ஜோதிடமும் ஆன்மீகமும் - 3



‘’ பரத கண்டே – ஜம்பத்தி வே ‘’ என்று புரோகிதர்கள் மந்திரப் புரோகிதம் செய்யும் போது கூறுவார்கள்.
முக்கடலும் சூழ்ந்த கன்னியாகுமரி முதல் கொங்கு நாடு வரை ஒரு தீபகற்பமாகக் காட்சியளித்தது. தான் வசிக்குமிடத்தையும் அதில் வாழும் மக்களையும் இறைவனிடம் வேண்டுவதனை ஒரு மரபாக கொண்டுவந்தனர் நமது ஆன்றோர்கள்
.

ஜம்பு என்பது நாவல் மரம். நாவல் மரத்தடியில் உள்ள சிவலிங்கத்திற்கு யானை நீர்வார்த்து, (அபிடேகம்) செய்து வழிபட்ட இடத்திற்கு, திருவானைக்காவல் என்னும் பெயரிட்டு, இறைவனை மனமுருகி வேண்டுவோர் எவராக இருந்தாலும், மரியாதை அளிக்கும் மரபும் உருவாக்கித் தந்தனர் நமது ஆன்றோர். மேலும், ஜம்புலிங்கேஸ்வரர் எனும் திரு நாமமிட்டு, வழங்கியதையும் அறியலாம். பஞ்ச பூதங்களில், நீர்தத்துவமாக வழிபடப்படும் தலமாகுமிது.
ஆறுவிதமான ஆதாரங்கள் கொண்டது ஆறறிவு. புலன்களின் மூலமாக, ஐந்து அறிவும், பகுத்து உணரும் தன்மை கொண்ட ஞான அறிவும் சேர்ந்து மனிதர்களுக்கு ஆறு அறிவானது.
இந்த ஆறுவிதமான அறிவுகளும் நன்மை, தீமை என இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 12 வித சுபாவங்களாக மாறுகிறது. இதனடிப்படையில் உயிரை இயக்க – மொழியில் உயிர் எழுத்துக்களாக 12 நிர்ணயம் செய்யப்பட்டது. இவையே 12 ராசிகளாகவும் பாவிக்கப்பட்டன. குணசுபாவங்கள் 18 விதமாக அமைந்து, 12 வித பாவக பலன்களுடன் இணைந்து செயல்படுவதாய் உணர்ந்தனர்.
இந்த 18 குணசுபாவங்கள் – மெய்யெழுத்துக்களாகவும் பாவித்தனர்,
நமது உடலின் 9 துவாரங்கள் 9 கிரகங்களுடன் தொடர்புடையதாகவும் கருதினர். உடலின் இயக்கத்திற்கு தச வாயுக்கள் உதவுவதாகவும் அறிந்தனர். இதனையும் மெய்யியலில் ஆன்மீகத்தில் தனியாக அவதாரமாக தொடர்பு படுத்தினர்.
பிராணவாயுதான் பரமாத்மாவாக கருத்தில் கொண்டு, அவை தசவாயுக்களாய் பரிணமித்து (10 அவதாரங்கள் கொண்ட திருமாலின் தசவதாரத்துடன் ) உயிர் வாழ்தலுக்கு பங்காற்றுவதை அறிந்தனர்.

மனித வாழ்க்கையில் அபூர்வமான செயல்களாற்ற அறிவு பயன்படுகிறது.
அழகிய மயிலை தன் வாகனமாகக் கொண்டவர் முருகர். மயில் அறியாமையின் சின்னம். அறியாமையும் ஒரு வித மாயை. அது பல வண்ணங்கள் கொண்டது.

அது எண்ணங்களாக பரிணமித்து அழகிய ஆட்டமிடும். எப்பொழுது எங்கு செல்லும்.. எப்படியெல்லாம் ஆட்டமிடும் என்பது அறியாது.
அந்த மயிலின் மீது அறியாமையால் உலகெங்கும் சுற்றினாலும், அறியாமை ஆட்சி செய்யும் போது, அவன் ஆண்டியாகத்தான் இருக்க இயலும் என்பதனையும் தத்துவார்த்தமாக விளக்கவும் விளங்கவும் செய்தனர் சித்தர் பெருமக்கள்
.

முருகன் அறிவுத் தத்துவம். அறியாமையை அடக்கியாளும் பொழுது அவன் உலகின் பற்றின் மீதிருக்கும் அறியாமையை அடக்கிஆளும் பொழுது அவன் ஆத்மத் திருப்தி அடைவான். பரிபூரணமான அறிவு பெற்ற ஞானியாவான் என்ற தத்துவத்தையும் விளங்கச் செய்தனர்.
அறிவு விருத்தி கற்ற கல்வியாலும் ஏற்படும். அங்கும் இடக்கு ஏற்படும். அதனை உணர்த்திடும் சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளனர் நமது ஆன்றோர் அவ்வையின் வாயிலாக.

அவ்வை தான் கற்ற கல்வியை நினைத்து பெருமிதம் அடைந்த போது, நாவல் மரத்தின் மீதமர்ந்த இடையனாக முருகன் இருந்து வினவிய வினா – சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
கற்றது கையளவு… கல்லாதது கடலளவு என அவ்வை சொல்லியதாக வரலாறு… அப்படியானால், மாயை என்னும் கடலை… பக்தி, மந்திரம், ஆலயம் செல்லுதல், தான தர்மம் செய்தல் என செய்யும் செயலால் மனிதன் என்ன ஞானியாகிவிடுவானா? என்ன?
நிறைய விடயங்கள் அறிந்தேன் நண்பரே நன்றி
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துகள்
தமிழ் மணம் 1
என் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் அன்பரே!
Delete