலை வாய்ப்பு, குழந்தைகள் தொடர்பான பதிவுகளும் இனி வரவிருக்கின்றன நண்பரே!
ஓசோன் தெரபி பற்றி இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள் அய்யா!
Delete